சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'அவர்' நாடாரே கிடையாதாம்.. ரிவர்ஸ் ஆன 'ஆப்பு'.. சிவகாசி 'நாம் தமிழர் கேம்ப்' ஹேப்பி

Google Oneindia Tamil News

சென்னை: சிவகாசி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனகப்ரியா தன் மீது ஏற்படவிருந்த மிகப்பெரிய அவதூறில் இருந்து தப்பித்திருக்கிறார்.

ஆம்! சிவகாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் கனகப்ரியா கார்த்திகேயன்.

முதுகலை இயற்பியல் பட்டதாரியான இவரைப் பற்றிய சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்று, நேற்று முதல் சிவகாசி பகுதி சார்ந்த பேஸ்புக் குழுக்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.

 நாடார் குல வீர மங்கை

நாடார் குல வீர மங்கை

அந்த புகைப்படத்தில் நாடார் ஓட்டுகள் நாடாருக்கே என்றும், 'நமது நாடார் குல வீர மங்கை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில், ஷாக் என்னவெனில், நாம் தமிழர் சின்னம் கொண்ட பேஸ்புக் பக்கங்களில் இருந்து தான் இவை பகிரப்பட்டன. ஜாதிகளுக்கு எதிரான தேர்தல் களத்தை முன்னெடுக்கும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் சித்தாந்தத்துக்கே இந்த புகைப்படம் எதிராக இருந்ததால், நமது ஒன் இந்தியா தமிழ் சார்பில், சிவகாசி நாம் தமிழர் அணியை தொடர்பு கொண்டோம். அதில், இந்த புகைப்படம் முற்றிலும் போலியானது என்று தெரிவித்துள்ளார்.

 ரிப்போர்ட் அடித்தோம்

ரிப்போர்ட் அடித்தோம்

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "நேற்று இரவு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கனகப்ரியா கார்த்திகேயனை சாதிய ரீதியாக குறிப்பிடும் வகையில், புகைப்படம் ஒன்றை சித்தரித்து, FAKE IDs மூலம் அனைத்து சிவகாசி பகுதி சார்ந்த முகநூல் குழுக்களிலும் சிலர் பகிர்ந்தனர். அது எங்கள் பார்வைக்கு வந்தவுடன் அந்த பதிவை உடனடியாக REPORT அடித்தோம். அதன் பிறகு, அந்தந்த குழு அட்மின்கள் பகிரப்பட்ட புகைப்படத்தை உடனடியாக நீக்கினர்.

 ஃபேக் ஐடி குரூப்

ஃபேக் ஐடி குரூப்

ஆனாலும், பெண்களை தவறாக சித்தரிக்கத் துணியும் அந்த FAKE IDs நபர்களை கண்டறிய நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக இணைய குற்றப்பிரிவில் சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் இன்று காலை புகார் அளித்துள்ளோம்.

 இது அழகல்ல

இது அழகல்ல

பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவோ, சாதியரீதியாகவோ தவறான செய்திகளை தவறுதலாக யாரும் யாருக்கும் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். வெற்றியோ தோல்வியோ, ஆரோக்கியமான அரசியலுக்கு இது அழகல்ல" என்றனர்.

 அவர் நாடாரே இல்லையாம்

அவர் நாடாரே இல்லையாம்

இதற்கு பிறகு அவர்கள் சொன்ன விஷயம் தான் ஹைலைட். முதலில் நாம் தமிழர் வேட்பாளர் கனகப்ரியா நாடார் சமூகத்தையே சேர்ந்தவர் கிடையாதாம். 'எங்கள் வேட்பாளர் மீது அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அந்த போலி குரூப் செயல்பட்டதே தவிர, அவர்களது கிரவுண்ட் ஒர்க்கே இப்படி தவறாக பல்லை இளித்துக் கொண்டிருப்பதை பார்த்தால் எங்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை" என்றனர்.

English summary
Naam Tamilar katchi sivakasi kanagapriya
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X