விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் ரூ 25 லட்சம் வென்ற காளியம்மாள்!
சென்னை: விஜய் டிவியில் நடிகர் அரவிந்த்சாமி தொகுத்து வழங்கிய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காளியம்மாள் ரூ 25 லட்சம் பணத்தை வென்றார். இது தற்போது வைரலாகி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் பெண் முகமாக பரீட்சயமானவர் காளியம்மாள். அக்கட்சியில் இருந்த போது தமிழ் தேசியம், தமிழ் மண் உள்ளிட்டவை குறித்து பல்வேறு விஷயங்களை விவாதித்துள்ளார்.

மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். இந்த நிலையில் கட்சியில் தனது மனைவி கயல்விழிக்கு சீமான் பொதுச் செயலாளர் பதவியை கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த காளியம்மாள் அந்த பதவியை தனக்கு தர வேண்டும் என கேட்டதாக சீமானே ஒரு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
ஒதுங்கி இருந்த காளியம்மாள்
இது தொடர்பாக அதிருப்தியால் காளியம்மாள், கட்சி செயல்பாடுகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். சீமானும் அவருடைய தம்பிகளும் காளியம்மாளை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
கனத்த இதயத்துடன்...
இந்த நிலையில் அவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவார் என சொல்லப்பட்டது. அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு கனத்த இதயத்துடன் விலகுவதாக காளியம்மாள் அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் எந்த கட்சியில் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2026 இல் எந்த கட்சியில்
அவர் ஒரு இயக்கத்தை தொடங்கி தன்னை ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாற்றிக் கொண்டு வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் போது அவர் ஏதாவது ஒரு கட்சியில் இணைவார் என சொல்லப்படுகிறது.
விஜய் டிவி நிகழ்ச்சி
இந்த நிலையில் சமூகவலைதளங்களில் எல்லாம் காளியம்மாள் குறித்து பேசப்படுகிறது. அந்த வகையில் அவர் விஜய் டிவியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ 25 லட்சம் வெற்றி பெற்ற செய்தி வைரலாகி வருகிறது.

3 சீசன்
கடந்த 2012 ஆம் ஆண்டு வாக்கில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி 3 சீசன்களாக நடத்தப்பட்டது. அதில் முதல் சீசனை சூர்யாவும் இரண்டாவது சீசனை பிரகாஷ் ராஜும், 3ஆவது சீசனை அரவிந்த் சாமியும் நடத்தினர். இதில் மூன்றாவது சீசனில்தான் காளியம்மாள் கலந்து கொண்டார்.
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
அவர் நாகை மாவட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர். அவர் தனது கணவர் பிரகாசத்துடன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பெண்களின் நெற்றி வகிட்டை அலங்கரிக்கும் ஆபரணம் என்ன என கேட்ட போது காளியம்மாள் சுட்டி என தெரிவித்தார். இது போல் எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டு அதுவே போட்டி மேலும் விறுவிறுப்படைந்தது.

ரூ 25 லட்சம்
30 ரூபாயில் எத்தனை எட்டணாக்கள் உள்ளன என அரவிந்தசாமி கேட்ட போது 60 என சரியான விடையை சொல்லி ரூ 5 ஆயிரத்தை வென்றார். இப்படியே காளியம்மாள் வென்ற நிலையில் 25 லட்சம் ரூபாய்க்கான ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதாவது அரச இலையின் உள்ளே சூரியன் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட பிளாட்டின பதக்கம் இவற்றில் எந்த விருதாக கொடுக்கப்படுகிறது?
a.பத்ம ஸ்ரீ b.பத்ம விபூஷன் c.பாரத ரத்னா d.பரம் வீர் சக்ரா
இதற்கு சற்றும் யோசிக்காமல் பாரத ரத்னா என காளியம்மாள் பதிலளித்தார். இந்த பதிலை எப்படி கூறினீர்கள் என அரவிந்த்சாமி கேட்ட போது, எம்ஜிஆர் பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு பற்றி தெரிந்து கொள்ள தேடிய போது அந்த விருதின் உருவத்தை பார்த்தேன் என கூறினார்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய காளியம்மாள்
இதைத் தொடர்ந்து 50 லட்சம் ரூபாய்க்கான கேள்விக்கு போகிறீர்களா என அரவிந்த் சாமி கேட்டார். அப்போது காளிம்மாளை அவருடைய தந்தையுடன் போனில் பேச வைத்தனர். தான் ரூ 25 லட்சம் ஜெயித்துவிட்டதாக காளியம்மாள் தெரிவித்தார். உடனே அவருடைய அப்பா போதும்மா என தெரிவித்தார்.
அதிக தொகையுடன் வென்ற காளியம்மாள்
இதையடுத்து காளியம்மாளும் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தார். அதாவது ரூ 50 லட்சம் கேள்விக்கு தவறாக பதில் அளித்தார். ரூ 25 லட்சத்தை விட குறைந்த பணம்தான் கிடைக்கும் என்பதால் அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார். அத்துடன் அந்த சீசனில் அதிக தொகை வெற்றி பெற்றவர் என்ற பெருமையும் காளியம்மாளுக்கு கிடைத்தது.
சுனாமியால் காளியம்மாள் குடும்பம் பாதிப்பு
காளியம்மாளின் குடும்பம் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் கடுமையாக பாதிக்கப்பட்டது. சுனாமியின் போது உயிரிழந்தவர்களை தேடி அலைந்ததையும் , உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு கூட நடத்த முடியாத சோகத்தையும் காளியம்மாள் பகிர்ந்து கொண்டார். கட்டுமரம் ஓட்டி காளியம்மாளின் அப்பா குடும்பத்தை நடத்தினாராம். வென்ற பணத்தில் ஒரு சொந்த வீட்டை கட்ட வேண்டும் என்றும் கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications