ஆளுங்கட்சிக்கு இணையான அந்த ‘2 பலம்’.. எடப்பாடிக்கு பிளஸ்ஸே ‘ரிஸ்க்’ தான்.. கணிக்கும் குபேந்திரன்!
பாஜக கூட்டணியால் எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு கிழக்கில் சிக்கல் ஏற்படுமா என அலசுகிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் களமிறங்கிய அதிமுக, இரட்டை இலை சின்னத்தோடு தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. திமுகவுக்கு டஃப் ஃபைட் கொடுத்து பலத்தை நிரூபிப்பாரா எடப்பாடி பழனிசாமி என்பது பற்றி நமது ஒன் இந்தியா தமிழுடன் அலசுகிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.
ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் கே.எஸ்.தென்னரசுவின் பலம், அதிமுகவின் பலவீனங்கள், இந்த இடைத்தேர்தலில் அக்கட்சி சந்திக்கும் சவால்கள் பற்றி விரிவாக விவாதித்துள்ளார் பத்திரிகையாளர் குபேந்திரன்.
அதிமுக கூட்டணியில் நிலவி வந்த சிக்கல்கள், ஓபிஎஸ் மோதல் ஆகியவை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி கொடுக்குமா?

அதிமுக வேட்பாளரின் பலம்
1. 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதால் தொகுதியில் பரிச்சயமான முகம்.
2. பொதுமக்களால் எளிதில் அணுகக்கூடியவர் என்ற பெயர் தொகுதிக்குள் நிலவுவதால் உள்ள பலம்.
3. தொகுதியில் செயல்படும் நிறைய தொழிற்சங்கங்களின் தலைவராக இருப்பது.
4. சின்னம் கிடைக்குமா கிடைக்காதா என்ற பெரிய விவாதம் நிலவிய நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே தென்னரசு போட்டியிடுவது.
5. அதிமுக வாக்குகளை பிரித்துக் கொண்டிருந்த அமமுக கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகியது.

அதிமுக பலவீனங்கள்
1. இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகும், தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக வரும் கருத்து.
2. ஓபிஎஸ் பிளவு காரணமாக அதிமுக எனும் கட்சி பலவீனமடைந்திருக்கிறது என்ற விமர்சனம்.
3. பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை முறிக்கப் போகிறார் என்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டு மீண்டும் கூட்டணி அமைத்தது.
4. திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், பாமக போன்ற கட்சிகள் அதிமுக அணியை விட்டு வெளியேறியிருப்பது கூட்டணிக்கு ஏற்படுத்தி இருக்கும் பலவீனம்.

ரிஸ்க் ஸ்ட்ரேட்டஜி
அதிமுகவின் SWOT பற்றி விவாதிக்கும் பத்திரிகையாளர் குபேந்திரன், "அதிமுக பிளவுபட்ட சூழலில் பரபரப்புக்கு மத்தியில் கடைசி நேரத்தில் கோர்ட் மூலமாக எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான உத்தரவு கிடைத்தது. இது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய வெற்றி. தனது வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் நான் போட்டியிடுவேன், எனது கூட்டணிக்கு யாருமே வரவில்லை என்றாலும் நான் களத்தில் நிற்பேன் என ரிஸ்க்கான முடிவை எடுத்ததும் எடப்பாடி பழனிசாமிக்கு பிளஸ். கட்சி, தேர்தல் என இரண்டிலும், தான் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் இறங்கியது என அதிமுகவுக்கு, எடப்பாடி பழனிசாமிக்கு இந்த களம் பெரிய பிளஸ்.

இடைத்தேர்லுக்கு பொருந்தாது
பரிச்சயமான முகம் தொகுதிக்கு தேவை என்ற வகையில் சரியான வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு. பெரிய சர்ச்சைகள் இல்லாத நபராகவே அவர் பார்க்கப்படுவதும் பிளஸ். அமமுக போட்டியில் இருந்து பின்வாங்கியதையெல்லாம் அதிமுக வேட்பாளருக்கு பிளஸ் என்று சொல்ல முடியாது. கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அமமுகவும் தேமுதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் ஆயிரத்து இருநூற்றுச் சொச்சம் தான். அங்கு தினகரனுக்கு வாக்கு வங்கி இல்லை. என்னதான் பலமான கூட்டணியின் வேட்பாளராக இருந்தாலும், கண்டிப்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான இடைவெளி பெரிதாகவே இருக்கும். என்னதான் கொங்கு மண்டலம் அதிமுகவுக்கு பலமான பகுதியாக இருந்தாலும், அதெல்லாம் இடைத்தேர்தலுக்கு பொருந்தவே பொருந்தாது.

