வானத்தை போல மனசுதான்! போலீசார், தேமுதிகவினருக்கு குடிநீர் கொடுத்து தாகம் தணித்த குடும்பத்தினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கோயம்பேடு அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்து நின்ற பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் அப்பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினர் தண்ணீர் பாட்டில் கொடுத்து உதவினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நடிகரும் தேமுதிகவின் நிறுவன தலைவருமான விஜயகாந்த் இன்று காலை 6.10 மணியளவில் காலமானார். விஜயகாந்த் உயிரிழந்த செய்தி அறிந்து அவரது ரசிகர்களும் தேமுதிக கட்சியினரும் கண்ணீருடன் சென்னை நோக்கி படையெடுத்தனர். பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

family quenched thirst by giving drinking water to the police and the dmdk cadres in Chennai koyembedu office

விஜயகாந்த் உடலுக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாரைசாரையாக அணி வகுத்து வந்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொண்டர்கள் கூட்டம் அளவுக்கதிமாக இருப்பதால் பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதால் மக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கோயம்பேடு அலுவலகம் அருகே குவிந்துள்ள பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் அப்பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினர் தண்ணீர் பாட்டில் கொடுத்து உதவினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+