மின் கட்டண முறையில் மறு சீரமைப்பு வேண்டும்! ஸ்டாலினுக்கு தர்ம சங்கடத்தை கொடுக்கும் கொங்கு ஈஸ்வரன்!
சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற மின் கட்டண மறு சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
கூட்டணி கட்சியின் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றாலும், அண்மைக்காலமாக முதல்வர் ஸ்டாலினுக்கு தர்ம சங்கடத்தை கொடுக்கும் வகையிலேயே ஈஸ்வரன் சில கருத்துக்களை கூறி வருகிறார்.

கடந்தவாரம் தொழில்துறையில் நம்பர் 1 ஆக திகழ்ந்த கோவை , இப்போது தத்தி தடுமாறுவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே இன்று அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒன்றிணைந்து மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய கோரிக்கை நியாயமானது. கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டியது.
மின் கட்டண நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தவில்லை என்று சொன்னால் பல தொழிற்சாலைகள் இயங்க வழியின்றி மூடப்படும். பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். தமிழகத்தில் பொருளாதாரம் தாழ்ந்து போகும். இன்றைய தொழில் சூழ்நிலையில் பீக் ஹவர் மின்சார கட்டணத்தையும், நிலை கட்டணத்தையும் செலுத்தி தொழில் நிறுவனங்களை இயக்குவது மிகவும் சிரமம்.
உலக அளவிலும், இந்தியாவிலும் வியாபார சூழ்நிலை முன்னேற்றம் அடையும் வரை சென்ற ஆண்டு மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். இன்றைக்கு அமைச்சர் தலைமையில் தொழில் நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்ற முன்னெடுப்பை வரவேற்கின்றேன். இன்றைய கூட்டத்தில் மின்கட்டண மறு சீரமைப்பை உறுதி செய்து தொழில் நிறுவனங்களை காப்பாற்றினால் மகிழ்ச்சி அடைவேன்.''
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications