நடிகை கிட்ட வைர நகைகள்.. ஓடும் ரயிலில் நம்ப முடியாத சம்பவம்.. சென்னையில் பரபர.. கடைசியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளுக்கு நாள் பெண் பயணிகளுக்கு, ரயிலில் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி வருகிறது.. ஒருபுறம் பாலியல் தொல்லை, மறுபுறம் திருட்டு சம்பவங்களால், அதிர்ந்து போயிருக்கிறார்கள். இதோ சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சென்னை சூளைமேடுவை சேர்ந்தவர் ரேணுகா... இவருக்கு 30 வயதாகிறது.. தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார் ரேணுகா.. இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் பெங்களூர் சென்றுவிட்டு, அங்கிருந்து காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஞாயிறன்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.

TV Serial Actress Diamond jewellery chennai

வைர நகைகள் - ஹேண்ட் பேக்

இரவு நேரம் என்பதால், தன்னிடமிருந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான வைர நகைகளை, தன்னுடைய ஹேண்ட் பேக்கில் வைத்துவிட்டு, அந்த ஹேண்ட்பேக்கை, தனக்கு பக்கத்திலேயே வைத்துக் கொண்டு தூங்கியிருக்கிறார்..

அப்போது ரயில் வாலாஜா ஸ்டேஷனில் நின்றபோது, ஒருவர் ரேணுகாவின் பெட்டியில் ஏறி, ரேணுகாவின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார். பிறகு, சிறிது நேரம் கழித்து, ரயில் திருமுல்லைவாயில் - அம்பத்தூர் இடையே சென்று கொண்டிருந்தபோது, ரேணுகா வைத்திருந்த ஹேண்ட்பேக்கை தூக்கிக்கொண்டு செல்ல அந்த நபர் முயன்றுள்ளார்..

ஆனால், அதற்குள் ரேணுகா சுதாரித்துக் கொண்டு, ஹேண்ட்பேக்கை விடாமல் கெட்டியாக பிடித்து கொண்டார்.. அந்த நபரோ, ஹேண்ட்பேக்கை விடுவதாக இல்லை.. இதனால் ஆவேசமடைந்த ரேணுகா, அந்த ஹேண்ட் பேக்கை பிடுங்கி, ஓடும் ரயிலிலிருந்து வெளியே எறிந்துவிட்டார்..

ஓடும் ரயிலில் அட்டூழியம்

பிறகு உடனடியாக ரயிலின் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தார்.. இதனால் ரயில் மெல்ல நின்றது.. பிறகு உடனடியாக ரயிலிலிருந்து தன்னுடைய குடும்பத்தினருடன் இறங்கி, ஹேண்ட்பேக் வீசப்பட்ட இடத்தை நோக்கி ஓடினார்.. அங்கே விழுந்துகிடந்த தன்னுடைய ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.

அபாயசங்கிலி பிடித்து இழுத்ததால், தகவலறிந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாருக்கு அப்போதுதான் விஷயம் புரிந்தது.. இதனிடையே, போலீசாரை பார்த்ததுமே ரயிலிலிருந்து அந்த இளைஞர் தப்பியோட முயன்றார்.. ஆனால் அவரை சுற்றி வளைத்து பிடித்த ரயில்வே போலீசார், சென்ட்ரல் ரயில் நிலைய ஸ்டேஷனுக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

ஓட்டேரி போலீஸ்காரர்

அப்போதுதான் அந்த நபரும், ஒரு போலீஸ்காரர் என்பது தெரிந்து அதிர்ந்து போனார்கள்.. வாலாஜாவை சேர்ந்த இவரது பெயர் வசந்தகுமார்.. ஓட்டேரி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரின் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்..

ஞாயிற்றுக்கிழமை லீவு என்பதால், சொந்த ஊரான வாலாஜாவுக்கு சென்றுவிட்டு, திங்கட்கிழமை டியூட்டிக்காக ரயிலில் வந்திருக்கிறார். அப்போதுதான் ஆன்தி வேயில் இந்த திருட்டில் இறங்கியது தெரியவந்தது.. பிறகு, ரேணுகா தந்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து காவலர் வசந்தகுமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

ஓடும் ரயிலில் போலீஸ்காரர் ஒருவரே, இப்படி திருட்டில் இறங்கினால்? பொதுமக்கள் என்ன செய்வார்கள்??? எப்படித்தான் பயணம் செய்வார்கள்??

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+