பிரபல நடிகர் மோகன் சர்மா மீது கொடூர தாக்குதல்.. கண், கால்களில் பலத்த அடி.. சென்னையில் ஒரே பரபரப்பு
சென்னை: பிரபல நடிகர் மோகன் சர்மா மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. தன்னை வழிமறித்து தாக்கியவர்கள் மீது மோகன் சர்மா போலீசில் புகார் தந்துள்ளார். என்ன நடந்தது?
மோகன் சர்மா திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல், சினிமா தயாரிப்பாளரும் கூட.. இப்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். தன்னுடைய குடும்பத்தோடு சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் வசித்து வருகிறார்.

மோகன் சர்மா: இந்த நிலையில், சம்பவத்தன்று தி.நகர் சென்ற மோகன் சர்மா, அன்றைய தினம் இரவு, தன்னுடைய வீட்டுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.. அப்போது ஹாரிங்டன் சாலை, 10வது அவென்யூ சந்திப்பில் மர்ம நபர்கள் சிலர் நடிகர் மோகன் சர்மாவின் காரை வழிமறித்தனர்.. பிறகு, அவரை கீழே தள்ளி கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்..
இந்த தாக்குதலில் நடிகர் மோகன் சர்மாவுக்கு இரண்டு கண்களுக்கு கீழே காயமும், கால் மற்றும் கால் முட்டிகளில் சிராய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.. இதனையடுத்து உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மோகன் சர்மா அனுமதிக்கப்பட்டார்.. அங்கு சிகிச்சை பெற்ற நடிகர் மோகன் சர்மா, சேத்துப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில், மர்ம நபர்கள் தன்னை தாக்கியது குறித்து புகார் அளித்துள்ளார்.
புரோக்கர்கள்: இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் முன்விரோதம் என்று சொல்லப்படுகிறது.. அதாவது, மோகன் சர்மா போயஸ் கார்டனில் தனக்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை விற்க, கடந்த வருடம் தனியார் நிறுவனத்தில் விளம்பரம் செய்திருந்தாராம்..
எனவே, சேகரன், அவரது மகன் கிருஷ்ணகுமார் ஆகிய 2 புரோக்கர்கள் மூலம் மருத்துவர் ராஜா ரமணன் என்பவருக்கு, கடந்த வருடமே இந்த வீட்டை விற்பனையும் செய்திருக்கிறார்.
ஆனால், வீட்டை விற்பனை செய்த நாள் முதல், இடைத்தரகர்கள் 2 பேருமே அத்துமீறி நுழைந்து வீட்டில் குடியிருந்து வருவதாக மோகன் சர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.. இதனால்தான், மோகன் சர்மாவுக்கும், புரோக்கர்களுக்குமிடையே தகராறு இருந்து வந்துள்ளது.. இதை அடிப்படையாக வைத்தே, மோகன் சர்மா காரில் சென்றபோது அவரை தாக்கியாக தெரிகிறது.
போட்டோக்கள்: தன்னை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ள நிலையில், போலீசாரும் அது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்து, மூக்கில் கட்டுப்போட்டு சிகிச்சை பெற்று வரும் மோகன் சர்மாவின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications