ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.. தொடரும் சிகிச்சை.. என்னாச்சு?
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி வருவேன் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறிய நிலையில் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இதனால் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது தந்தையான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு தோல்வியடைந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாத்தில் வாகை சூடினார்.

இளங்கோவனுக்கு உடல்நலக்குறைவு
இதையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து நன்றி கூறினார். காங்கிரஸ் மேலிட தலைவர்களை டெல்லியில் சந்தித்து வாழ்த்த பெற்றார். கடந்த 15ம் தேதி அவர் டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஐசியூவில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார்.

உறுதியான கொரோனா
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், மூச்சுவிடுவதில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தொடர் சிகிச்சையால் குணமாகி வந்தார். சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

வீடியோ வெளியிட்ட இளங்கோவன்
இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கத்தில், ஈவிகேஎஸ் இளங்கேவான் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டார். இதய பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து இருந்தது. மேலும் ஈவிகேஎஸ் இளங்கோவனும் தான் நலமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் மருத்துவமனை வழங்கிய உடையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்தார். அதில் அவர் பேசுகையில், ‛‛நான் நல்லா இருக்கேன்.. சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன்'' என தெரிவித்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர்.

மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவு
இந்நிலையில் தான் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனாவில் இருந்து அவர் மீண்டு வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்த நிலையில் தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது அவருக்கு என்ன பிரச்சனை உள்ளது? எந்த மாதிரியான சிகிச்சை வழங்கப்படுகிறது? என்பது பற்றி இன்று மருத்துவமனை நிர்வாகம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications