சௌகார் ஜானகி அசரலயே.. ஷூட்டிங்கில் "அந்த நடிகை" பிரச்சனை பண்ணிட்டாங்க.. யாரது?.. கிரேட் சவுகார் ஜானகி
சென்னை: கலையையே உயிர்மூச்சாக வாழும் கலைஞர்களிடம் கற்க வேண்டியதும், அறிய வேண்டியதுமான விஷயங்கள் எத்தனையோ உள்ளன.. அந்தவகையில், பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியும் ஒருவர்.
சவுகார் என்ற படத்தில் நடித்ததால் இந்த பெயர் நிலைத்துவிட்டது.. எந்த பேட்டிகள் என்றாலும், அதில், இளமை காலத்தில் தன்னுடைய குடும்ப வறுமையை மறக்காமல் நினைவுகூர்பவர் சௌகார் ஜானகி.

பால்ய விவாகம்: "சவுகார்" பட வசனத்தை தூக்கத்தில் எழுப்பி இப்போது கேட்டாலும் சொல்வேன். எனக்கு 15 வயதிலேயே பால்ய விவாகம் நடந்துவிட்டது... விஜயவாடாவில் குடியேறினோம். கணவருக்கு வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டோம். சென்னை வந்து தங்கி பல சோதனைக்கு பிறகு சவுகார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் எனக்கு ரூ.2,500 சம்பளம் தந்தாங்க.. குடும்ப கஷ்டத்தில் இருந்து மீளத்தான் சினிமாவுக்கு வந்தேன்" என்றார்.
ஜெமினி நிறுவனம் தயாரித்த "ஒளிவிளக்கு" படத்தின்போது தயாரிப்பாளர் தரப்பில் ஒரு சிக்கல் கிளம்பியது.. மக்கள் திலகம் எம்ஜிஆர், ஜெயலலிதா, செளகார்ஜானகி அந்த படத்தில் நடித்திருந்தார்கள்.
எம்ஜிஆர்: எம்ஜிஆருக்கு ஜெயலலிதா ஜோடி என்றபோதும், செளகார் ஜானகிக்கு மிக மிக முக்கியமான கேரக்டர்.. கூடுதல் முக்கியத்துவம் தந்து கதை வடிவமைக்கப்பட்டிருக்கும்.. அதுவுமில்லாமல், செளகார் ஜானகி, ஜெயலலிதாவைவிட சீனியரும்கூட.
பெரிய பிரச்சனை: எனவே ஜெமினி நிறுவனம், டைட்டிலில் எம்ஜிஆருக்கு அடுத்து, செளகார் ஜானகியின் பெயரை டைட்டிலில் போட முடிவு செய்திருந்ததாம்.. ஆனால், எம்ஜிஆர், அடுத்து ஜெயலலிதா, அதையடுத்து செளகார் ஜானகி என்று டைட்டிலில் பெயர்கள் இடம்பெற்றனவாம். இதுகுறித்து ஒரு பேட்டியில் சௌகார் ஜானகி சமீபத்தில் சொல்லியிருந்தார்..

ஜெயலலிதா: "எம்ஜிஆருக்கு ஜெயலலிதாதான் ஜோடின்னாலும் கூட, கதையின் படி எனக்கு முக்கியமான கதாபாத்திரம். ஆனா, ஜெயலலிதாவும், அவங்க அம்மாவும் பெரிய பிரச்சினை பண்ணிட்டாங்க. டைட்டில்ல, எம்ஜிஆர், அப்புறம் செளகார் ஜானகின்னு பேர் வரக்கூடாது. எம்ஜிஆர், அப்புறம் ஜெயலலிதா, அதுக்கு அடுத்ததாக, மூணாவதாகத்தான் செளகார் ஜானகி பேர் வரணும்னு எஸ்.எஸ்.வாசன்கிட்ட சண்டை போட்ருக்காங்க. இதெல்லாம் எனக்குத் தெரியாது.
பிடிவாதம்: ஆனா டைட்டில் பாத்துட்டு எனக்கு பயங்கர ஷாக். வாசன் சார்கிட்ட போய் கேட்டேன். பிடிவாதமா இருந்து கைப்பட எழுதியும் வாங்கிட்டாங்க. "தப்பா எடுக்காதீங்க செளகார். டைட்டில்ல அவங்க பேர் உங்க பேருக்கு முன்னால வந்திருக்கலாம். ஆனா படம் பாத்துட்டு உங்க கேரக்டர்தான் பேசப்படும்"னு சொன்னார். அவர் சொன்னது போலவே நடந்துச்சு. இறைவா உன் மாளிகையில் பாட்டு செம ஹிட்டு" என்று கூறியிருந்தார்.
ஆனால், இதே சவுகார் ஜானகி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பலமுறை சிலாகித்து பேசியிருந்ததையும் நாம் மறுக்க முடியாது.. பிற்காலத்தில் அவருடனான நட்பு குறித்தும், போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைத்து பலமணி நேரம் பேசியது குறித்தும் நெகிழ்ந்து பல பேட்டிகளை தந்திருக்கிறார்.
அசாத்தியம்: "அரசியலில் ஜெயலலிதா ஏற்படுத்திக்கொண்ட அசகாய வளர்ச்சி, அவருடைய பல மொழிகள் பேசும் திறமை, உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு அவர் வாழ்ந்து காட்டும் தனித்தன்மை, அவர் நாட்டுக்கு மட்டுமல்ல.. பெண்ணினத்துக்கே பெருமை. அவருடைய திறமைக்கு ஒருநாள் இந்திய பிரதமராகவே வரும் தகுதி பெற்றவர்" என்று ஜெயலலிதாவை பூரித்து சொன்னவர் சௌகார் ஜானகி..!!
இந்த அளவுக்கு பெருந்தன்மை வாய்ந்தவர்.. நிறைய விஷயங்களை சக கலைஞர்களுக்கு விட்டுக்கொடுத்தவர். படங்களில் இவர் அணியும் சேலைகள் எல்லாமே பெரும்பாலும் இவருடையதுதானாம்.. என்ன சீன் எடுக்கிறார்களோ, அதற்கேற்றால் வீட்டிலிருந்து எடுத்து வருவாராம்.

பண்பாளர்: அதேபோல, யார் இவருக்கு போன் செய்தாலும், உடனே போன் எடுத்து பேசிவிடுவாராம்.. அல்லது கொஞ்ச நேரத்தில் அவராகவே லைனில் வந்து, "வணக்கம், கூப்பிட்டிருந்தீங்களே, யார் நீங்க?" என்று விசாரிப்பாராம்.
கம்பெனி கார்கள் எத்தனையோ இருந்தாலும், தன் சொந்த காரிலேயே ஷூட்டிங் வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.. பெட்ரோலுக்கு பணம் தந்தாலும்கூட, அதை வாங்கி கொள்ள மாட்டாராம்.. சம்பள விஷயத்திலும் கறார்தன்மை கிடையாது.. பேசியபடி பணம் சற்று குறைவாக கொடுத்தாலும், நம்ம ஜெய்சங்கரை போல, அதனாலென்ன, அடுத்த படத்தில் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிடுவாராம்.. தயாரிப்பாளர்களின் சூழலை உணர்ந்து பேசுவாராம்..
ஒரு படம் சரியாக ஓடாவிட்டால், அதே நிறுவனத்தில் அடுத்த முறை படம் நடிக்கும்போது, போன படத்து சம்பளத்திலேருந்து குறைச்சே கொடுங்க. அந்த நஷ்ட பாரத்தை நானும் கொஞ்சம் ஏத்துக்கறேன் என்று தானாகவே முன்வந்து சொல்வாராம்..
உயர்ந்த பண்புகள்: சாதாரண விஷயங்களில்கூட, மூத்த கலைஞர்கள், அந்த காலத்தில் எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்தாலே சிலிர்க்கிறது.. இதுபோன்ற உயர்பண்புகளை எல்லாம், இனி வரும் ஒவ்வொரு தலைமுறைகளும் அறிய வேண்டியவை.. கற்க வேண்டியவையும்கூட..!!!
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications