நொறுங்கிய நாம் தமிழர்! தினமும் சீமான் பிரச்சாரம் செய்தாரே! ஈரோடு கிழக்கில் தோல்விக்கு காரணமே இதுதான்
சென்னை: ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சியின் சரிவிற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்படி 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது. மொத்தமாக 43488 வாக்குகள் பெற்று திமுக முன்னிலை வகிக்கிறது. 9152 வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. 1974 வாக்குகள் இதுவரை நோட்டாவிற்கு விழுந்துள்ளன.

அதிமுக போட்டியிடாத நிலையில் நோட்டாவிற்கு கணிசமான வாக்குகள் சென்றுள்ளன. ஆனால் நாம் தமிழர் கடந்த முறை 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றது. இந்த முறை அதை விட குறைவான வாக்குகள் அல்லது அதே அளவு வாக்குகள் மட்டுமே பெறும் சூழல் உள்ளது.
ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சியின் சரிவிற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
1. நாம் தமிழர் கட்சியில் கடுமையான உட்கட்சி பூசல் உள்ளது. கட்சியில் சீமான் தவிர யாரும் வளர முடியவில்லை.. கருத்து சொல்ல முடியவில்லை என்ற புகார் உள்ளது.
2. சீமான் கட்சி நிர்வாகிகளை மதிப்பது இல்லை என்று புகார் உள்ளது. முக்கியமாக கட்சி நிர்வாகிகளின் குரல்களுக்கு செவி மடுப்பது இல்லை என்ற புகார் உள்ளது.
3. இதன் காரணமாக கட்சியில் இருந்து கடந்த 2-3 மாதங்களில் மட்டும் 1000 பேருக்கும் அதிகமானோர் வெளியேறி உள்ளனர்.
4. ஒரு கட்சிக்கு தலைவர் தாண்டி தேர்தலில் உழைப்பது அடிமட்ட தொண்டர்கள்தான். அவர்களில் பலர் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர்.
5. இதெல்லாம் போக பெரியார் பற்றி சீமான் பேசியது ரசிக்கும்படியாக இல்லை. அவர் தனது கொள்கையை தாண்டி வேறு திசையில் செல்வதாக புகார்கள் வைக்கப்படுகின்றன அவர் மீது. அதோடு தமிழ்நாட்டில் இப்போதும் பெரியார் பெரிய அரசியல் சக்தி என்பதை இந்த நாம் தமிழர் தோல்வி நிரூபித்து உள்ளது.
6. அந்த கட்சி சார்பாக சீமான் தினமும் பிரச்சாரம் செய்தார். ஆனாலும் கட்சி நிர்வாகிகள் அவர் போன பின் பணிகளை செய்யவில்லை.
7. நாம் தமிழருக்கு இப்போதும் வலுவான வார்டு நிர்வாகிகள், பூத் நிர்வாகிகள் இல்லை என்பதும் தோல்விக்கு முக்கிய காரணம்.
பெரியார் வழி வந்த கட்சிதான் அதிமுகவும் என்பதால்.. அதிமுகவினர் பெரியாரை பற்றி தவறாக பேசிய சீமானை புறக்கணித்து உள்ளனரோ என்ற விவாதம் எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் இடைத்தேர்தல் நடந்தது. அங்கே 65.72% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தலில் இங்கே 75 சதவிகிதம் வரை வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் கிட்டத்தட்ட இந்த முறை 10 சதவிகிதம் வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து பெரிய கட்சிகள் அடுத்தடுத்து விலகியதால் வாக்கு சதவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது. பாஜக இதில் போட்டியிடவில்லை. அதிமுக போட்டியிடவில்லை. அதேபோல் தேமுதிகவும் போட்டியிடவில்லை. காங்கிரசின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ. மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடந்துள்ளது.
அதிமுக புறக்கணிப்பு:
இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துவிட்டது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, வி.சி.சந்திரகுமார் (தி.மு.ககொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications