பிரபல அரசியல்வாதி கரூரில் அரங்கேற்றிய B பிளான்.. தியாகராஜன் மனுவில் அந்த 1 பத்திரம்? ஆடிப்போன அறிவாலயம்
சென்னை: தமிழக தேர்தல் களம் என்றாலே சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமிருக்காது. அதிலும் குறிப்பாக வேட்புமனுத் தாக்கல் செய்யும் சமயங்களில் அரங்கேறும் அரசியல் நகர்வுகள் "அடேங்கப்பா" ரகமாக இருக்கும். அந்த வகையில், இப்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் பார்வையும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோட்டையான கரூர் மாவட்டத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதை பற்றின ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல்தான் நமக்கு கிடைத்துள்ளது.
தேர்தல் நெருங்கி வருகிறது.. நேரம் குறைவாக உள்ளது.. தலைவர்கள் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் உள்ளனர்.. களமிறங்கும் வேட்பாளர்களும் படுபிஸியாகி விட்டனர். இதில் சிலர் மன வருத்தத்திலும், சிலர் அதிருப்தியிலும், சிலர் மகிழ்ச்சியிலும் களமிறங்கி உள்ளனர்.

கரூர் பிரபல அரசியல்வாதி
அந்தவகையில், கரூர் மாவட்டத்தை நீண்டகாலமாகத் தன் கைப்பிடியில் வைத்திருப்பவர் செந்தில் பாலாஜி. கொங்கு மண்டல திமுகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் அவர், இந்த முறை கரூரில் போட்டியிடாமல் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவர் கோவைக்குச் சென்றாலும், கரூரில் நடக்கும் ஒவ்வொரு அசைவும் அவரது ஆலோசனையின் பேரிலேயே நடப்பதாக அறிவாலய வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தேர்தலுக்குப் பிறகு கோவையில் வெற்றி பெற்றுவிட்டால், அங்குள்ள அரசியலைத்தான் அதிகம் கவனிக்க வேண்டியிருக்கும்.
தியாகராஜன் பிரமாண பத்திரம்
அதேசமயத்தில், கரூரில் தனக்கு பதிலாக தனது ஆதரவாளர் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றாலும், அவர் எப்போதும் தன்னுடைய கைப்பிடிக்குள் இருப்பாரா? அல்லது அவருக்கென்று ஒரு தனி அரசியலை உருவாக்கிக் கொண்டால் என்ன செய்வது? என்ற பல்வேறு ஆலோசனைகள் செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.
இந்த சூழலில்தான் கரூர் தொகுதிக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர் தியாகராஜன் அறிவிக்கப்பட்டார்.
திமுக அறிவாலயம்
ஆனால், தியாகராஜன் வேட்புமனுத் தாக்கல் செய்தபோதுதான் அந்த அதிரடி திருப்பம் நிகழ்ந்தது. பொதுவாக திமுகவினர் வேட்புமனுக்களைப் பூர்த்தி செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள். எந்த ஒரு சின்ன தவறும் நடந்து மனு நிராகரிக்கப்படக் கூடாது என்பதில் கரூர் திமுகவினர் மிகக் கவனமாக இருப்பார்கள்..
அதிலும் குறிப்பாக, மனுக்களைப் பூர்த்தி செய்வதில் கரை கண்ட திமுக வழக்கறிஞர்கள் இருக்கும்போது பிழைகளுக்கு இடமே இருக்காது. ஆனாலும், கரூர் வேட்பாளர் தியாகராஜன் தாக்கல் செய்த மனுவில் மிக முக்கியமான "பிரமாணப் பத்திரம்" இணைக்கப்படவில்லை என்ற தகவல் கசிந்துள்ளது.
இது கவனக்குறைவால் நடந்ததா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற குழப்பம் கரூர் திமுகவினரிடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்..
கரூர் திமுக வேட்பாளர்
ஆனால், இவ்வளவு அனுபவம் வாய்ந்த ஒரு கட்சியில், இத்தனை வழக்கறிஞர்கள் முன்னிலையில் இத்தகைய அலட்சியம் நடக்க வாய்ப்பில்லை என்றே உடன்பிறப்புகள் பேசிக்கொள்கின்றனர். தியாகராஜனுக்கு மாற்று வேட்பாளர் யார் என்று தேடியபோதுதான் இந்த சீக்ரெட்டிற்கு விடை கிடைத்துள்ளது
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் தான் கரூரில் மாற்று வேட்பாளராக மனுத் தாக்கல் செய்துள்ளார். இதில் ஹைலைட் என்னவென்றால், அசோக்கின் மனுவில் அனைத்து ஆவணங்களும் "பக்காவாக" இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, தியாகராஜனின் மனு நிராகரிக்கப்பட்டால், கடைசி நேரத்தில் அசோக் அதிகாரப்பூர்வ வேட்பாளராகும் வாய்ப்பும் உருவாகி உள்ளதாம். இது தற்செயலானது அல்ல, திட்டமிட்ட அரசியல் வியூகம் என்பது தற்போதைய களத்தில் உலாவும் ஹாட் டாபிக் ஆகும்...!!
- எழில்












Click it and Unblock the Notifications