500 ரூபாய் தினமும் வேணுமா? "இவங்களுக்கு" ரூ.2 லட்சம் கடன்.. சூப்பரான லாபம் தரும் மத்திய அரசு திட்டம்
சென்னை: பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. இதையடுத்து, கைவினை கலைஞர்களின் பெருத்த ஆதரவையும் இந்த திட்டம் தொடர்ந்து பெற்று வருகிறது.
உடலுழைப்பையும் பாரம்பரிய கருவிகளையும் பயன்படுத்தி வேலை செய்யும் கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினை தொழிலாளர்களுக்காக, மத்திய அரசு ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. இந்த கலைஞர்களை கணக்கில்கொண்டே, கடந்த 2023, செப்டம்பர் 17ம்தேதி பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.

பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் தொழில்முனைவோர் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களது நிலையை உயர்த்தவும், அறிமுகம் செய்யப்பட்ட விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின்கீழ், கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினை தொழிலாளர்களுக்கு அடமானம் இல்லாத கடன் வழங்கப்படுகிறது.
திறமைகள்: அத்துடன், திறனுக்கான பயிற்சி, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்க தொகைகள், சந்தை தொடர்பான ஆதரவு மற்றும் நவீன கருவிகள் போன்றவைகளும் இந்த திட்டம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பிரதமரின் விஸ்வகர்மா https://pmvishwakarma.gov.in/ என்ற போர்டலில் சென்று இந்த திடடத்தில், இணையலாம்.
ஆனால், 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய முடியும். பொற்கொல்லர், கல் தச்சர்கள், காலணி செய்பவர், காலணி தைப்பவர், குயவர், தச்சர், சிற்பிகள், முடி திருத்தும் தொழிலாளர், கொத்தனார், கயிறு செய்பவர், டெய்லர், சலவைத் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர் உட்பட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
ஊக்கத்தொகை: இவர்களது திறன்களை மதிப்பீடு செய்த பிறகு 15000 ரூபாய் மதிப்பிலான குறிப்பிட்ட அந்த தொழில் சம்பந்தப்பட்ட நவீன கருவிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும்... தகுதி பெறுவோருக்கு 5 முதல் 7 நாட்கள் அடிப்படை திறன் பயிற்சியும் வழங்கப்படுகிறது.. 15 நாட்கள் பயிற்சிக்கு பிறகு, ஒரு நாளைக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அடிப்படை திறன் பயிற்சியை முடித்தவர்களுக்கு 18 மாதம் திருப்பி செலுத்த வேண்டிய கால அளவு கொண்ட அடைமானம் இல்லாத 1 லட்சம் ரூபாய் வரையிலான கடன் வழங்கப்படும். மேம்படுத்தப்பட்ட பயிற்சியை முடித்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரையிலான கடன் கொடுக்கப்படும். ஆனால், முதலில் 1 லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்திய பிறகே, இந்த 2 லட்சம் ரூபாய் கடனை பெற முடியும்.
சபாஷ் நோக்கம்: பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் தொழில்முனைவோர் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளதால், முறையான பயிற்சி அளிக்கப்பட்டு, மாதந்தோறும் ரூ. 500 நிதியுதவியும் வழங்கப்பட்டு வருவது, மிகுந்த நம்பிக்கையை தந்து வருகிறது.

அதனால்தான், இந்தியாவின் 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் கைவினைக் கலைஞர்களின் பாரம்பரிய திறன்களை மேம்படுத்துவதற்கும் நவீனப்படுத்துவதற்கும் அடிப்படைத் திறன் பயிற்சி வடிவத்தில் முறையான பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது... இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 19ம் தேதி நிலவரப்படி இத்திட்டத்தின் அடிப்படை திறன் பயிற்சியில் ஏராளமானோர் பயிற்சி பெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
விண்ணப்பம்: குறிப்பாக, ஜூலை 29 வரை, 56,526 விண்ணப்பங்களுக்கு மொத்தம் ரூ.551.80 கோடி கடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 15,878 விண்ணப்பங்களுக்கு மொத்தம் ரூ.132.49 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது... அதைவிட முக்கியமாக, அடிப்படைத்திறன் பயிற்சியின் கீழ், மொத்தம் 5,17,835 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் பெற்றுள்ள பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
அமைச்சர்: நாடு முழுவதும் பிரதமரின் விஸ்வகர்மாவை சுமூகமாக செயல்படுத்துவதற்காக, தேசிய வழிகாட்டுக் குழுக்கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுவதாகவும், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் நிதிச் சேவைகள் துறை, மத்திய அரசின் நிதியமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜெயந்த் சவுத்ரி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications