சென்னை ஐஐடியில் தீக்குளித்த ஆராய்ச்சி மாணவர்.. நடந்தது என்ன?.. விவரிக்கும் குடும்ப நண்பர்
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் ஆராய்ச்சி மாணவர் உன்னி கிருஷ்ணன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து அவரது குடும்ப நண்பர் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் ஆராய்ச்சி மாணவரான கொச்சியை சேர்ந்த உன்னி கிருஷ்ணன் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது வேளச்சேரி வீட்டிலிருந்து 11 பக்கம் கொண்ட தற்கொலை கடிதத்தை போலீஸார் கண்டெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த மாணவரின் இறப்பு குறித்து குடும்ப நண்பர் பேட்டி அளிக்கையில், இறப்பதற்கு முன்னர் காலை 11 மணிக்கு அவருடைய தாயுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது எந்தவித பரபரப்பும் இல்லாமல் பதற்றமும் இல்லாமல் எப்போதும் பேசுவது போல் பேசியுள்ளார்.
சில மணி நேரம் கழித்து அவர் இறந்துவிட்டதாக வந்த தகவல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை.

தந்தை
போலீஸாரின் இறுதி அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அதை வைத்துதான் அவர் எப்படி இறந்தார் என தெரியவரும். இந்த சம்பவம் எப்போது நடந்தது என சரியான நேரம் குறித்து தெரியவில்லை. காவல் நிலையத்திற்கு அன்று மாலை 6 மணிக்கு தகவல் தெரிந்துள்ளது. அவர்கள் மாணவனின் தந்தைக்கு போன் செய்து நடந்தவற்றை தெரிவித்துள்ளனர்.

தகவல்
நான் சென்னையில்தான் இருக்கிறேன். எனக்கு இரவு 10.30 மணிக்கு தகவல் தெரிந்தது. இதையடுத்து காலையில் வந்தோம். அவரது தற்கொலைக்கான கடிதம் கிடைத்துள்ளது. அதை போலீஸார் எங்களிடம் காட்டினர். அந்த ஆவணங்களை பார்க்கும் போது அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டியது போல் தெரியவில்லை.

ஐஐடி
சிசிடிவி காட்சிகள் மூலம் ஐஐடிக்குள் உன்னி நுழையும் நேரம் வெளியே வரும் நேரங்களை பார்த்தோம். என்ன பிரச்சினை என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் உன்னி எழுதிய தற்கொலை கடிதத்தை பார்த்தால் ஒரு பிரச்சினையும் இருப்பது போல் தெரியவில்லை.

மாலை இறப்பு
6 மணிக்கு தகவல் வருகிறது. காலை 10.30 மணிக்கு ஐஐடியில் வகுப்பிலிருந்து வெளியே வந்துள்ளதாக சொல்கிறார்கள். மாலை 6 மணிக்குத்தான் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை. லாக்டவுனால் அங்கு யாரும் இல்லாததால் இந்த சம்பவம் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க முடியவில்லை என்றுதான் தெரிகிறது என்றார்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications