கட்சியே இன்னும் முழுசா ஆரம்பிக்கல.. அதுக்குள்ள தனி டீமா? விஜய்க்கு வந்த தலைவலி? ‘அவர்’ தான் காரணமா?
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் உள்ளிட்டவை மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் உட்கட்சிப் பூசல் பல மட்டங்களில் இருப்பதாக கூறுகின்றனர் அக்கட்சி நிர்வாகிகள். குறிப்பாக விஜய்க்கு நெருக்கமாக இருக்கும் நிர்வாகி ஒருவர் மாவட்ட செயலாளர்களை கூட மதிப்பதில்லை என புகார் எழுந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் மாவட்ட அளவில் பலர் பல அணிகளாக செயல்படுவதாக விமர்சிக்கப்படுகிறது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தற்போது தீவிர அரசியலில் குதிக்க முடிவு செய்து இருக்கிறார். கோட் படத்திற்கு பிறகு எச்.வினோத் இயக்கும் தளபதி-69 படம் தான் அவரது கடைசி படம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அரசியலில் தனது முதல் மாநில மாநாட்டுக்காக தீவிரமாக பணியாற்றி விஜய் அவ்வப்போது அரசியல் நிகழ்வுகளிலும் தலைகாட்டி வருகிறார். இந்நிலையில் பெரியார் பிறந்தநாளில் விஜய்யின் செயல்பாடுகள் மீண்டும் பேசுபொருளாகி வருகிறது.
தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் தந்தை பெரியாரின் திரு உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விஜய் பெரியாரின் சிலைக்கு நேரில் மரியாதை செலுத்தியது பேசு பொருளாக மாறி இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் திராவிட கட்சிகள் விஜய்க்கு ஆதரவும், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பெரியார் பிறந்த நாள் அன்று விஜய் கட்சியில் உட்கட்சி பூசல் இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஏற்கனவே விஜய்க்கு நெருக்கமாக இருக்கும் 'தலைவர்' ஒருவர் மாவட்ட நிர்வாகிகளை கூட மதிப்பதில்லை என புகார் எழுந்திருக்கிறது.
மாவட்டங்களுக்கு வரும்போது கூட தாங்கள் வருகிறோம் என்று மட்டும் தான் சொல்வதாகவும், என்ன காரணம்? எதற்காக வருகிறோம்? என்று சொல்வதில்லை என புகார் கூறுகின்றனர் நிர்வாகிகள். மேலும் விஜய்க்கு அடுத்தபடியாக ஏன் தலைவரே நான் தான் என்பது போல அந்த 'தலைவர்' நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே ரசிகர் மன்றங்களில் இருந்தவர்களுக்கும், தற்போது புதிதாக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதுவையான நிர்வாகியின் ஆதரவாளர்களுக்கும் இடையே நிறைய பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை திண்டுக்கல்லில் நடைபெற்ற பெரியார் சிலை மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே தெரிந்தது. திண்டுக்கல்லில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் , அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே உள்ள பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் .
அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, ஒன்றிய அணி , மாணவர் அணி என தனித்தனியாக பிரிந்து பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக, அதிமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரே அணியாக ஒற்றுமையாக பெரியார் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து செல்லும் நிலையில், தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் ஒற்றுமை இல்லாதது போல் , நான்கு அணியாகப் பிரிந்து தங்களுக்குள் யார் பெரியவர் என்பது போல செயல்பட்ட நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications