யாருனு பார்த்தீங்களா.. நம்ம சின்னி ஜெயந்த் மகன்தான்.. திருப்பூர் சப் கலெக்டராக பதவியேற்றார்.. ஹேப்பி
சின்னி ஜெயந்த் மகன் திருப்பூர் சப் கலெக்டராக இன்று காலை பொறுப்பேற்று கொண்டார்
சென்னை: திருப்பூர் சார் ஆட்சியராக நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஸ்ருதுஞ்ஜெய் நாராயணன் பொறுப்பேற்றார். அவருக்கு அதிகாரிகளும், உறவினர்களும் வாழ்த்து கூறினார்கள்.
பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திர கலைஞருமானவர் சின்னி ஜெயந்த்.. வழக்கமாக சினிமா பிரபலங்களின் வாரிசுகள், சினிமா துறைக்குள் செல்வதே வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், நடிகர் சின்னி ஜெயந்த், தன் மகனை சிறந்த முறையில் படிக்க வைத்துள்ளார். இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75-வது இடத்தைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் பயிற்சி பெற்று வந்த சப்-கலெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டனர். அதன்படி திருப்பூர் சப்-கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் சப்-கலெக்டராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் பணி நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து புதியதாக நியமிக்கப்பட்ட ஸ்ருதன்ஜெய் நாராயணன் திருப்பூர் சப்-கலெக்டராக இன்று காலை பதவி ஏற்றார். திருப்பூர் மக்களின் நலன் சார்ந்தவையாகவே எனது முழு உழைப்பும் இருக்கும் என்று அப்போது சப் கலெக்டர் நம்பிக்கையுடன் கூறினார்.. அதுமட்டுமல்ல, என்னுடைய முழு உழைப்பும் திருப்பூர் மக்களுக்காக இருக்கும் என்பதுடன், திரைத்துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எனது பெற்றோர் சிறு வயது முதலே கல்வியை முதன்மையாக போதித்தனர், அவர்களுக்கு எனது நன்றி என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications