Erode- Sambalpur: சம்பல்பூர்- ஈரோடு சிறப்பு ரயில் நீட்டிப்பு! எந்தெந்த நிறுத்தங்களில் நிற்கும்?
ஈரோடு: சம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் எந்தெந்த நிறுத்தங்களில் நிற்கும். எந்த நாட்களில் இயங்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து தமிழ் ரயில் தகவல் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பயணிகளின் வசதிக்காகவும், கூடுதல் கூட்ட நெரிசலைச் சமாளிக்கவும் ஒடிசா மாநிலம் சம்பல்பூர் (Sambalpur) மற்றும் தமிழ்நாட்டின் ஈரோடு (Erode) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

விஜயவாடா, பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் சேலம் வழியாக இயக்கப்படும் இந்த ரயில்களுக்கான கால அட்டவணை விவரங்கள் பின்வருமாறு:
🚅 சம்பல்பூர் - ஈரோடு சிறப்பு ரயில் (வண்டி எண்: 08311):இந்த வாராந்திர சிறப்பு ரயில் சம்பல்பூரில் இருந்து புதன்கிழமைகளில் காலை 11.35 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 22.50 மணிக்கு ஈரோடு வந்து சேரும்.
சேவை நாட்கள்: 04.02.2026 முதல் 25.02.2026 வரை (4 சேவைகள்).
🚅 ஈரோடு - சம்பல்பூர் சிறப்பு ரயில் (வண்டி எண்: 08312):மறுமார்க்கத்தில், இந்த ரயில் ஈரோட்டில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 14.35 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (சனிக்கிழமை) இரவு 23.15 மணிக்கு சம்பல்பூர் சென்றடையும்.
சேவை நாட்கள்: 06.02.2026 முதல் 27.02.2026 வரை (4 சேவைகள்).
🛑 முக்கிய நிறுத்தங்கள்:இந்த ரயில்கள் சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் (சென்னை), நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் (துவ்வாடா) மற்றும் ராயகடா உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.
பெட்டிகள் விவரம்:இந்த ரயில்களில் குளிர்சாதன (AC) 2-டயர், 3-டயர் பெட்டிகள், படுக்கை வசதி (Sleeper) மற்றும் பொது வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
பயணிகள் இந்த நீட்டிக்கப்பட்ட சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அது போல் வண்டி எண் 16650 #கன்னியாகுமரி - மங்களூரு சென்ட்ரல் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 03, 2026 அன்று கன்னியாகுமரியில் இருந்து அதிகாலை 03.45 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், நிர்வாகக் காரணங்களுக்காக 1 மணி நேரம் தாமதமாக அதிகாலை 04.45 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications