இது லிஸ்டுலேயே இல்லையே.. இவி வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. மின்சார வாரியத்தின் அசத்தல் முடிவு
சென்னை: நாடு முழுவதும் சாலைகளில் செய்யப்பட முக்கியமான மாற்றம் ஒன்றை பற்றி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது.
அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது.
ஓலா பைக்: ஓலா பைக் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன உற்பத்தி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கே உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் ஓலா முழுக்க முழுக்க எலக்ட்ரிக் பவரில் இயங்கும் பைக் ஆகும். ஓலாவை தொடர்ந்து இ வாகனங்களின் உற்பத்தி தமிழ்நாடு நோக்கி திரும்ப தொடங்கி உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இ வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.
அதிகரிக்க திட்டம்: இந்த நிலையில், தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாய்ண்ட் அமைக்கப்பட உள்ளது.
சாலை ஓரம் அரசு நிலத்தில் தமிழ்நாடு முழுக்க 100 இடங்களில் சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இந்த சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இங்கே மின்சாரம் வழங்கப்பட்டு அதில் சார்ஜிங் பாய்ண்ட் இயங்கும்.
வரும் காலங்களில் மக்கள் பயன்பாட்டை பொறுத்து இந்த சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதை மனதில் வைத்தே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டாங்கேட்கோ) ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மின்சார வாகனங்களுக்கு (இ-வாகனங்கள்) மாறுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. சென்னை மத்திய விநியோக வட்டம் மயிலாப்பூரில், டி. நகர், எழும்பூர், அண்ணாசாலை ஆகிய இடங்களில் அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் ஆடியோ காட்சிகள் ரோட் ஷோ நடைபெற்றது.
வியாழக்கிழமை நடைபெற்ற 'கோ எலக்ட்ரிக் பிரசாரம்' நிறைவு விழாவில் மின்வாரிய அதிகாரிகள், இ-வாகனங்களைப் பயன்படுத்துவதால் மாசுபாட்டைக் குறைப்பது மட்டுமின்றி பெட்ரோல், டீசல் வாங்கும் செலவையும் மிச்சப்படுத்துவது குறித்து விரிவாக மக்களுக்கு விளக்கினர்.
நேற்று வந்த அறிவிப்பு: நேற்றும் கூட புதிய நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்தியாவில் இவி வாகனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் நிதி அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications