பத்திரப்பதிவு ரூல்ஸ் மாறுது.. விவசாய நிலம் இருக்கா? விற்பனை சான்றிதழில் தமிழக பதிவுத்துறை செம அதிரடி
சென்னை: விவசாய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய மறுக்கக்கூடாது என்று சார் பதிவாளர்களுக்கு தமிழக அரசு புதிதாக உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது.
பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சார்-பதிவாளர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு இதுதான்: "மோசடி பத்திரங்களை ரத்து செய்வதற்கான சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதில், உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. இதை சரியாக புரிந்து கொள்ளாமல், பெரும்பாலான சார்- பதிவாளர்கள் செயல்படுவதாக புகார்கள் வருகின்றன.

ஆட்சேபம்: சொத்துக்கள் பரிமாற்றம் செய்ய ஆட்சேபம் தெரிவித்து, யாராவது மனு கொடுத்தால், அதை ஏற்று பதிவுக்கு வரும் பத்திரத்தை நிராகரிக்க கூடாது. மனுவில், சான்று ஆவணங்கள் முழுமையாக உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். தடை மனு கொடுப்பவருக்கு, குறிப்பிட்ட சொத்தில் உரிமை கோரவும், ஆட்சேபம் தெரிவிக்கவும், சட்டப்பூர்வ ஆதாரம் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். உரிய திருப்தி ஏற்படாத நிலையில் பத்திரங்களை நிராகரிக்க கூடாது.
சொத்தின் மதிப்பு குறைவாக குறிப்பிடப்பட்டு இருந்தால், உரிய விசாரணை நடத்தி, 47 - ஏ விதிப்படி மேல்முறையீட்டு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். அதைவிடுத்து, வழிகாட்டி மதிப்பை விட குறைவான மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறி, பத்திரத்தை நிராகரிக்க கூடாது
விற்பனை சான்றிதழ்: கடனில் மூழ்கிய சொத்துக்களை, கடனீட்டு சட்டத்தின்படி வங்கிகள் ஏலம் விடுகின்றன. இதை ஏலத்தின் எடுப்பவருக்கு, விற்பனை சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுபோன்ற விற்பனை சான்றிதழ்களை பதிவு செய்ய மறுக்கக்கூடாது. பதிய மறுப்பதாக புகார் வந்தால், சார்- பதிவாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பதிவுக்கு வரும் சொத்துக்கு பட்டா உள்ளிட்ட வருவாய் துறை ஆவணங்கள் முறையாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதேநேரம், ஆவணங்களின் உண்மை தன்மையை சரிபார்க்க வேண்டும் என்று கூறி, பத்திரத்தை நிராகரிக்க கூடாது. வருவாய் ஆவணங்களான பட்டா உள்ளிட்ட விஷயங்களை சரிபார்க்க வேண்டும்; பொதுமக்களை அலைகழிக்கக் கூடாது.
மனைப்பிரிவு: விவசாய நிலங்களை மனைப்பிரிவாக பதிவு செய்யக்கூடாது. ஆனால், குறைந்த பரப்பளவு விவசாய நிலங்களை, விவசாய நிலமாக விற்க, வாங்க தடை இல்லை. சாலையை ஒட்டியுள்ளது என்று கூறி, குறைந்த பரப்பளவில் கைமாறும் விவசாய நிலங்களை பதிவு செய்ய மறுக்கக்கூடாது. இந்த விஷயங்களில், சார்-பதிவாளர்கள் முறையாக செயல்படுவதை, மாவட்ட பதிவாளர்கள், டி.ஐ.ஜி.,க்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த 12ம் தேதிக்கு மட்டும், ஒரு சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு, 150 டோக்கன்களாக உயர்த்தி வழங்கப்பட்டது. அதனால், பொது மக்கள் எந்த சிரமமும் இல்லாமல், ஆவணப்பதிவு மேற்கொள்ள வசதி செய்யப்பட்டது... இறுதியில் அன்றைய ஒரே நாளில் மட்டும், 20,310 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில், 224.26 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கடந்த 12ம் தேதிக்கு மட்டும், ஒரு சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு, 150 டோக்கன்களாக உயர்த்தி வழங்கப்பட்டது. அதனால், பொது மக்கள் எந்த சிரமமும் இல்லாமல், ஆவணப்பதிவு மேற்கொள்ள வசதி செய்யப்பட்டது... இறுதியில் அன்றைய ஒரே நாளில் மட்டும், 20,310 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில், 224.26 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications