"ரூ.100 சிலிண்டர் மானியம் வாக்குறுதி" தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? மக்கள் எதிர்பார்ப்பு!
கேஸ் சிலிண்டருக்கான மானியம் பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகுமா என்று எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
சென்னை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான ரூ.100 மானியம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது மகளிர் உரிமைத் தொகை மற்றும் கேஸ் சிலிண்டர் மானியம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர்.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, இல்லத்தரசிகளைக் கவரும் வகையில் காஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மத்திய அரசு நுகர்வோரிடம் இருந்து சிலிண்டருக்கான முழுக் கட்டணத்தையும் வசூலித்து விட்டு, பின்னர் அதற்கான மானியத்தை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தி வந்தது.

மத்திய அரசு மானியம் நிறுத்தம்
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மானியத் தொகை ரூ.200 வரை வழங்கப்பட்டது. 4 ஆண்டுளுக்கு முன்பு வரை ரூ.100 மானியமாக வழங்கப்பட்டது. தற்போது இத்தொகை படிப்படியாகக் குறைக்கப்பட்டு 2020 மே மாதம் முதல் நிறுத்தப்பட்டது. சிலிண்டர் விலையும் உயர்ந்து, மானியமும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இதன்பின்னர் இல்லத்தரசிகளைக் கவரும் வகையில் ஒவ்வொரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சிலிண்டர் விலை உயர்வு
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்து 2 ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், சிலிண்டர் மானியம் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால், சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை 1118.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் கேள்வி
இதனிடையே சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்த கட்சிகள், தேர்தலின் போது திமுக அறிவித்த 100 ரூபாய் சிலிண்டர் மானியம் வாக்குறுதி என்னவானது என்று கேள்வி எழுப்பினர். அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் சிலிண்டர் மானியத்தை திமுக இன்னும் வழங்கவில்லை என்று அதிமுக மற்றும் பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

சிலிண்டர் மானியம் அறிவிக்கப்படுமா?
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் மூலம் மகளிருக்கான உரிமைத் தொகை அறிவிப்பு நிச்சயம் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் பட்ஜெட்டில் சிலிண்டருக்கான ரூ.100 மானியமும் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications