Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்..தலையில் காயத்துடன் மரணம்

பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடல் நலக்குறைவினால் காலமானார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல பின்னணி இசைப்பாடகி வாணி ஜெயராம் வயது முதிர்வினால் காலமானார். 78 வயதாகும் வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. அந்த மகிழ்ச்சி அலைகள் ஓயும் முன்பே அவரது மறைவு செய்தி திரைப்படத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் தலையில் அடிபட்டு மரணமடைந்திருந்ததாக அவரது வீட்டு பணிப்பெண் கூறியுள்ளார்.

வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

 Famous playback singer Vani Jayaram passed away

இவரின் இசைப்பயணம் 1971 ம் ஆண்டு குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடி வருகிறார். இந்திய திரைப்படப் பாடல்களை பாடியிருந்தாலும் தனி ஆல்பம் மற்றும் பக்திப்பாடல்களை பாடியுள்ளார். வெளிநாடுகள் சென்று பல இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1974 ம் ஆண்டு தீர்க்கசுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி இயற்றிய மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும் பாடலை எம்.எஸ். விசுவநாதன் இசையில் பாடினார். இவர் திரையிசை, பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்களும் பாடியுள்ளார்.

இவர் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காலி ௭ன பல இந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். சமீபத்தில் மத்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருது அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் வீட்டிற்கு பணிப்பெண் ஒருவர் வந்து அவருக்கு தேவையான வேலைகளை செய்து கொடுத்து விட்டு செல்வார். வாணி ஜெயராம் உயிரிழந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பணியாளர், இன்றைய தினம் வழக்கமாக வீட்டிற்கு வந்த போது கதவை திறக்கவில்லை. கதவை பலமுறை தட்டியும் திறக்காமல் போகவே சந்தேகப்பட்டு கதவை உடைத்துக்கொண்டு திறந்தோம். வீட்டிற்குள் மயங்கிய நிலையில் வாணி ஜெயராம் இருந்தார். அவரது நெற்றிப்பொட்டில் அடிபட்டிருந்தது. ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்து விட்டதாக கூறினார்கள் என தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+