ஆளுங்கட்சிக்கு இணையாக
ஈரோடு இடைத்தேர்தலைப் பொறுத்தவரை தேர்தல் பணிகளில் அதிமுக மந்தமாக இருப்பதாகச் சொல்லவே முடியாது. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரான கே.ஏ.செங்கோட்டையன் சுணக்கமின்றி பணியாற்றி வருகிறார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும் களமிறங்கி தேர்தல் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் முடிவுகளில் பெரிய வாக்கு வித்தியாசம் வரக்கூடும் என்றாலும், திமுக - அதிமுக இடையே தேர்தல் பணிகளில் பெரிய வித்தியாசமில்லை. பொருட்செலவிலும், பிரச்சார பலத்திலும் ஆளுங்கட்சியான திமுகவுக்கு இணையாகவே அதிமுக இருக்கிறது.

பிளவே இல்லை
ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிரிவு கட்சியின் பிளவு எனக் கருதமுடியாது. பிளவு என்றால் இருவருக்கும் கிட்டத்தட்ட சரிபாதி ஆதரவு, 50 - 50 என்ற நிலை இருக்க வேண்டும். ஆனால், அப்படியான நிலை இல்லை. ஓபிஎஸ்ஸால் ஈரோடு இடைத்தேர்தலில் பாதிப்பு என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். ஓபிஎஸ்ஸின் வலிமை, ஈரோடு கிழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேதாரப்படுத்தும் அளவுக்கு இல்லை. ஓபிஎஸ்ஸால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஓபிஎஸ், அதிமுகவிற்குள் பற்றிக்கொள்வதற்கு கொழுகொம்பு கிடைக்காதா என்றுதான் பார்க்கிறார்.

பாஜகவால் பாதிப்பு?
பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி உறுதியாக அறிவித்திருந்தால், ஈபிஎஸ்ஸை ஆதரிக்கலாம் என்ற மனச்சாய்வு சிறுபான்மையினர் மத்தியில் எழுந்திருக்கக்கூடும். அதனால் ஆயிரம், இரண்டாயிரம் வாக்குகள் கிடைத்திருக்கலாம். என்னதான் இப்போது விலகினாலும், எதிர்காலத்தில் ஈபிஎஸ் பாஜகவுடன் தான் இருப்பார் என அனைவருக்கும் தெரியும் என்பதால் அது கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது. சிறுபான்மையினர் அல்லாமல், மோடி - பாஜகவுக்கு எதிரானவர்கள், ஜி.எஸ்.டி போன்றவற்றால் தொழில் ரீதியான பாதிப்புகளைச் சந்தித்தவர்களின் வாக்குகள் பாஜக கூட்டணி காரணமாக எடப்பாடி தரப்புக்குச் செல்லாமல் வேண்டுமானால் போகலாம்.

கூட்டணி சிக்கல்கள்
பாமகவுக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரிய செல்வாக்கு இல்லை என்பதால், அவர்கள் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்காமல் விலகி இருப்பது பெரிய பலவீனம் இல்லை. மற்ற சிறிய கட்சிகளும் ஈரோடு கிழக்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவில் இல்லை. சாதி பார்த்து வாக்களிக்கும் நடைமுறை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதற்கு பெரிய உதாரணம் பாமக. அதனால், கூட்டணி கட்சிகளிடையேயான சிக்கலால் அதிமுகவுக்கு பெரிய பாதிப்பு வராது. அதிமுக அங்கு நம்பிக் களமிறங்குவது அதிமுக வாக்குகளையும், நடுநிலை வாக்குகளையும் தான்." எனத் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications