திருநெல்வேலியில் திருப்பம்.. நேரா வீட்டுக்கே கிளம்பி போயிட்டார் கலெக்டர்? செம ஹைலைட்.. சபாஷ் நெல்லை
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வரும்நிலையில், நெல்லை மாவட்டம் மட்டும் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறது. என்ன காரணம்?
விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க போகிறது.. தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.. இந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

விழிப்புணர்வு: இதையடுத்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமே, 100 சதவீத வாக்களிப்பதை வலியுறுத்தும்விதமாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், திருச்சி மாவட்டத்தில், நீதிமன்றம் ரவுண்டானா அருகில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வாக்காளர்கள்: 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களை தேர்தல் திருவிழாவில் பங்கேற்க அவர்களின் இல்லங்களுக்கே சென்று அழைப்பிதழ்களை வழங்கினார் மாவட்ட கலெக்டர்.
இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் அழைப்பிதழ் தரப்பட்டு வரும்நிலையில், திருநெல்வேலி மாவட்டமும் மும்முரமாகி உள்ளது. செய்தியாளர்களை சந்தித்த நெல்லை மாவட்ட உதவி ஆட்சியரும், தேர்தல் விழிப்புணர்வு அதிகாரியுமான கிஷன் குமார், "100 சதவீதம் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு: புதிதாக விளையாட்டு வடிவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், ரோடு ஷோ போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிட்டுள்ளோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்த இடங்கள் தொடர்பான கணக்கெடுக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன..
குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களில், கல்லூரி மாணவர்கள் அடங்கிய குழுக்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய போகிறோம். நெல்லை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், 10 நபர் அடங்கிய 20 குழுக்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
அழைப்பிதழ்: இதனிடையே, திருநெல்வேலி மாவட்டத்தின் தேர்தல் விழிப்புணர்வு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. காரணம், திருநெல்வேலியில் தேர்தல் அழைப்பிதழ்களை, கல்யாண பத்திரிகை போல அச்சடித்துவிட்டார்கள்.. பிறகு, தாம்பூலம் வைத்து வீடு வீடாக சென்று கொடுக்க துவங்கிவிட்டார்கள்.
இப்படி ஒரு நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்த்து நெல்லை மாவட்ட மக்களே வாயடைத்து போய்விட்டார்கள்.. மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில், பாளையங்கோட்டை, கிரிஜா நகர் பகுதியில் உள்ள விசுவாசம் (85) என்பவரது வீட்டிற்கு, நேரடியாகவே சென்றுவிட்டார்கள் அதிகாரிகள்.. அப்போது, மேளதாளம், தாம்பூல சீர்வரிசையுடன், தேர்தல் அழைப்பிதழை கொண்டுபோய் தந்தார்கள்.
தபால் வாக்குகள்: அப்போது, தபால் வாக்குக்கான விண்ணப்ப படிவத்தையும் கொண்டு சென்று வாக்களிக்க விசுவாசத்துக்கு அழைப்பு விடுத்தார்கள். அந்த அழைப்பிதழில், தேர்தல் ஆணையத்தின் சின்னத்துடன், "தேர்தல் திருவிழா, தேசத்தின் பெருவிழா" என்ற முகப்பு வாசகங்களுடன் அச்சிடப்பட்டுள்ளது..
மேலும் அந்த அழைப்பிதழில், "திருநெல்வேலி மக்களவை தொகுதி தேர்தல் திருவிழா அழைப்பிதழ். அன்புடையீர் வணக்கம். நிகழும் மங்களகரமான திருவள்ளுவராண்டு 2055 சித்திரை 6-ம் நாள் 19.4.2024 வெள்ளிக்கிழமை நலம்தரும் நன்னாளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் திருவிழா, தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச் சாவடியில் நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு: இவ்விழாவில் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து, நமது மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலைநாட்டிட அன்புடன் அழைக்கிறோம்" என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அதுமட்டுமல்ல, அழைப்பிதழுக்கு கீழே, "தங்கள் அன்புள்ள" எறு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் பெயரும், அந்தந்த சட்டப் பேரவை தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பெயரும் அச்சிடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியை அறிய கியூஆர் கோடு முத்திரையும், தகவல்கள் புகார்களுக்கான 1950, 18004258373 ஆகிய தொலைபேசி எண்களும் அதில் உள்ளன.
இதில் ஹைலைட் என்னவென்றால், "உரிமையை நிலைநாட்ட அன்பளிப்பு அளிப்பதும் பெறுவதும் பெரும் குற்றமாகும். எனவே அன்பளிப்பை தவிர்ப்பீர்" போன்ற வாசகங்களும் இடம்பெற்றிருக்கிறது. அச்சு அசல் கல்யாண பத்திரிகை போலவே இருக்கும் இந்த தேர்தல் அழைப்பிதழ்தான், தமிழக மக்களின் மனதை ஈர்த்து வருகின்றன.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications