Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை ரோஜா "மாட்லாடினதுமே".. திணறிய திருவள்ளூர்.. அப்ப ஸ்டாலின்.. இப்ப உதயநிதி.. பூரித்துபோன அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

நடிகை ரோஜா "மாட்லாடினதுமே".. திணறிய திருவள்ளூர்.. அப்ப ஸ்டாலின்.. இப்ப உதயநிதி.. பூரித்துபோன அமைச்சர்

சென்னை: திருவள்ளூரில் நடிகை ரோஜா பேசியுள்ளது, இணையத்தில் வைரலாகிகொண்டிருக்கிறது.. திமுக அரசை அபாரமாக புகழ்ந்து தள்ளிவிட்டார் நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான ரோஜா..!!!

famous actress roja has praised tamil nadu cm mk stalin and udhayanidhi stalin near Thiruvallur

ஆந்திர அரசியலில் ஃபயர் பிராண்ட் என்ற பெயரை பெற்றவர் நடிகை ரோஜா.. ஆந்திராவின் அமைச்சராக பல்வேறு திட்டங்களை முன்னின்று செயல்படுத்தி கொண்டிருப்பவர்.
இந்த அதிரடிகளுக்கெல்லாம், தனக்கு பெரிதும் காரணமாகவும், உந்துதலாகவும் இருப்பது மறைந்த ஜெயலலிதா தான் என்றும், அவரது பாணியையே தான் கையில் எடுத்து வருவதாகவும் அடிக்கடி நெகிழ்ச்சியுடன் சொல்லி வருகிறார் ரோஜா.

நடிகை ரோஜா: இதில் கைத்தறி நெசவாளர்களுக்கு ரோஜா ஆரம்ப காலம் முதலே ஆதரவாக இருந்து வருகிறார்.. அவர்களின் வாழ்வாதாரத்துக்காக பல ஏற்பாடுகளையும் விடாமல் ரோஜா செய்து கொண்டிருக்கிறார்.. அதே முயற்சியை தமிழகத்திலும் ஏற்படுத்தவும் முயன்றார்.. அதற்காகவே கடந்த வருடம், தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்.. நம் முதல்வரும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை இலவசமாக வழங்கினார். இதற்கு ரோஜாவும் நன்றி தெரிவித்து பேசி இருந்தார்...

இப்படி ரோஜா முன்வைக்கும் அனைத்து கோரிக்கைக்கும் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்ததால், மின்னலை விட வேகமானவர் என்றும் புகழ்ந்திருந்தார் ரோஜா... கடந்த வருடம், முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கூட்டம், புரசைவாக்கத்தில் நடந்தபோதும், இந்த வருடம் பிறந்தநாள் கூட்டம் நடந்தபோதும் அதில் பங்கேற்று சிறப்பித்திருந்தார் ரோஜா..

ஹேப்பி பர்த்டே சார்: "நாம எல்லாரும், சிஎம் ஸ்டாலின் சாருக்கு, இங்கே மொத்தமாக சேர்ந்து ஒரே முறை வாழ்த்து சொல்லலாமா? ரெடி 1, 2, 3... ஹேப்பி பர்த்டே ஸ்டாலின் சார், ஹேப்பி பர்த்டே.. என்று ரோஜா சொல்லவும், ஒட்டுமொத்த அரங்கமும் ஹேப்பி பர்த்டே ஸ்டாலின் சார்" என்றது.. இதற்கு பிறகு ரோஜா, "நான் ஒருமுறை தெலுங்கிலும் வாழ்த்து சொல்லிவிடுகிறேன், அப்போதுதான் எனக்கு திருப்தியாக இருக்கும் என்று சொல்லி, முதல்வர் ஸ்டாலினுக்கு தெலுங்கில் வாழ்த்துக்களை சொன்னார்.

தொடர்ந்து ரோஜா பேசும்போது, "பெண்களுக்கு நல்லது செய்பவர்களை எனக்கு மிகப்பிடிக்கும். ஸ்டாலின் சார் தமிழக பெண்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கி வருகிறார். தமிழக மக்கள் நினைத்ததுபோல் ஸ்டாலின் முதல்வர் ஆகிவிட்டார். ஆனால், அவர் முன்னால் இப்போதுதான் மிகப்பெரிய சவால் உள்ளது. ஸ்டாலின் முன் மிகப்பெரிய எதிரி ஒருவர் இருக்கிறார். அவரை ஜெயித்தால் மட்டுமே, ஸ்டாலின் வெற்றிகரமான முதல்வராக வருவார். அந்த எதிரி யார் தெரியுமா? அந்த எதிரி கலைஞர் கருணாநிதி அவர்கள்தான்.

குட்டி பதினாறு அடி: கருணாநிதி தமிழகத்துக்கு மிகப்பெரிய சாதனை திட்டங்களை கொடுத்தவர். அவர் செய்ததை மிஞ்சி, அவரைத் தாண்டி மக்களுக்கு செய்தால்தான் ஸ்டாலின் வெற்றிகரமான முதல்வராக முடியும். தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். அதன்படி, கருணாநிதியை விஞ்சிய முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் என இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என்றார்.. ஸ்டாலின் முன் மிகப்பெரிய எதிரி ஒருவர் இருக்கிறார். அவரை ஜெயித்தால் மட்டுமே, ஸ்டாலின் வெற்றிகரமான முதல்வராக வருவார் என்று ரோஜா பேசியிருந்ததும், தெலுங்கிலேயே ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லியிருந்ததும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

உதயநிதி ஸ்டாலின்: கருணாநிதியை பாராட்டிய ரோஜா, பிறகு ஸ்டாலினை பாராட்டிய ரோஜா, இப்போது உதயநிதியையும் பாராட்டி பேசியிருக்கிறார்.. திருவள்ளூரை அடுத்த புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா கலந்து கொண்டார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஆந்திராவில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில் நேரடியாக உதவி கிடைத்துள்ளது. இதனால் அனைத்து தரப்பில் இருந்தும் ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

நகரி மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள நெசவாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள் தயார் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஜவுளி பூங்கா அமைக்கவும் தொடர்ந்து மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வலியுறுத்தி வருகிறோம். இப்போது உயர்ந்துள்ள மின்சார கட்டணம் நெசவாளர்களை பாதிக்காத வகையில் ஆந்திர மாநில அரசு சிறப்பு உத்தரவு வழங்கி உள்ளது. அந்த உத்தரவு ஏப்ரல் இறுதி வாரத்தில் அமலுக்கு வரும். அப்போது நெசவாளர்கள் மீதான மின்சார கட்டணம் அதிகமின்றி இருக்கும்.

2 பேருமே அமைச்சர்கள்: தமிழ் வழிக்கல்வியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்க கோரிக்கை வைத்தேன். அதை விரைவாக வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டார். தமிழக அரசியலில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். அதேபோல் நானும் அமைச்சராக உள்ளேன்.. நாங்கள் 2 பேருமே சினிமா துறையிலிருந்து வந்தவர்கள்.. இதனால், ஒரே துறையில் பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இப்போதைய சூழலில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநராக உள்ளேன். தமிழகத்திற்கு விளையாட்டு தொடர்பாக எந்த கோரிக்கை வைத்தாலும், அதற்கு நான் உறுதுணையாக இருந்து செய்து கொடுக்க தயாராகவே உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.. நடிகை ரோஜாவின் இந்த பேச்சுக்கள் இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+