நடிகை ரோஜா "மாட்லாடினதுமே".. டக்குனு பார்த்த மாறன்.. ஸ்டாலினுக்கு "எதிரி" இருக்கிறாராமே.. ஓ.. "அவரா"
முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சென்னை: சென்னையில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார் ஆந்திர அமைச்சருமான நடிகையுமான ரோஜா.. அப்போது அவர் பேசிய பிறந்தநாள் வாழ்த்து செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திர அரசியலில் ஃபயர் பிராண்ட் என்ற பெயரை பெற்றவர் நடிகை ரோஜா.. ஆந்திராவின் அமைச்சராக பல்வேறு திட்டங்களை முன்னின்று செயல்படுத்தி கொண்டிருப்பவர்.
இந்த அதிரடிகளுக்கெல்லாம், தனக்கு பெரிதும் காரணமாகவும், உந்துதலாகவும் இருப்பது மறைந்த ஜெயலலிதா தான் என்றும், அவரது பாணியையே தான் கையில் எடுத்து வருவதாகவும் அடிக்கடி நெகிழ்ச்சியுடன் சொல்லி வருகிறார் ரோஜா.

ரோஜா ரோஜா
இதில் கைத்தறி நெசவாளர்களுக்கு ரோஜா ஆரம்ப காலம் முதலே ஆதரவாக இருந்து வருகிறார்.. அவர்களின் வாழ்வாதாரத்துக்காக பல ஏற்பாடுகளையும் விடாமல் ரோஜா செய்து கொண்டிருக்கிறார்.. அதே முயற்சியை தமிழகத்திலும் ஏற்படுத்தவும் முயன்றார்.. அதற்காகவே கடந்த வருடம், தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்.. தமிழக நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்காக தான் ஆரம்பிக்க போகும் திட்டங்கள் குறித்து முதல்வரிடம் ரோஜா எடுத்துரைத்தார்.

அண்ணா அண்ணா
"அங்கே எங்களுடைய முதல்வர், என்னுடைய அண்ணா, ஜெகன் மோகன் ரெட்டி, நெசவாளர்களுக்கு நிறைய சப்போர்ட் பண்றார்.. அதே மாதிரி ஸ்டாலின் சார்கூட சப்போர்ட் பண்ணுவார்னு ரொம்ப நம்பறேன்.." என்று செய்தியாளர்களிடமும் தெரிவித்திருந்தார்.. அத்துடன் முதல்வர் ஸ்டாலின் உருவம் பொறிக்கப்பட்டு நெசவாளர்கள் உற்பத்தி செய்த பட்டு சால்வையை முதல்வருக்கு பரிசாகவும் அளித்து விட்டு சென்றார் ரோஜா..! இதனிடையே, ஆந்திர தமிழக எல்லையோர பகுதிகளிலிருக்கும் பள்ளிக்கூட மாணவர்களுக்கு தமிழ் புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் கோரிக்கை விடுத்திருந்தார்...

மயில்சாமி
நம் முதல்வரும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை இலவசமாக வழங்கினார். இதற்கு ரோஜாவும் நன்றி தெரிவித்து பேசி இருந்தார்... இப்படி ரோஜா முன்வைக்கும் அனைத்து கோரிக்கைக்கும் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்ததால், மின்னலை விட வேகமானவர் என்றும் புகழ்ந்திருந்தார் ரோஜா... கடந்த வருடம், முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கூட்டம், புரசைவாக்கத்தில் நடந்தது.. இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, இயக்குனர் சுசி கணேசன், நகைச்சுவை நடிகர்கள் பாஸ்கர், திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே செல்வமணி, நடிகை ரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதுமட்டுமல்ல, மறைந்த மயில்சாமியும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தார்.

பவர்ஃபுல் துறை
அப்போது மேடையில் பேசிய ரோஜா, "எனக்கு தாய்வீடு ஆந்திரா என்றால், தமிழ்நாடு மாமியார் வீடு... இங்குள்ள மக்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. தமிழ்நாட்டிற்கு நான் வந்தது 2 நபர்களுக்காகத்தான்... ஒன்று முதல்வர் ஸ்டாலின், மற்றொன்று அமைச்சர் சேகர்பாபு... பொதுமக்களுக்கு செய்யும் நல்ல திட்டங்களால், நிச்சயம் இன்னும் 30 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் மட்டுமே திகழ்வார்... அறநிலையத்துறைக்கு அமைச்சராக சேகர்பாபு பதவியேற்ற பிறகுதான் அந்த துறையின் பவர் என்ன என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது... அந்த அளவிற்கு சிறப்பாக அமைச்சர் சேகர்பாபு செயல்பட்டு வருகிறார்" என்று ரோஜா புகழ்ந்து பேசியிருந்தது பலரது கவனத்தையும் அப்போது திருப்பியிருந்தது.

நடிகை ரோஜா
இந்நிலையில், இன்றையதினமும் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரோஜா கலந்து கொண்டுள்ளார்.. சென்னை கிழக்கு மாவட்ட கழகம் சார்பாக துறைமுகம் சட்டமன்ற தொகுதி - இராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கரு.பழனியப்பன், அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ், ஆர்கே செல்வமணி, சுதா ரகுநாதன் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர். தொடர்ந்து ரோஜா பேசும்போது, சேகர் பாபு சார்.. செயல்பாபு சார்.. ஏன் என்றால், எதை செய்தாலும் வித்தியாசமாக, பிரம்மாண்டமா, சிறப்பாக செய்வார். அதில் கலந்து கொள்வதே நம்முடைய லக் என்றே சொல்லலாம்..

ஹேப்பி பர்த்டே
நாம எல்லாரும், சிஎம் ஸ்டாலின் சாருக்கு, இங்கே மொத்தமாக சேர்ந்து ஒரே முறை வாழ்த்து சொல்லலாமா? ரெடி 1, 2, 3... ஹேப்பி பர்த்டே ஸ்டாலின் சார், ஹேப்பி பர்த்டே.. என்று ரோஜா சொல்லவும், ஒட்டுமொத்த அரங்கமும் ஹேப்பி பர்த்டே ஸ்டாலின் சார் என்றது.. இதற்கு பிறகு ரோஜா, தெலுங்கிலும் வாழ்த்து சொல்லிவிடுகிறேன், அப்போதுதான் எனக்கு திருப்தியாக இருக்கும் என்று சொல்லி, முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை சொன்னார். தொடர்ந்து ரோஜா பேசும்போது, "பெண்களுக்கு நல்லது செய்பவர்களை எனக்கு மிகப்பிடிக்கும். ஸ்டாலின் சார் தமிழக பெண்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கி வருகிறார்.

கலைஞர் கருணாநிதி
தமிழக மக்கள் நினைத்ததுபோல் ஸ்டாலின் முதல்வர் ஆகிவிட்டார். ஆனால், அவர் முன்னால் இப்போதுதான் மிகப்பெரிய சவால் உள்ளது. ஸ்டாலின் முன் மிகப்பெரிய எதிரி ஒருவர் இருக்கிறார். அவரை ஜெயித்தால் மட்டுமே, ஸ்டாலின் வெற்றிகரமான முதல்வராக வருவார். அந்த எதிரி யார் தெரியுமா என்று கூட்டத்தினரை பார்த்து கேட்டார்.. பிறகு ரோஜாவே தொடர்ந்து பேசினார்.. அந்த எதிரி கலைஞர் கருணாநிதி அவர்கள்தான். கருணாநிதி தமிழகத்துக்கு மிகப்பெரிய சாதனை திட்டங்களை கொடுத்தவர். அவர் செய்ததை மிஞ்சி, அவரைத் தாண்டி மக்களுக்கு செய்தால்தான் ஸ்டாலின் வெற்றிகரமான முதல்வராக முடியும்.

தெலுங்கில் மாட்லாடி
ஏனென்றால், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அரசியலுக்கு வரும்போது அவரின் தந்தையை ஒப்பிட்டு பேசினார்கள். அவரின் அப்பா செய்ததை போல, ஜெகன்மோகனால் செய்ய முடியாது என்று விமர்சித்தார்கள். ஆனால், இன்றைக்கு முதல்வர் ஆனபின் அப்பாவை விஞ்சிய முதல்வர் என்று ஜெகன்மோகன் பெயரெடுத்துள்ளார். தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். அதன்படி, கருணாநிதியை விஞ்சிய முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் என இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என்றார்.. ஸ்டாலின் முன் மிகப்பெரிய எதிரி ஒருவர் இருக்கிறார். அவரை ஜெயித்தால் மட்டுமே, ஸ்டாலின் வெற்றிகரமான முதல்வராக வருவார் என்று ரோஜா பேசியிருந்ததும், தெலுங்கிலேயே ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லியிருந்ததும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications