சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்!
சென்னை: இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதற்காக தவெக தலைவர் விஜய் காரில் விமான நிலையம் சென்றார். அப்போது சிக்னலில் விஜய்யின் கார் நின்று கொண்டிருந்தபோது, தவெக தொண்டர் செய்த செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. பிரச்சாரத்திற்கு இன்னும் சரியாக 9 நாட்களே அவகாசம் உள்ளன. இதனால் அரசியல் கட்சித் தலைவர்களும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் பிரச்சார களத்தில் பம்பரமாக சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் சில இடங்களில் முறையான அனுமதி கிடைக்கவில்லை எனவும், அதிக கட்டுப்பாடு விதிப்பதாகவும் கூறி பிரச்சாரத்தை ரத்து செய்தும் வருகிறார். அதன்படி, கடைசியாக காரைக்குடி மற்றும் கடலூரில் நடக்கவிருந்த விஜய்யின் பிரச்சாரங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த சூழலில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து இன்று காலை புறப்பட்டார். அப்போது அவரது வீட்டிற்கு வெளியில் காத்திருந்த ரசிகர்களை பார்த்து உற்சாகமாக விஜய் கையசைத்தார். அவரை கண்ட ரசிகர்களும், தொண்டர்களும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.
சென்னை விமான நிலையம் செல்லும் வழியில் சிக்னலில் விஜய்யின் வாகனம் நின்றது. அது விஜய்யின் வாகனம் என்பதைக் கவனித்த சிக்னலில் இருந்த தவெக தொண்டர்கள் தங்கள் வாகனத்தில் இருந்து இறங்கி விஜய் காருக்கு அருகே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தவெக தொண்டர் ஒருவர் திடீரென, ஒரு பையில் இருந்த பூக்களை விஜய் கார் மீது தூவினார். விஜய் ரசிகரின் இந்தச் செயலால், சிக்னலில் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, சென்னை விமான நிலையம் சென்ற விஜய், அங்கிருந்து தனி விமான மூலம் தூத்துக்குடி விமான நிலையம் சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாகக் கன்னியாகுமரி செல்கிறார். பின்னர், மகாதானபுரம் சந்திப்பு பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் விஜய் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார் விஜய்.












Click it and Unblock the Notifications