பழைய பத்திரங்கள்.. பத்திரப்பதிவு செய்ய போறீங்களா? பழைய பத்திரத்தை ஆய்வு செய்வது கட்டாயம்: தமிழக அரசு
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காக அடுத்தடுத்த அதிரடிகளை பதிவுத்துறை செய்து வருகிறது. அந்தவகையில், பத்திரப்பதிவில் மோசடிகள் எதுவும் நடந்துவிடாத வண்ணம், இன்னொரு முக்கிய உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
கடந்த 2021ல், தமிழக அரசு பதிவு சட்டத்தில் சில திருத்தங்களை செய்திருந்தது.. இந்த திருத்தங்கள், 2022 ஆகஸ்ட், 16ல் அமலுக்கு கொண்டுவரப்பட்டன.. அதன்படி, மோசடி புகார் குறித்து விசாரித்து, மாவட்ட பதிவாளரே அந்த பத்திரத்தை ரத்து செய்யலாம். இந்த விபரம் வில்லங்க சான்றிதழிலும் சேர்க்கப்படும் என்பதே அந்த திருத்தமாகும்.

அரசு அதிரடி: இதற்காக தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் மனமார்ந்த பாராட்டுக்களையும் அன்று தெரிவித்து கொண்டதையும் நாம் மறக்க முடியாது. எனினும், மோசடி பத்திரங்களை ரத்து செய்வதில், சில சிக்கல்கள் இன்னமும் நீடிப்பதாக தெரிகிறது.
முளைத்த பிரச்சனை: அதாவது, பழைய நடைமுறைகளை சுட்டிக்காட்டி, மோசடி பத்திரங்களை ரத்து செய்ய கோரும் மனுக்களை, மாவட்ட பதிவாளர்கள் சிலர் தள்ளுபடி செய்துவிடுகிறார்களாம். இப்படியொரு புகார் சமீபத்தில் முளைத்துள்ளது.. மோசடி பத்திரங்களை ரத்து செய்ய, மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால், கிட்டத்தட்ட 1,055 மோசடி பத்திரங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டிருப்பதாக பதிவுத் துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.
ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் சொன்னபோது, "இப்படி வேண்டுமென்றே தாமதிக்கும் நபர்கள் மீதும், மோசடி பத்திர ரத்து சட்டத்துக்கு எதிராக செயல்படும் மாவட்ட பதிவாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி தந்திருந்தனர்.
போலி ஆவணம், ஆள்மாறாட்டம் வாயிலாக மோசடி நடப்பதை தடுத்து நிறுத்துவதற்காக, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுஉள்ளன என்றாலும், இதுபோன்ற புகார்கள் முளைக்கவும், சென்னை-சொத்து விற்பனை பதிவின்போது, பழைய பத்திரங்களை சரி பார்ப்பதில் அலட்சியம் காட்டும் சார் - பதிவாளர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கவும் பதிவுத்துறை தயாராகி வருகிறதாம்.
கிரைய பத்திரம்: காரணம், ஒரு கிரைய பத்திரம் பதிவுக்கு வரும்போது, அதற்கான சொத்தை விற்பவருக்கு, அந்த சொத்து எப்படி வந்தது என்பதற்கான பழைய பத்திரத்தை ஆய்வு செய்தால் போதும் என்று, பெரும்பாலான சார் - பதிவாளர்கள் நினைக்கிறார்கள்.. இதற்கு முன்பு பதிவான 4 அல்லது 5 பத்திரங்களின் அசல் பத்திரங்களை சரி பார்க்க பார்த்து, இதில், எந்தெந்த பழைய ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன என்ற விபரங்களை, புதிய கிரைய பத்திரத்தில் குறிப்பிட வேண்டும் என்று பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
வங்கி அடமானம்: ஆனாலும், பழைய பத்திரம் காணாமல் போயிருந்தால், வங்கி அடமானத்தில் இருந்தால், அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறதாம்..

சில சார் - பதிவாளர்கள் பழைய பத்திரங்களை சரி பார்ப்பதில் தவறான அணுகுமுறையை பின்பற்றுகிறார்களாம்.. மேலும், பழைய பத்திரங்களை சரி பார்க்காமல் கிரைய ஆவணங்களை பதிவுக்கு ஏற்பதாகவும் பகீர் குற்றச்சாட்டுகள் கிளம்பி உளன்ன. அதனால்தான், பழைய பத்திரங்களை சரி பார்ப்பதில் அலட்சியம் காட்டும் சார் - பதிவாளர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கவும் பதிவுத்துறை தயாராகி வருகிறதாம்.
ஒத்துழைக்க மறுப்பு: பழைய பத்திர சரிபார்ப்புக்கு ஒத்துழைக்க மறுப்போர் மற்றும் இதற்கு சார் - பதிவாளர்கள் யாராவது துணையாக செயல்பட நேர்ந்தால், அல்லது தவறான வழிகாட்டுதல் அடிப்படையில் பழைய பத்திரங்கள் சரி பார்ப்பில் அலட்சியம் காட்டும் சார் - பதிவாளர்கள் மீதெல்லாம் நடவடிக்கை பாயும் என்று பதிவுத்துறை கண்டிப்பு காட்டியுள்ளது.
அதனால், விதிவிலக்கான பத்திரங்கள் தவிர்த்து மற்ற அனைத்துக்கும் பழைய பத்திரங்களை சரி பார்ப்பது கட்டாயம் என்பதையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருக்கிறதாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications