"உல்லாசம்".. படார்னு நுழைந்த போலீஸ்.. சிக்கிய "பிரபலம்".. ப்ளீஸ், அதை சொல்லாதீங்க, அதென்ன ப்ரிட்ஜில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உல்லாசமாக வாழ ஆசைப்பட்டு, கடைசியில் பொதுவெளியில் அசிங்கப்பட்டு போயுள்ளார் ஒரு பெண் பிரபலம்.. யார் இந்த பெண்? என்ன நடந்தது?
சென்னை தாம்பரத்தை அடுத்துள்ளது பெருங்களத்தூர்.. இங்கு புத்தர் நகரில் வசித்து வருபவர் சபாபதி... இவரது மனைவி பெயர் மாலதி.

2 பேருமே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்..- கடந்த வாரம் தம்பதி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தனர்..

 வாசற்படியில்

வாசற்படியில்

மாலதி மட்டும் வீட்டுக்கு திரும்பிவந்தார்.. அப்போது, வீட்டில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ந்தார்.. ஆனால் வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை... இதனால் குழப்பமடைந்தார்.. பிறகுதான் தெரிந்தது, இவர்கள் எப்போது வீட்டை பூட்டைவிட்டு, வெளியே சென்றாலும், வாசற்படியிலேயே ஒரு இடத்தில், சாவியை மறைவாக வைத்து விட்டு, போவார்களாம்.. இந்த தம்பதி இப்படி சாவியை வைப்பதை யாரோ, நோட்டமிட்டு, இப்படி கைவரிசையை காட்டி இருப்பது தெரியவந்தது.. இதையடுத்து, உடனடியாக பீர்க்கன்காரணை போலீசில் புகார் தரப்பட்டது.

 டூவீலர்

டூவீலர்

போலீசாரும் கொள்ளை நடந்த வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்... அதில் ஒரு இளம்பெண்ணின் உருவம் பதிவாகி இருந்தது.. அவர் ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட் அணிந்திருந்தார்.. ஒரு டூவீலரில் வருகிறார். ஆனால், அந்த டூவீலருக்கு நம்பர் பிளேட் இல்லை.. இதனால், அந்த பெண் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்... பெண்ணின் அடையாளம், வண்டியின் அடையாளம் எதுவுமே தெரியாததால், அந்த பகுதியில் உள்ள மொத்தம் 47 சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்..

 ஃபேமஸ் நபர்

ஃபேமஸ் நபர்

அப்போதுதான், அவர் பெயர் அமீஷா குமாரி என்பதும், அவர் ஒரு ரீல்ஸ் பிரபலம் என்பதும் தெரியவந்தது. அமீஷாவுக்கு 33 வயதாகிறது.. மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார்.. சோஷியல் மீடியாவில் இவரது ரீல்ஸ் வீடியோக்களுக்கு நிறைய ஃபாலோயர்ஸ்கள் உண்டு.. இதையடுத்து, அமீஷா குமாரியின் வீட்டுக்கு போலீசார் சென்றனர்... போலீசார் உள்ளே நுழையும்போது, சோஷியல்மீடியாவில் பதிவிடுவதற்காக, அமீஷா ரீல்ஸ் வீடியோ ரிக்கார்டிங் செய்து கொண்டிருந்தார்... போலீசாரை பார்த்ததுமே அதிர்ந்துபோனார் அமீஷா..

 ஆவேசம் அமீஷா

ஆவேசம் அமீஷா

நகை திருட்டு சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று போலீசார் சொன்னதுமே, அமீஷா குமாரி ஆவேசம் அடைந்தார்... என்னை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க.. நான் திருடினேனா? இங்க பாருங்க, சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் செய்து, மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் சம்பாதிக்கிறேன்.. எனக்கு திருட வேண்டிய அவசியம் கிடையாது" என்று போலீசாரிடம் சீறினார்.. இதனால் விசாரணைக்கு சென்ற போலீசார் ஒரு நிமிடம் திகைத்தனர்.,.. "ஒருவேளை நாமதான் தவறாக அந்த பெண்ணை சந்தேகப்பட்டு விட்டோமோ?" என்று யோசித்து குழம்பி நின்றனர்..

 ஆன் தி ஸ்பாட்

ஆன் தி ஸ்பாட்

இருந்தாலும் சிசிடிவி கேமரா பொய் சொல்லாதே என்ற அசாத்திய நம்பிக்கையில், அந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த எல்லா காட்சிகளையும் அமீஷா குமாரியிடம் கொண்டுவந்து போலீசார் காட்டினார்கள்.. அதற்கு பிறகு அமீஷா குமாரி, "கப்சிப்" மோடுக்கு போய்விட்டார்.. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை ஆரம்பிக்கவும், வீடு புகுந்து நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார். பின்னர் அமீஷா குமாரியை போலீசார் "ஆன் தி ஸ்பாட்டிலேயே" கைது செய்தனர்... திருடிய நகைகளை எல்லாம் கொண்டுபோய், வீட்டில் இருந்த ஃபிரிட்ஜ்ஜூக்குள் மறைத்து வைத்திருந்தார்.. அவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.. ஆனால், அந்த வீட்டில் திருடிய பணம் எங்கே? என்று கேட்டனர்..

 நம்பர் பிளேட்

நம்பர் பிளேட்

அதற்கு அமீஷா, அதெல்லாம் உடனே செலவு செய்துட்டேன்.. ரீல்ஸ் மூலமாக கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை.. ஆனால், எனக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசை.. ஜாலியாக வாழ ஆசை.. அதனால்தான் ஆசைப்பட்டு திருடினேன். திருடிய பணம் எல்லாத்தையுமே செலவு செய்துவிட்டேன்.. வீடுகளை பூட்டி செல்லும்போது, அவர்கள் எல்லாம் சாவியை எங்கே மறைத்து வைப்பார்கள் என்பதை நோட்டமிட்டு கொள்வேன்.. வீட்டின் அருகே மறைத்து வைத்து செல்வதால், அது எனக்கு வசதியாக போய்விட்டது.. எப்போது கொள்ளையடிக்க சென்றாலும், போலீசில் சிக்காமல் இருப்பதற்காக, டூவீலரில் உள்ள நம்பர் பிளேட்டை கழட்டி வைத்துவிட்டுதான் செல்வேன் என்று வாக்குமூலம் தந்தார்..

 OLX

OLX

இந்த அமீஷா குமாரி ரீல்ஸ் பிரபலம் என்பதால், அவரது வீடியோவுக்காக தனி ரசிகர் கூட்டமே உள்ளது.. ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ்களும் இவருக்கு உண்டு.. வித விதமாக ரீல்ஸ் செய்தும், எதிர்பார்த்த பணம் கிடைக்காததால், இப்படி கொள்ளை ரூட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.. இந்த அமீஷா குமாரி மீது ஏற்கனவே நிறைய கேஸ்கள் பதிவாகி உள்ளதாம்.. இப்படித்தான், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு, ரோட்டில் நின்று கொண்டிருந்த பைக்கை திருடிக் கொண்டுபோய், ஆன்லைனில் அதாவது ஓல்எல்எக்ஸ்ஸில் விற்றுவிட்டாராம்..

 பிரபல புள்ளி

பிரபல புள்ளி

அந்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் என்பது போலீசாருக்கே பிறகுதான் தெரியவந்தது.. இதையடுதது, இது போல் வேறு எந்தெந்த இடங்களில் கைவரிசையை காட்டி உள்ளார் என்பது குறித்து விசாரணையை துவங்கி உள்ளனர் நம் போலீசார்.. இந்த பெண்ணை கைது செய்து கோர்ட்டுக்கு அழைத்து சென்றபோது, ''நான் ஒரு பிரபலம்.. அதுவும் சோஷியல் மீடியாவில் எனக்கென்று ஃபேன்ஸ் நிறைய பேர் இருக்காங்க.. என்னுடைய போட்டோவை, வெளியிட்டு குற்றவாளி என்றெல்லாம் சொல்லிடாதீங்க, ப்ளீஸ்" என்று கெஞ்சினாராம்.. ரிலீஸ் செய்து கொண்டிருந்த பிரபலமான பெண், திருட்டு கேஸில் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 மாயாஜாலம்

மாயாஜாலம்

அதாவது, மாலதி வீட்டில் திருடிய பணத்தில், 10 ஆயிரத்தை 1 மணி நேரத்திலே செலவு செய்துவிட்டாராம்.. அதேபோல, நகைகள் திருப்பி தருவதாக சொல்லிவிட்டு, உடனடியாக போலீசாரிடம் தரவில்லையாம்.. பிறகுதான், வீட்டில் பிரிட்ஜில் மறைத்து வைத்திருந்ததை எடுத்து கொடுத்திருக்கிறார்... அதுமட்டுமல்ல, விசாரிக்க வந்திருப்பதாக போலீசார் சொன்னதுமே, கொதித்து போன அமீஷா, தன்னை கைது செய்தால் ரசிகர்கள் கொந்தளித்து விடுவார்கள், என்றும் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்... ஆனால், போலீசாரோ, "அப்படியா? யாரும் உன்னை பார்த்ததில்லையே" என்று போலீசார் கூறியதையோடு அவரை அதிரடியாக வீட்டிற்குள்ளேயே கைது செய்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+