இலங்கை: தமிழருக்கு பச்சை துரோகம்- வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதவி விலக ப. சிதம்பரம் வலியுறுத்தல்
சென்னை: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொண்டதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதவி விலக வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருக்கிறது இது தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பாஜக அரசு செய்த மாபெரும் துரோகம், மாபாதகச் செயல்.
இச்செயல் ஒன்றே போதும், அஇஅதிமுக-பாஜக கூட்டணியை எதிர்த்து ஒருமனதாக தமிழக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். பச்சைத் துரோகத்திற்கு தகுந்த தண்டனையைத் தமிழ்நாடு தரவேண்டும்.
ஐ நா மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருக்கிறது
— P. Chidambaram (@PChidambaram_IN) March 24, 2021
இது தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பாஜக அரசு செய்த மாபெரும் துரோகம், மாபாதகச் செயல்
வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர், அரசின் வற்புறுத்தலால் ஐ நா மனித உரிமை அமைப்பின் தீர்மானத்தைப் புறக்கணித்தார் என்றால், தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர் பதவி விலக வேண்டும். இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications