சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சைலண்ட் டீல்".. திருமாகிட்ட ஸ்டாலின் "அதை" சொன்னாரா.. யாரோ தப்பா அட்வைஸ் பண்றாங்க: சுமந்த் சி.ராமன்

அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் சைலண்ட் சப்போர்ட் இல்லாமல், 2ம் தேதியே, விசிக மனிதசங்கிலியை அறிவித்திருப்பதற்கான வாய்ப்பு கிடையாது.. யாரோ திமுகவை தவறாக வழிநடத்துகிறார்கள்' என்று அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தன் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அக்டோபர் 2ம் தேதி சட்டம் ஒழுங்கு பிரச்னையால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், நவம்பர் 6ம் தேதி பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த பேரணிக்கு அனுமதி தராவிட்டால், காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக தமிழகத்தின் அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள்தான் இவை:

3 ஹீரோ.. 3 ஹீரோயின்.. பொன்னியின்செல்வனும், பாண்டியன் ஸ்டோர்ஸும்.. எப்டிய்யா இப்டிலாம் பீல் பண்றீங்க?3 ஹீரோ.. 3 ஹீரோயின்.. பொன்னியின்செல்வனும், பாண்டியன் ஸ்டோர்ஸும்.. எப்டிய்யா இப்டிலாம் பீல் பண்றீங்க?

பர்மிஷன்

பர்மிஷன்

ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல.. அதனால், அவர்களை நிரந்தரமாக பேரணியே போக முடியாது என்று அரசால் சொல்ல முடியாது.. அது அரசுக்கும் தெரியும்.. நவம்பர் 6 ம்தேதிக்கு, அதாவது கிட்டத்தட்ட ஒரு மாதம் தள்ளி அனுமதி தந்துள்ளார்கள்.. தற்போதுள்ள பதற்றமான சூழல்கள் அதற்குள் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையால் நீதிமன்றம் இந்த அனுமதியை தந்திருக்கலாம்.. இது வரவேற்கத்தக்க முடிவு.. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம்.. அதையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டுதான்,
இந்த முடிவை அறிவித்துள்ளனர்..

 தூண்டல்

தூண்டல்

ஒருபக்கம் மாநில அரசின் கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டு, மறுபக்கம் ஜனநயாக ரீதியான முறையில் பேரணிக்கு அனுமதியும் தரப்பட்டுள்ளது. முன்னதாக, ஆர்எஸ்எஸ் பேரணி நடக்கும் அதே தினத்தில் விசிகவும் பேரணியை அறிவித்தது.. அதற்காக, விசிகவை தூண்டிவிட்டு, இந்த பேரணியை திமுக தடுத்ததாக நினைக்கவில்லை.. ஆனால், திமுக நினைத்திருந்தால், இப்படி ஒரு சங்கடத்தை தடுத்திருக்கலாம்.. கூட்டணியில் உள்ள விசிகவையோ, கம்யூனிஸ்ட்களையோ அழைத்து, ஏற்கனவே பதற்றமாக சூழல் தமிழகத்தில் உள்ளதால், நீங்கள் உங்கள் பேரணியை இன்னொரு நாள் வைத்து கொள்ளுங்கள் என்று திமுக சொல்லியிருக்கலாம்.. ஆனால் திமுக சொல்லவில்லை..

 சைலண்ட் சப்போர்ட்

சைலண்ட் சப்போர்ட்

அதனால், திமுகவின் சைலண்ட் சப்போர்ட் இல்லாமல், விசிக மனிதசங்கிலியை அறிவித்திருப்பதற்கான வாய்ப்பு கிடையாது..
இப்போது அக்டோபர் 2-ல் நடக்க உள்ள பேரணி தடுக்கப்பட்டுள்ளதால், திமுகவுக்கு இது ஒரு சின்ன வெற்றியாக உள்ளது..
ஆனால், ஆர்எஸ்எஸ் பேரணியை எதுக்காக இவர்கள் தடுக்க வேண்டும் என்றுதான் எனக்கு புரியவில்லை.. 2 கட்சிகளின் பேரணிகள் ஒரே நாளில் முடியாதுதான்.. கண்டிப்பாக பிரச்சனைகள் வரும்.. காவல்துறையாலும் இவர்களை சமாளிக்க முடியாது. அதற்கு பதிலாக போலீஸ் என்ன செய்திருக்கலாம் என்றால், 2ம் தேதி பேரணிக்கு ஆர்எஸ்எஸ்தான் முதலில் அனுமதி கேட்டார்கள்.. அதற்கு பிறகுதான் தான் விசிக கேட்டது..

 முட்டுக்கட்டைகள்

முட்டுக்கட்டைகள்

எனவே, இதில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து வேறு, வேறு தேதியில் பேரணியை நடத்தி கொள்ளலாம் என்று போலீஸே அறிவுறுத்தியிருக்கலாம். ஏற்கனவே, சில வருடங்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் பேரணி தமிழகத்தில் நடந்துள்ளது.. ஆனால் அது பெரிய அளவில் பேசப்படவில்லை.. அதனால், இப்போது நிறைய முட்டுக்கட்டைகள், அழுத்தங்கள் இருப்பதால், இந்த பேரணியை எப்படியாவது வெற்றியாக்கும் கட்டாயம் ஆர்எஸ்எஸ்ஸுக்கு ஏற்பட்டுள்ளது..

 தப்பு அட்வைஸ்

தப்பு அட்வைஸ்

அதேசமயம், இந்த ஆர்எஸ்ஸின் இந்த பேரணியை தடுத்து நிறுத்த, வெறும் சட்டம் ஒழுங்கு மட்டுமே காரணம் கிடையாது.. சட்டம் ஒழுங்குதான் பிரச்சனை என்றால், உடனே வேறு வேறு தேதிகளை எப்போதோ ஒதுக்கி அவர்களுக்கு தந்திருக்கலாமே.. இதில் அரசியல் கணக்கும் உள்ளது.. யாரோ இவர்களுக்கு தப்பாக அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.. பிரச்சனை இல்லாமல் போக வேண்டிய சாதாரண ஒரு விஷயத்தை, திமுகவே பெரிதாக்கிவிட்டார்கள்" என்றார்.

English summary
Fantastic Move: Did the DMK Govt join hands with VCK to stop the RSS rally, explains Sumanth C. Raman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X