பயிர்க்கடன்.. விவசாயிகளுக்கு குஷி.. உரம், இடுபொருட்களில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் புது அதிரடி
சென்னை: தமிழக கூட்டுறவு அமைப்புகளில் வழங்கப்பட்டு வரும் பயிர்க்கடன் குறித்து மீண்டும் ஒரு முக்கிய தகவல் வெளியாகி, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், 15 நாட்களுக்கு முன்பு அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்..

விவசாயிகள்: அதில், "தமிழகத்தில் நடப்பாண்டு கூட்டுறவு அமைப்புகள் மூலம், ரூ.16,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகள் வாரியாக குறியீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயிர்க்கடனில் 30 சதவீதம் புதிய உறுப்பினர்களுக்கும், 20 சதவீதம் பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கும் வழங்குவதை உறுதி செய்யவேண்டும். பட்டியலின வகுப்பு, பழங்குடியினரின் நில உடமையின் அடிப்படையில், 20 சதவீதம் குறியீட்டினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிர்ணயம் செய்யவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டிற்கு மேலாகவும் தேவைப்படும் நேர்வில், தகுதியான விவசாயிகளுக்கு வங்கிகள் ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும்.
புகார்கள்: பயிர்க்கடனில் அதிக அளவில் தகுதியுள்ள விவசாயிகள் பயன் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். பயிர்க்கடன் வழங்குவதில் எவ்வித புகாரும் இருக்க கூடாது" என்பது உட்பட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
வலியுறுத்தல்: இதுகுறித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.. அதில், "முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு பருவத்திலும் கூட்டுறவுத்துறையின் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண்மைப் பணிகளுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு உழவர்களுக்கு தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உள்ள நடப்பு காரீப் பருவத்தில் வேளாண்மைப் பணிகளுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருள்களைப் பொறுத்தவரை யூரியா 30,000 மெட்ரிக் டன் என்ற அளவிலும், டி.ஏ.பி 15,000 மெட்ரிக் டன் என்ற அளவிலும், எம்.ஓ.பி 9,200 மெட்ரிக் டன் என்ற அளவிலும், காம்ப்ளக்ஸ் 21,600 மெட்ரிக் டன் என்ற அளவிலும் ஆக மொத்தம் 75,800 மெட்ரிக் டன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இருப்பு கிடங்குகள்: மேலும், உடனடித் தேவையை எதிர்கொள்ளும் வகையில், டான்பெட் இருப்புக் கிட்டங்கிகளில் யூரியா 4,500 மெட்ரிக் டன் என்ற அளவிலும், டி.ஏ.பி 2,700 மெட்ரிக் டன் என்ற அளவிலும், எம்.ஓ.பி 3,700 மெட்ரிக் டன் என்ற அளவிலும், காம்ப்ளக்ஸ் 5,400 மெட்ரிக் டன் என்ற அளவிலும் ஆக மொத்தம் 16,300 மெட்ரிக் டன்கள் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயிர் கடன் பெற்று பயிர்களை விளைவித்து பயன்பெறலாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிமுக தலைமையிலான அரசு வருடத்துக்கு சராசரியாக ரூ.6,000 கோடி பயிர்க்கடன் வழங்கிய நிலையில், தற்போதைய திமுக அரசு தொடர்ந்து ரூ.10,000 கோடியைத் தாண்டியிருக்கிறது.. நடப்பு நிதியாண்டில், அரசு பயிர்க்கடனுக்காக 16,500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக 14,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் நடந்து முடிந்த பட்ஜெட்டின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சர், கே.ஆர்.பெரியகருப்பன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications