வில்லங்க சான்றிதழ்.. "உடனே முடிங்க, ரொம்ப லேட் பண்ணாதீங்க".. சார் பதிவாளர்களுக்கு தமிழக அரசு அதிரடி
சென்னை: சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றினை தமிழக பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பிறப்பித்திருக்கிறார்.
உங்களது வீடு, நிலம், போன்ற சொத்துகளை வாங்க விரும்புவர்கள், சட்டப்படி அந்த இடங்கள் இல்லாமல் சரியானவைதானா? ஒருவேளை அந்த சொத்திற்கு முந்தைய உரிமையாளர்கள் இருக்கின்றார்களா? அதில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.

இதை பற்றி அறிந்து கொள்வதற்காகத்தான், வில்லங்க சான்றிதழை பெறுவார்கள். ஒருவர் விலைக்கு வாங்கும் அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம்தான் வில்லங்க சான்றிதழாகும். இந்த சொத்து, இதற்கு முன்பு யார் யாரிடம் இருந்தது? எந்தெந்த ஓனர்கள் சொத்தினை அனுபவித்தார்கள்? என்கிற விவரங்களும் வில்லங்க சான்றிதழில் முழுமையாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.
அவசியங்கள்: இதனை அறிந்துகொள்வதன் மூலம் சொத்துக்களில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்ய முடியும்... இதற்காகவே வில்லங்க சான்றிதழ்கள் அவசியமாகின்றன. அதுமட்டுமல்ல, அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெற வேண்டுமானாலும், இந்த வில்லங்க சான்றிதழ் மிகவும் முக்கியமாக தேவைப்படுகின்றன.
எனவேதான், வில்லங்க சான்றிதழை, எளிதாகவும், விரைவாகவும் பெறுவதில் தமிழக அரசு பல்வேறு வசதிகளை செய்து தந்தவாறே உள்ளது. ஆன்லைனிலும் விண்ணப்பித்து வில்லங்க சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பதிவுத்துறை அமைச்சர் முக்கிய அறிவுரைகளை சார் பதிவாளர்களுக்கு பிறப்பித்திருக்கிறார்.. சென்னையில், அனைத்து பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
ஆவணங்கள்: அப்போது அமைச்சர் மூர்த்தி பேசும்போது, "நிர்ணயிக்கப்பட்ட வருவாயை அடையவும், அரசின் வருவாயை கூட்டுவதற்கும், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சார் - பதிவாளர் அலுவலகங்களில், ஆவணப் பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு, ஆவணப்பதிவு முடிந்ததும், எந்தவிதமான குறைபாடும் இல்லாத ஆவணங்களை, பதிவு நாள் அன்றே திரும்ப அளிக்க வேண்டும்.
சார் - பதிவாளர்களால் பரிசீலனை மற்றும் இதர காரணங்களுக்காக நிலுவை வைக்கப்பட்ட ஆவணங்கள், சீராய்வு செய்யப்பட்டதில் நிலுவை ஆவணங்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பொது மக்களுக்கு வழங்கப்படும், வில்லங்க சான்றிதழ், சான்றிட்ட நகல்கள் ஆகியவற்றை, குறித்த காலத்திற்குள் வழங்க வேண்டும்.
மகிழ்ச்சி: துணைப் பதிவுத்துறை தலைவர்கள், நிர்வாக மாவட்டப் பதிவாளர்கள், தொடர் கண்காணிப்பு செய்து, சுணக்கம் ஏற்படாமல், சேவை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார். அமைச்சரின் இந்த உத்தரவானது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே, வில்லங்க சான்றிதழ்களை பெறும் வசதி ஆன்லைனில் உள்ளது.. பத்திரப்பதிவு முடிந்த மறுநாளே, வில்லங்க விபரங்களை ஆன்லைனில், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் அறிந்து கொள்ளலாம்.. மேலும், பத்திரப்பதிவு செய்தவரின் செல்போன் நம்பருக்கு SMS மூலம் ஒரு லிங்க் அனுப்பப்படும்.. அந்த குறியீட்டில் சென்றால், வில்லங்க சான்றிதழ் விவரங்களை எளிதாக அறியலாம்.
அலுவலகம்: அதேபோல, வில்லங்க சான்றிதழில் பிழைகள் ஏதாவது இருந்தால் திருத்தவும் விண்ணப்பங்கள் பெறப்படும். இதனடிப்படையில் சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து வரைவு திருத்த விபரங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு செல்லும். அங்கு தான் இந்த பிழைகள் திருத்தப்படும் என்பது குறிப்படத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications