Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேஸ்மேக்கர் ரிப்பேர் ஆயிருச்சா? அவசரமாக சிசியூ -வில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன்.. என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மியாட் மருத்துவமனையில் இளங்கோவன் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைகள் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா திடீர் உடல்நலக் குறைவால் கடந்த வருடம் ஜனவரி 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அந்த தொகுதி மறுபடியும் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டது.

evks elangovan health condition ccu

அபார வெற்றி: இந்த இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதில் 66000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றார்.. இதையடுத்து, டெல்லி சென்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று சென்னை திரும்பியதுமே, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

எனவே, அன்றைக்கே சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இருதய பாதிப்பும், கொரோனா பாதிப்பும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சிகிச்சைகள் விடாமல் தரப்பட்டன. இறுதியில், ஈவிகேஎஸ் இளங்கோவன் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்..

உடல்நலக்குறைவு:
இந்நிலையில், தற்போது மீண்டும் இளங்கோவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, நேற்றுமுன்தினம், சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.. நுரையீரல் சளி காரணமாக மூச்சுத் திணறல் அவருக்கு ஏற்பட்டதாகவும், தற்போது அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. இன்னமும் வெண்டிலேட்டர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. இதை அறிந்த முதல்வர் ஸ்டாலின், அவரது உடல் நலன் குறித்து போனில் விசாரித்தார்.. பிறகு, மருத்துவமனைக்கே நேரில் சென்று விசாரித்துவிட்டு திரும்பியுள்ளார்.

அவசர பிரிவு: இந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்யப்பட்டிருந்த இளங்கோவன், கிரிட்டிக்கில் கேர் யூனிட்டுக்கு அவசரம் அவசரமாக இன்று கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நமக்கு பிரத்யேகமான தகவல் கிடைத்திருக்கிறது.

ஏற்கனவே இளங்கோவனுக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது. அந்த மெஷின் தற்போது வேலை செய்யவில்லையாம்.. இதனால், நுரையீரலில் தேங்கியுள்ள நீரையும் சளியையும் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாம்.. அதுமட்டுமல்ல, மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதால், நார்மலுக்கு இன்னும் வரவில்லை என்றும், சீரியஸ் கண்டிசனில் தான் அவர் இருக்கிறார் என்றும் அவரது குடும்பத்துக்கு நெருக்கமான தரப்பிலிருந்து தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+