நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை.. மன உளைச்சல்..பண மோசடி புகாருக்கு கோபி நயினார் விளக்கம்
சென்னை: பண மோசடி செய்ததாக கோபி நயினார் மீது பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இலங்கை பெண் தொழிலதிபர் புகார் கூறியுள்ள நிலையில் தனக்கும் அந்த பணத்திற்கும் எந்தவிதமான தொடர்பு கிடையாது என்று தெரிவித்துள்ளார். என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் நடந்துக் கொள்வதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கோபி நயினார் தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் இலங்கை தமிழ் பெண் தொழிலதிபர் சியாமளா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சியாமளா,
சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தமிழில் படங்களை தயாரிக்க ஆசைப்பட்டேன்.

கடந்த 2018ம் ஆண்டு சினிமா வட்டாரங்கள் மூலம் ஆக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜின் அறிமுகம் கிடைத்தது.
அவர் இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் கருப்பர் நகரம் படத்தை தயாரித்து வருவதாகவும், அப்படத்தில் என்னை இணைந்து தயாரிப்பாளராக செயல்படுமாறும் தெரிவித்தார்.
அதன்பின்னர் கோபி நயினாரை நேரில் சந்தித்தோம், அவரும் விஜய் அமிர்தராஜுடன் இணைந்து படம் தயாரிக்கலாம் என கூறினார். அதன்பின்னர் அவரது வாக்குறுதியை ஏற்று, பல்வேறு தவணைகளாக மொத்தம் 30 லட்சம் ரூபாயை விஜய் அமிர்தராஜிடம் கொடுத்தேன், ஐந்து லட்சத்தை கையில் பணமாக கொடுத்தேன் என்றும் சியாமளா கூறினார். ஒருநாள் படப்பிடிப்பு தொடங்கியது, ஆறு மாதத்தில் படத்தை முடித்து விடலாம் எனவும் படத்தின் லாபத்தில் 25 சதவீதம் தருவதாகவும் தெரிவித்தனர்.
அதனை நம்பி நான் பிரான்சிற்கு சென்றுவிட்டேன், சில மாதங்கள் கழித்து விஜய் அமிர்தராஜிடம் படம் குறித்து கேட்டபோது தற்காலிகமாக படம் நிறுத்தபட்டுவிட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து விஜய் அமிர்தராஜ் மற்றும் கோபி நயினார் இருவரும் எனது தொடர்பை முற்றிலுமாக துண்டித்து விட்டனர், பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. எனவே விஜய் அமிர்தராஜ் மற்றும் கோபி நயினார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளித்துள்ளேன் என்று கூறினார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் காலை இயக்குநர் கோபி நயினார் தனக்கும் அந்த பணத்திற்கும் எந்தவிதமான தொடர்பு கிடையாது என்றும் திட்டமிட்டு தன் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் அதற்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பு இல்லை என இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,'' சியாமள யோகராஜ் என்பவர் என்மீது ஒரு புகார் அளித்துள்ளார். 'கருப்பர் நகரம்' என்ற படத்தை நான் இயக்குகிறேன், விஜய் அமிர்தராஜ் என்பவர் தயாரிக்கிறார். அந்த படத்தை தயாரிக்க அவருக்கு 30 லட்சம் கொடுத்தாகவும் அவர் ஏமாற்றி விட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் என்னுடைய பெயரையும் அவர் சேர்த்துள்ளார்.
இந்த படத்தைப் பொறுத்தவரை நான் இயக்குநர் மட்டுமே. எங்க கடன் வாங்குகிறார்கள் யாரிடம் கடன் வாங்குகிறார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. என்னுடைய பெயரை அவர் அதில் இணைக்கிறார். அதற்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை நான் ஒரே ஒருமுறைதான் பார்த்துள்ளேன். அவர் இலங்கை தமிழர் என்பதால் நான் அவரிடம் பழகினேன்.
என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் நடந்துக் கொள்வதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளேன். பணம் கொடுக்கல் வாங்கல் குறித்து எந்த தகவலும் என்னிடம் கேட்கவில்லை என்று கூறினார்.
கடந்த இரு தினங்களாக இதில் நான் பண மோசடி செய்ததாக சில ஊடகங்களும் தனி நபர்களும் பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றனர். என் மேல் பொய் புகார் கொடுத்த சியாமளா யோகராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன் என்றும் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications