சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர் “போன்”.. பரபரத்த முதலமைச்சர் இல்லம்! விரைந்த பாம் ஸ்குவாட்! ஒருமணி நேர சோதனை.. சிறுவன் யார்?

Google Oneindia Tamil News

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில் நள்ளிரவு சென்னையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன்கால் வந்திருக்கிறது.

மறுமுனையில் பேசிய நபர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக வெடிகுண்டு தடுப்பு பிரிவுவினர் அழைத்தனர். அவர்களுடன் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன.

1 மணி நேரம்தான்.. எடப்பாடி, ஓபிஎஸ்ஸுக்கு நீதிபதிகள் கொடுத்த 1 மணி நேரம்தான்.. எடப்பாடி, ஓபிஎஸ்ஸுக்கு நீதிபதிகள் கொடுத்த

 ஸ்டாலின் வீட்டில் சோதனை

ஸ்டாலின் வீட்டில் சோதனை

அதைகொண்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் ஸ்டாலின் வீடு முழுவதும் சுமார் ஒரு மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டன. மோப்ப நாய்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஒரு மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு எந்த வெடிகுண்டு பொருட்களும் கைப்பற்றப்படாததால் வந்த போன் கால் புரளி என்பது உறுதியானது.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

மறுபக்கம், செல்போனில் எச்சரிக்கை விடுத்த நபர் யார் என்று போலீசார் விசாரணையில் இறங்கினர். வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை செய்தபோது சென்னை செனாய் நகரின் முகவரியின் கீழ் சிம் கார்டு வாங்கப்பட்டிருந்தது. அந்த முகவரிக்கு நேரில் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சிறுவன்

சிறுவன்

அப்போதுதான் முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருந்ததாக மிரட்டல் விடுத்தது சிறுவன் என்பது தெரியவந்தது. சிறுவனின் பெயர் புவனேஷ் என்றும், மனநலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்து இருக்கிறது.

மனநலம் பாதிப்பு

மனநலம் பாதிப்பு

கீழ்பாக்கம் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அன்பழகன் என்பவரது செல்போனை யாருக்கும் தெரியாமல் எடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தது விசாரணையில் உறுதியானது. புவனேஷ் இதற்கு முன் பலரது வீடுகள் வெடிகுண்டுகள் இருப்பதாக மிரட்டல் விடுத்திருக்கிறார். இதற்காக அவர் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Fake Bomb alert to CM MK Stalin home made stir in Chennai: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X