"நேற்றொரு தோற்றம்.. இன்றொரு தோற்றம்".. எம்ஜிஆர் பாடலை மேற்கோள்காட்டி ஓபிஎஸ்ஸை விமர்சித்த மைத்ரேயன்
சென்னை: நேற்றொரு தோற்றம், இன்றொரு தோற்றம் என எம்ஜிஆர் பாடலை மேற்கோள்காட்டி ஓபிஎஸ்ஸை அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரத்தில் நாள்தோறும் பல்வேறு ட்விஸ்ட்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்த பிரச்சினை ஆரம்பித்த போது முதல் ட்விஸ்ட்! அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் ஓபிஎஸ் அணியிலிருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறியதுதான்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கி போதிலிருந்தே ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வருகிறார் மைத்ரேயன். இந்த நிலையில் இரட்டை இலையை பெற அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த போது, மைத்ரேயன் போட்ட பேஸ்புக் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஓபிஎஸ்- எடப்பாடி பழனிசாமி
அந்த பதிவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்து இன்றோடு 3 மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன, மனங்கள் என கேள்விக்குறியோடு குறிப்பிட்ட மைத்ரேயன் அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என சூசகமாக பதிவிட்டிருந்தார்.

பொதுக் குழு கூட்டம்
கடந்த ஜூன் 14 ஆம் தேதி பொதுக் குழு கூட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தின் போது செல்போன் எடுத்து செல்ல கூடாது என சக நிர்வாகிகள் கூறியதால் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார் மைத்ரேயன். அன்றைய தினம்தான் அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோஷம் வெளிப்படையாக ஒலித்தது.

ஒற்றைத் தலைமை
இதைத் தொடர்ந்து ஒற்றைத் தலைமைக்கு எதிராக ஓபிஎஸ் அணியினருடன் பல்வேறு ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்ட மைத்ரேயன், திடீரென யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டாக ஜூன் 22 ஆம் தேதி பசுமை வழிச்சாலையில் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அந்த சந்திப்பின்போது அவர் காலில் விழுந்ததை எடப்பாடி பழனிசாமி கண்டு கொள்ளவில்லை என்ற விமர்சனமும் வெளியானது.

கடும் விமர்சனம்
அடுத்த நாளே ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டத்திற்கு வந்த ஓபிஎஸ், மேடையில் இருந்தவர்களுக்கு வணக்கம் சொல்லிய போது மைத்ரேயனுக்கும் சொன்னார். அப்போது அவரும் தர்மசங்கடத்துடனே வணக்கம் சொல்லியதாக கருதப்பட்டது. ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்புக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி அணியினர் ஓபிஎஸ்ஸை கடுமையாக சாடி வருகிறார்கள்.

மைத்ரேயன் சாடல்
அந்த வகையில் முன்னாள் எம்பி மைத்ரேயனும் இணைந்து கொண்டார். இதுகுறித்து மைத்ரேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் இன்று 21/08/2017 அணிகள் இணைந்தன. 5 ஆண்டுகளுக்குப் பின் திருப்புமுனையில் நிற்கிறோம். தலைவர் பாடல் நினைவுக்கு வருகிறது.
நேற்றொரு தோற்றம்
இன்றொரு மாற்றம்.,.
பார்த்தால் பார்வைக்கு தெரியாது...
தொடங்கிய பாதையில்
தொடர்ந்து வராமல்
தூரத்தில் நின்றால் புரியாது ...
என அதிமுக முன்னாள் எம்பி தனது ட்விட்டரில் ஓபிஎஸ்ஸை விமர்சித்துள்ளார். இந்த பாடல் எம்ஜிஆர் நடித்த படகோட்டி திரைப்படத்தில் வரும் "நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி" என்ற பாடலாகும்.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications