கோயம்புத்தூருக்கு ஜாலி.. திடீர்னு ஒரு சர்ப்ரைஸ்.. கோவை வருகிறார் "கலைஞர் கருணாநிதி".. மாஸ் லைப்ரரி
சென்னை: இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில், தங்கம் தென்னரசு வெளியிட்டிருக்கும் ஒரு அறிவிப்பானது, ஒட்டுமொத்த கோவையையும் திரும்பி பார்க்க வைத்துவருகிறது.
சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இன்று காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

விரைவில் எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று தமிழக மக்கள் பரவலாக எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். அந்தவகையில், இளைஞர்களை ஈர்க்கும் விதத்தில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
சமீபகாலமாகவே, மக்களிடம் வாசிப்பு திறன் படிப்படியாக குறைந்து வருகிறது.. அதிலும் மாணவர்கள், தங்கள் பாடப்புத்தகங்களை தாண்டி, வேறு எந்தவிதமான புத்தகங்களையும் படிக்க முடியாமல் போய்விடுகிறது..
வாசிப்பு திறன்: பெரும்பாலான பள்ளிகளில் நூலகங்கள் அமைந்துள்ளன என்றாலும், அந்த நூலகங்கள் அவ்வளவாக செயல்படுவதில்லை என்றே தெரிகிறது. அதுமட்டுமல்ல, நூலகத்துக்கான வகுப்பை வேறு பாட ஆசிரியர் பயன்படுத்தும் நிலைமையும் தமிழகத்தில் ஆங்காங்கே நிலவி கொண்டுதான் இருக்கிறது.
உண்மையை சொல்லப்போனால், பள்ளிப்பாடங்களை தவிர, வகுப்பறைக்கு வெளியே ஏராளமான அறிவுக்களஞ்சியங்கள் கொட்டிக்கிடக்கவே செய்கின்றன.. இதை பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், தமிழக பள்ளி கல்வித்துறையும் அவ்வப்போது புதுபுது முயற்சிகளை முன்னெடுத்தும் வருகிறது..
சமீபத்தில்கூட, கோயம்புத்தூரில் வாசிப்பு இயக்கம் உருவாக்கப்பட்டது.. 11 மாவட்டங்கள், 11 ஒன்றியங்கள் என கோவை, ஈரோடு உட்பட 11 மாவட்டங்களில், மொத்தம் 100 பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் துவங்கப்பட்டது.
நூலகம்: பள்ளி மாணவர்கள் என்றில்லை, தமிழகத்திலேயே காவல் நிலையத்தில் நூலகம் என்ற பெருமை இந்த கோயம்புத்தூருக்கு உண்டு.. பல்வேறு தேவைகளுக்காக போலீஸ் ஸ்டேஷனை பொதுமக்கள் அணுகுகின்றபோது, அவர்களிடம் இந்த புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதை மையப்படுத்தி கோவையில் அமைந்ததுதான், "காவல் நிலையம் தோறும் நூலகம்" என்ற திட்டமாகும்.v
இங்கு இன்னொன்றையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.. மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு செல்லும் "நடமாடும் நூலகம்" மாநகராட்சி நிர்வாகம் சார்பில் துவங்கப்பட்டதையும் இங்கு நினைவுகூர வேண்டிஉள்ளது. டெம்போ டிராவலர் வேனில் இந்த நடமாடும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
வசதிகள்: கோவையையே மையப்படுத்தி இப்படியான வசதிகள் செய்ய காரணம், நாட்டிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோயம்புத்தூர் மாநகரமும் ஒன்றாகும்... இதை அடிப்படையாக கொண்டே இன்றைய தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருக்கிறார்.
அந்தவகையில், பொதுமக்கள் இடையே குறிப்பாக இளைய தலைமுறைகளின் அறிவுத்தாகத்தை, மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரால் கோயம்புத்தூரில் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்..
அமைச்சர் அறிவிப்பு: அதுமட்டுமல்ல, உலகத்தரம் வாய்ந்த நூல்கள் பத்திரிகைகள் இதழ்கள் இடம்பெறும் என்றும், எந்திரவியல் மெய்நிகர் தோற்றம் (விர்ச்சுவல் ரியாலிட்டி) பல்வேறு அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவுகளைச் சார்ந்த கண்காட்சிகள் இதில் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய பட்ஜெட் உரையில் வெளியிட்டுள்ளார்.
வெறும் படிப்பையும் தாண்டி, பார்த்தால் போதும், கேட்டால் போதும் என்ற குறுகிய வட்டத்துக்குள் இளைய சமுதாயம் சிக்கி கொண்டுவிடக்கூடாது என்பதற்காக, தமிழக அரசு இப்படியான அதிரடியை கொண்டுவந்துள்ளது, கோவை மாநகரத்துக்கே கூடுதல் பெருமையை தந்துள்ளது..
பெருமை: மொத்தத்தில், "புத்தகங்கள் வரலாற்றின் அடையாளம்" என்பதை தமிழக அரசு இன்றைய தினம் தன்னுடைய அறிவிப்பின்மூலம் புரிய வைத்துள்ளது.
-
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
கோவையில் கேபிள் டிவியில் ஓடிய விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்.. உரிமையாளரை கைது செய்த போலீஸ் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications