இது லிஸ்ட்லேயே இல்லையே.. என்னாது சொத்து பத்திரமா? திடீர்னு தமிழக பத்திரப்பதிவு துறை உத்தரவு.. சபாஷ்
சென்னை: தமிழக மக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், ஏகப்பட்ட அறிவிப்புகளையும், சலுகைகளையும் பத்திரப்பதிவு துறை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இப்போது ஒரு மகிழ்ச்சி தகவலை தெரிவித்து கொண்டுள்ளது.
தமிழக அரசின் மற்ற துறைகளை போலவே பத்திரப்பதிவு துறையும் முழுக்க முழுக்க ஆன்லைன்மயமாகிவிட்டது.. அதேபோல, ஒவ்வொரு வருடமும் வருவாய் இலக்கு நிர்ணயித்து, பத்திரப்பதிவு துறை செயல்பட்டு வருகிறது.

இலக்கு: அந்தவகையில், இந்த வருடம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ ரூ.25,000 கோடி வருவாய் ஆகும்.. எனவே, இந்த இலக்கை எட்டி பத்திரப்பதிவு பயணப்பட்டு வருகிறது. இதற்காகவே, பல்வேறு அதிரடிகளையும், அறிவிப்புகளையும், வெளியிட்டு வருவதுடன், பொதுமக்களுக்கான சலுகைகளையும் வாரி வழங்கி வருகிறது.
இதில் ஒருபகுதியாக, சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த நாட்களில் மட்டும், பத்திரப்பதிவு சற்று அதிகமாகவே நடக்கும் என்பதால், கூடுதல் வசூல் கிடைத்தும் வருகிறது..
விடுமுறை நாட்கள்: இதைத்தவிர, மேலும் சில விடுமுறை நாட்களிலும் கூடுதல் பத்திரப்பதிவை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வந்ததால், அதற்கேற்றபடியும் விசேஷ டோக்கன்கள் கூடுதலாக விநியோகிக்கப்படுகின்றன.
இனி வரும் காலங்களிலும், இலக்கை எட்டிப்பிடிக்க பதிவுத்துறை மும்முரமாகி வருகிறது. அதுமட்டுமல்ல, பதிவுக்கு வரும் பொதுமக்களின் பணிகளை சிறப்பாக செய்து, புகாருக்கு இடமின்றி அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் பணிபுரிய வேண்டும் என்றும் அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கை அடைய வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
புதிய வழிமுறை: இந்நிலையில், பத்திரப்பதிவில் ஏற்பட்ட வருவாய் இழப்பை வசூலிப்பதற்கும், தொடர் பதிவுகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், பதிவுத்துறை புதிய வழிமுறையை அறிவித்துள்ளது.
அதாவது, சொத்து பரிமாற்றங்கள் தொடர்பாக பத்திரங்களை பதிவு செய்யும்போது, வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் உரிய முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்... இதில், சொத்து மதிப்பை குறைத்து அல்லது மாற்றி குறிப்பிடும் நிகழ்வுகளில் பதிவுத்துறைக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
முக்கிய உத்தரவு: பதிவுத்துறையில் தணிக்கையின்போது, இந்த வருவாய் இழப்பு கண்டுபிடிக்கப்படுகிறது. எனவேதான், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறார்..
அந்த உத்தரவில், "தணிக்கை குறிப்புகள் வாயிலாக ஒரு பத்திரத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிந்தால், அதன் உரிமையாளரிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.. இதில் தணிக்கைக்கு முன்பு, அடுத்தடுத்த பதிவுகள் நடந்திருந்தால், அதன் தற்போதைய உரிமையாளர்கள், புதிதாக பதிவுக்கு வருவோரிடம், இழப்பு தொகையை விகிதாசார அடிப்படையில் பிரித்து வசூலிக்க வேண்டும்.
பதிவுத்துறை: இதில் இழப்பு ஏற்பட்ட பத்திரத்தின் சொத்து தொடர்பாக, யாராவது புதிதாக பதிவுக்கு வந்தாலும், அவரிடம் இருந்து இழப்பு தொகையை பிரித்து வசூலித்து, பதிவை தடுக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இந்த விஷயத்தில், சொத்து உரிமையாளரின் பரிமாற்றங்கள் பாதிக்கப்படக் கூடாது. அதே நேரத்தில், பதிவுத்துறைக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படாத வகையில் சார் -- பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் செயல்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications