தட்கலில் டிக்கெட் ஓகே.. கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் வேணுமா? கரண்ட் டிக்கெட் புக்கிங் வசதி சூப்பர்
சென்னை: ரயிலில் நீங்கள் அவசர பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தால், தட்கலில் டிக்கெட் எடுப்பதை தவிர வேறு வழி ஏதாவது இருக்கிறதா? கடைசி நேரத்திலும் கன்பர்ம் டிக்கெட் கிடைக்க ரயில்வே கொண்டுவந்துள்ள திட்டத்தின் பெயர் என்ன? அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
இந்தியாவில், ரயில்வே சேவையின் தேவைகள் அதிகரித்தபடி உள்ளதால், பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், ரயில்வே நிர்வாகம் ஏராளமான வசதிகளை செய்து தந்து வருகிறது.. தற்போது மழைக்காலம் துவங்கிவிட்டது.. பண்டிகை காலமும் தொடங்கிவிட்டது.. பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும்கூட, அவசர பயணம் என்பது தவிர்க்க முடியாதது.

தட்கல்: பெரும்பாலும் இதுபோன்ற நேரங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு மட்டுமே ஒரே வழியாக உள்ளது.. அப்படியே தட்கலில் செல்வதானாலும், 1 நாள் முன்னதாகவேவே ரிசர்வ் செய்ய வேண்டும்.. ஆனால் பலரும் முன்பதிவு செய்ய தொடங்குவதால், தட்கல் முறையிலும் டிக்கெட் அனைவருக்குமே கிடைத்து விடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும், தட்கல் டிக்கெட்டுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால், ரயில் புறப்படுவதற்கு 5 அல்லது 10 நிமிடத்துக்கு முன்புகூட உங்களால், உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை பெற்று ரயிலில் பயணிக்கக்கூடிய புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அவசரகாலத்தில் ரயிலில் பயணம் செய்ய ரயில்வேயின் தற்போதைய டிக்கெட் (IRCTC Current Booking) சேவை என்று இதற்கு பெயர். இந்த புதிய வசதியானது, தட்கலைவிட எளிதானது, கட்டணமும் குறைவு. அதாவது சாதாரண டிக்கெட்டை விட 10-20 ரூபாய் மலிவானது.
அதாவது, ரயிலில் சில இருக்கைகள் காலியாக இருப்பதை நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள். இந்த இருக்கைகள் காலியாக இருக்காமல் இருக்கவும், பயணம் செய்ய விரும்புவோர் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பெறவும், இந்த இருக்கைகளை முன்பதிவு செய்யும் புதிய வசதிக்குதான் "கரண்ட் டிக்கெட் புக்கிங்" என்று பெயர்.
காலி இருக்கைகள்: இந்த வசதியின் மூலம் ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள், கடைசி நேரத்தில் கரண்ட் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
கரண்ட் டிக்கெட்டுகளை ஆன்லைன், ஆஃப்லைன் என்ற 2 முறைகளில் ரிசர்வ் செய்யலாம். ஐஆர்சிடிசி வெப்சைட் மூலம் ஆன்லைனிலலும், டிக்கெட் கவுண்டரிலும் ரிசர்வேஷன் செய்யலாம். ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே கரண்ட் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும.
கட்டணம் எவ்வளவு: கரண்ட் டிக்கெட்டின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பதிவு செய்து கொள்ளலாம். அதாவது, ஜஸ்ட்ட 5 முதல் 10 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய முடியும். கரண்ட் டிக்கெட் புக்கிங் மூலம், ரயிலில் காலியாக உள்ள சீட்டில் இருக்கையில் உட்கார்ந்தபடியே எளிதாக பயணிக்கலாம்.
இதன் மூலம் ரயில் இருக்கைகள் நிரம்புவது மட்டுமின்றி, கடைசி நேரத்தில் பயணிப்போருக்கும் வாய்ப்பை தருகிறது. ஆனால், ரயிலில் பெர்த் காலியாக இருந்தால் மட்டுமே இந்த கரண்ட் டிக்கெட் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்..












Click it and Unblock the Notifications