Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்கா + ரஷ்யா + ஐரோப்பா.. 3ம் உலகப்போரை தொடங்கி வைத்த டொனால்ட் டிரம்ப்? நிலைமை மோசமாகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக அளவில் இன்று தொடங்கும் அமெரிக்காவின் திடீர் தாக்குதல்கள் மற்றும் வர்த்தக போர் ஒரு பக்கம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான், கிரீன்லாந்து, ஐரோப்பாவிற்கு எதிராக விடுத்துள்ள வார்னிங் இன்னொரு பக்கம் ஆகியவை உலக அளவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களை பார்த்தால் எங்கே உலகப்போர் மூள்கிறதோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

USA Donald Trump Visa

கிரீன்லாந்து மோதல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது சர்ச்சைக்குரிய திட்டத்தை மீண்டும் முன்மொழிந்துள்ளார். ஆரம்பத்தில் வெறும் அரசியல் பேச்சு என புறக்கணிக்கப்பட்ட இது, தற்போது ஐரோப்பியத் தலைவர்களால் தீவிரமான அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. ஐரோப்பா - அமெரிக்கா இடையிலான உறவுகளில் பெரும் நெருக்கடியை இது ஏற்படுத்தலாம் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

கிரீன்லாந்து டென்மார்க் அரசின் கீழ் உள்ள ஒரு சுயாட்சிப் பிரதேசம். வேறு நாட்டின் ஆதிக்கம் வேண்டாம் என்பதை அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் மக்கள் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா இந்த தீவை தன்னுடன் இணைக்க முயன்றால், விருப்பமில்லாத கிரீன்லாந்து மக்களை இராணுவ பலத்தால் கட்டுப்படுத்த நேரிடும். இது நீண்டகால அடிமை ஆட்சியையும், சர்வாதிகாரத்தை சூழலையும் உருவாக்கும்.

இந்த யோசனைக்கு டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெட்ரிக்சன் கடும் கண்டனம் தெரிவித்தார். வாஷிங்டனுக்கு நேரடி எச்சரிக்கையாக, "அமெரிக்கா கிரீன்லாந்தைக் கைப்பற்றும் தேவை பற்றிப் பேசுவது முற்றிலும் அர்த்தமற்றது" என்றார். டென்மார்க் ராஜ்யத்தின் எந்தப் பகுதியையும் இணைக்க அமெரிக்காவிற்கு சட்ட அடிப்படை இல்லை எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், டென்மார்க்கும் கிரீன்லாந்தும் நேட்டோ உறுப்பினர்கள் என்பதால், கூட்டுப் பாதுகாப்பு உத்தரவாதத்தால் ஏற்கனவே பாதுகாக்கப்படுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேட்டோ உடையும் சூழல்

டிரம்பின் கிரீன்லாந்து மீதான ஆசைகளுக்கு டென்மார்க் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையில், டிரம்ப் கிரீன்லாந்து உள்ளே சென்று தாக்கலாமா என்று திட்டமிட்டு வருகிறாராம். ஐரோப்பிய தலைவர்கள் டென்மார்க்கிற்கு ஆதரவாக கூட்டு அறிக்கை வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே இந்த அமெரிக்க அறிவிப்பு வந்தது.

பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவிற்கு தேவை என்று டிரம்ப் வாதாடி வருகிறார். அதே சமயம் எந்த விதமான அமெரிக்க தாக்குதலும் நேட்டோ அமைப்பை முடிவுக்குக் கொண்டுவரும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் எச்சரித்தார். உள்ளே படைகளை எடுத்துச்சென்று கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் அது மிகப்பெரிய போராக உருவெடுக்கும். ஐரோப்பா - அமெரிக்கா சண்டையாக மாறும்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது சர்ச்சைக்குரிய திட்டத்தை மீண்டும் முன்மொழிந்துள்ளார். ஆரம்பத்தில் வெறும் அரசியல் பேச்சு என புறக்கணிக்கப்பட்ட இது, தற்போது ஐரோப்பியத் தலைவர்களால் தீவிரமான அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. ஐரோப்பா - அமெரிக்கா இடையிலான உறவுகளில் பெரும் நெருக்கடியை இது ஏற்படுத்தலாம் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

கிரீன்லாந்து டென்மார்க் அரசின் கீழ் உள்ள ஒரு சுயாட்சிப் பிரதேசம். வேறு நாட்டின் ஆதிக்கம் வேண்டாம் என்பதை அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் மக்கள் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா இந்த தீவை தன்னுடன் இணைக்க முயன்றால், விருப்பமில்லாத கிரீன்லாந்து மக்களை இராணுவ பலத்தால் கட்டுப்படுத்த நேரிடும். இது நீண்டகால அடிமை ஆட்சியையும், சர்வாதிகாரத்தை சூழலையும் உருவாக்கும்.

இந்த யோசனைக்கு டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெட்ரிக்சன் கடும் கண்டனம் தெரிவித்தார். வாஷிங்டனுக்கு நேரடி எச்சரிக்கையாக, "அமெரிக்கா கிரீன்லாந்தைக் கைப்பற்றும் தேவை பற்றிப் பேசுவது முற்றிலும் அர்த்தமற்றது" என்றார். டென்மார்க் ராஜ்யத்தின் எந்தப் பகுதியையும் இணைக்க அமெரிக்காவிற்கு சட்ட அடிப்படை இல்லை எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், டென்மார்க்கும் கிரீன்லாந்தும் நேட்டோ உறுப்பினர்கள் என்பதால், கூட்டுப் பாதுகாப்பு உத்தரவாதத்தால் ஏற்கனவே பாதுகாக்கப்படுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே பெரிய வர்த்தகப் போரையும் தொடங்கலாம். ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கப் பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து பதிலடி கொடுக்கலாம். இது அமெரிக்க வணிக நலன்களையும் முதலீட்டாளர்களையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் - அமெரிக்கா மோதல்

இன்னொரு பக்கம் ஈரான் தங்களின் அணு ஆயுத கொள்கையை, மறுபரிசீலனை செய்ய போவதாக ஈரான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணு ஆயுதம் வேண்டாம் என்ற கொள்கையை அந்த நாடு மறுபரிசீலனை செய்யும் என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை செய்துள்ளது. 2015ல் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் 2018ல் டிரம்ப் ஆட்சியில் நீக்கப்பட்டது. ஈரான் அமெரிக்கா சொல்வதை கேட்கவில்லை மற்ற ஆயுத சோதனைகளை செய்கிறது என்று கூறி ஒப்பந்தத்தை நீக்கியது. இதன் காரணமாக ஈரானுக்கு தற்போது அணு ஆயுதம் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும். ஆனால் இதில் சிக்கலே.. ஹிஸ்புல்லா இயக்கம் தற்போது சேதங்களை சந்தித்து உள்ளதால்.. அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கு சில வாரங்கள் ஏற்படலாம்.

வெனிசுலா தாக்குதல்

வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் அமெரிக்கப் படைகளால் காரகாஸில் நடந்த இரவு நேரத் தாக்குதலில் கைது செய்யப்பட்டு, நியூயார்க் நகரத்திற்கு கொண்டுவரப்பட்டனர். இது உலக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

மன்ஹாட்டனில் உள்ள அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு நிர்வாக (டி.இ.ஏ) தலைமையகத்தில் அதிகாரிகளை "குட் நைட், ஹேப்பி நியூ இயர்" என மதுரோ சிரித்த முகத்துடன் வாழ்த்தினார். தான் அமெரிக்க சிறையில் இருக்க போகிறோம் என்று அஞ்சாமல் அவர் துணிச்சலாக சொன்ன இந்த விஷயம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

மதுரோவை கைது செய்ய, அமெரிக்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமை அவரது காரகாஸ் ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தின. வெனிசுலா தலைவர் விலங்கிடப்பட்ட நிலையில், மன்ஹாட்டனில் உள்ள டி.இ.ஏ தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, தன்னுடன் வந்த அதிகாரிகளுக்கு அவர் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மதுரோவை இரு டி.இ.ஏ அதிகாரிகள் உள்ளே அழைத்துச் செல்லும் காணொளியில் அவர் புன்னகையுடன் வாழ்த்தியுள்ளார்.

நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஸ்டீவார்ட் ஏர் நேஷனல் கார்டு தளத்தில் மதுரோவும் அவரது மனைவியும் தரையிறங்கினர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மன்ஹாட்டன் டி.இ.ஏ அலுவலகத்திற்கும், பின்னர் புரூக்ளினில் உள்ள மெட்ரோபொலிட்டன் தடுப்பு மையத்திற்கும் மாற்றப்பட்டனர். நியூயார்க் வந்தடைந்தவுடன், மன்ஹாட்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்திற்கு அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி, மதுரோ மீது போதைப்பொருள் பயங்கரவாதம், கோகேயின் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றங்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "கார்டெல் ஆஃப் தி சன்ஸ்" எனப்படும் போதை கடத்தல் கும்பலின் தலைமையுடன் அவர் தொடர்புடையவர் என்றும் புகார்கள் வைக்கப்படுகின்றன. இதற்கு முன்பு, அவரது கைது உதவும் வகையில் தகவல் அளிப்பவர்களுக்கு அமெரிக்க நீதித்துறை 15 மில்லியன் டாலர் வெகுமதியை அறிவித்திருந்தது.

சீனா திட்டம்

இது போக சீனா தைவான் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. தைவானில் இருந்து ஒரு மூச்சு கூட வெளியே போகாத அளவிற்கு தைவானை சீனா தற்போது சுற்றி வளைத்து உள்ளது. தைவான் மீது சீனா எப்போது வேண்டுமானாலும் போர் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனா நாட்டு படைவீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும். தைவானைச் சுற்றி சீனா பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை நடத்தி வரும் நிலையில்தான்.. போர் நடத்த தயாராக இருங்கள். போர் வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்ளின் பலத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் போர் புரியும் திறனை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்

அமெரிக்கா இரண்டு விதமான நிலைப்பாட்டை எடுத்து உள்ளது. வரலாற்று ரீதியாக தைவானை அமெரிக்கா தனி நாடாக வெளிப்படையாக அங்கீகரித்தது கிடையாது. சில தலைவர்கள் அவ்வப்போது தைவானுக்கு ஆதரவாக பேசினாலும்.. எப்போதும் ஒற்றை சீனா என்ற நிலைப்பாட்டில் மட்டுமே அமெரிக்கா இருந்துள்ளது. ஆனால் சீனாவை சீண்டுவதற்காக தைவானை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. அதோடு சீனாவிடம் இருந்து பாதுகாக்க தைவானுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி வருகிறது.

தைவான் தனி நாடாக மாறினால் அது சீனாவிற்கு பாதுகாப்பு ரீதியாக சிக்கல். உக்ரைன் நேட்டோவில் சேர்வது ரஷ்யாவிற்கு எப்படி சிக்கலோ அப்படித்தான் தைவான் தனி நாடாக மாறினால் சீனாவிற்கும் சிக்கல். ஏற்கனவே கடந்த பல மாதங்களாக தைவான் வான் எல்லைக்குள் தொடர்ந்து சீன போர் விமானங்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தைவான் அமெரிக்காவுடன் அதிகமாக நெருக்கம் காட்டி வருகிறது.

இப்படி உலக அளவில் இன்று தொடங்கும் அமெரிக்காவின் வர்த்தக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எதிராக விடுத்துள்ள அணு ஆயுத வார்னிங், ரஷ்யா அமெரிக்காவை தாக்குவோம் என்று விடுத்த வார்னிங் எல்லாம் சேர்ந்து உலகப்போரை தொடங்கி வைக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+