ஹேப்பி அறிவிப்பு வந்தாச்சு.. "இவங்களுக்கு" இனிமேல் உதவித்தொகை ரூ.30,000 ஆக உயர்வு.. தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழக சட்டப்பேரவையில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.. அந்தவகையில், உதவித்தொகைகளும் துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது..!!!
தமிழ்நாடு சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. துறை ரீதியான அறிவிப்புகளை வெளியிட்டு, அமைச்சர்கள் உரையாற்றியும், உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்தும் வருகிறார்கள்.
அந்தவகையில், நேற்றைய தினம், வனத்துறை சார்பில் அறிவிப்புகளை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டார்.. குறிப்பாக, நீலகிரி வரையாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உறுதி தெரிவித்திருந்தார்.

பல்லுயிர்கள்: இதுகுறித்து பேரவையில் பேசிய அமைச்சர், " வனவிலங்குகளுக்கும், பறவைகளுக்கும், பல்லுயிர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பசுமை தமிழ்நாடு இயக்கம் முதலமைச்சரால் தொடங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு 13 ராம்சாட் தளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. யானைகள் பாதுகாப்பிற்காக முதுமலை யானைகள் சரணாலயத்தை சீரமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பது ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றார்.
இதைத்தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய அமைச்சர் மெய்யநாதன், "காற்றின் தரம் கடந்த காலங்களை விடத் தற்போது மீட்டெடுக்கபட்டுள்ளது. தமிழ்நாட்டில் தர்மபுரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 25 இடங்களில் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையம் ரூ. 49 கோடி மதிப்பீட்டில் அமைக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள 269 குப்பைக் கிடங்குகள் கண்டறியப்பட்டு அவற்றுள் 180 இடங்களில் பையோ மைனில் முறையில் குப்பைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார் மெய்யநாதன்.

சுகாதார குட்டை தகளி: பின்னர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதில் துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியிட்டிருந்தார். அதில், 385 மிகப் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி மாணவியர் விடுதி ஒன்றுக்கு 43"LED தொலைக்காட்சி ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் மற்றும் 1 DTH இணைப்பு ஆண்டொன்றுக்கு ரூ.2400 என 1 கோடியே 56 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும். 141 பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் கல்லூரி மாணவியர் விடுதிகளில் தங்கிக் கல்வி பயின்று வரும் மாணவியரின் உடல் நலத்தைப் பேண விடுதிகளுக்கு சுகாதார குட்டை தகளி (Napkin incinerator) 45 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்" என்றார்.
அதேபோல, தமிழக அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதவி பெற்ற உறுப்பினர்களுக்கு, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ. 30ஆயிரமாக உயர்த்தி இருப்பதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.. அதாவது, தமிழகத்தில் உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமூக, பொருளாதார கல்வி ஆகியவற்றில் முன்னேற்றமடைய தமிழக அரசால் 2009ம் ஆண்டு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் தொடங்கப்பட்டது... இந்த நல வாரியம் மூலமாக, அரசு வழங்கும் நலத்திட்டங்களை பெற மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினா நல அலுவலகத்தை அணுகி பயன் பெறுவார்கள்.
செஞ்சி மஸ்தான்: இந்நிலையில், சட்டப்பேரவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகையை அதிகரித்து இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. அதன்படி உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதவி பெற்ற உறுப்பினர்களுக்கு, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ₹20,000ல் இருந்து ₹30,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.. ஏழ்மை நிலையிலுள்ள சிறுபான்மை இனத்தைச் சார்ந்த மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த ஏதுவாக ஒரு தையல் இயந்திரம் ரூ.6400 மதிப்பில் 2500 மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் 1 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்படும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்படும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விபத்து மரணத்திற்கான உதவித் தொகை ரூ.1,25,000/- ஆக ரூ.1,00,000/-லிருந்து உயர்த்தப்படும்.சிறுபான்மையின மாணவர்களின் நலன் கருதி, சென்னை மற்றும் யம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 2 புதிய சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் விடுதிகள் 81 இலட்சத்து ரூபாய் செலவில் 68 ஆயிரம் துவங்கப்படும்.
கல்லறை தோட்டம்: தமிழகத்தில் உள்ள கிறித்தவர் மற்றும் இஸ்லாமியர் சமுதாயத்தினர் இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடமான கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்களுக்கு 1 கோடி ரூபாய் செலவில் புதிதாக சுற்றுச்சுவர், பாதை மற்றும் புனரமைப்பு செய்யப்படும். இயங்கும் சொந்தக் கட்டடத்தில் சிறுபான்மையினர் விடுதிகளுக்கு 1 கோடி ரூபாய் செலவில் சிறப்புப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியரின் நலன் கருதி, சென்னை மாவட்டத்தில் உள்ள இராயப்பேட்டை சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவியர் விடுதிக்கு 6 கோடியே 7 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடம் கட்டப்படும். கோயம்புத்தூர் மாவட்டங்களில் மற்றும் திருச்சி கூடுதலாக தலா ஒரு முஸ்லீம் மகளிர் உதவி சங்கம் 2 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக துவங்கப்படும். கல்லூரி மாணவர்கள் மொழி, பண்பாடு, இலக்கியம், கலைகள், வரலாறு ஆகியவற்றின் புரிதல்களை பெற்றிடும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மூலம் 1 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்" என்று செஞ்சி மஸ்தான் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications