105% நிரம்பி வழிந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.. பெட்டியெல்லாம் நெரிசல்! ஹவுஸ்ஃபுல்லான வந்தே பாரத் ரயில்
சென்னை: நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டில் மார்ச் வரை இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் நிரம்பிய இடங்கள் 105.7 சதவீதமாக பதிவாகியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. தெற்கு ரயில்வேயில் மட்டும் சென்னை - கோயம்புத்தூர், சென்னை- மைசூரு, சென்னை - திருநெல்வேலி, சென்னை - விஜயவாடா, திருவனந்தபுரம் - காசர்கோடு ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சிறப்பு ரயில்கள்: இவைகளை தவிர, பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்படுகின்றன... கடந்த மார்ச் 12, 2024 அன்றைய தினம்கூட, 10 வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன.. இதற்குநடுவில், திருச்சி - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைக்கான முன்னேற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதைத்தவிர சாதாரண் வந்தேபாரத் தயாரிப்புகள் நடந்து வருகின்றன.

மொத்தத்தில், நவீன தொழில்நுட்பம், கூடுதல் வசதிகள் கொண்ட இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எந்நேரமும் ரிசர்வேஷன் ஃபுல் என்றே தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.
நிரம்பிய பெட்டிகள்: இப்படிப்பட்ட சூழலில் ரயில்வே அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்கள்.. அதன்படி, கடந்த வருடம் ஏப்ரல் முதல் நடப்பாண்டில் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் 97,71,705 கி.மீ. வரை இயக்கப்பட்டுள்ளன... இந்த வந்தே பாரத் ரயில்களில் எல்லாம் கூட்டம் நிரம்பி வழிந்ததாம்.. அதாவது, 105.7 சதவீதம் நிரம்பியிருந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, ஒரு வந்தே பாரத் ரயிலில் 100 இடங்கள் இருந்தால், 110 இடங்கள் வரை புக் ஆகிவிடுகிறதாம்.. இதை சரிக்கட்ட சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் கொண்டுவரப்பட்டால், அந்த ரயில்களிலும் ஹவுஸ்ஃபுல்லாகி விடுகிறதாம்.
நிறைந்த சேவை: இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "102-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் என மொத்தம் 18,423 ரயில் சேவைகள் வழங்கப்பட்டன... இதில், வந்தே பாரத் ரயில்களில் நிரம்பிய இடங்கள் ஒட்டுமொத்தமாக 105.7 சதவீதமாகும்..
அதிகபட்சமாக, கேரளாவில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் நிரம்பிய இடங்கள் 175.3 சதவீதமாக இருந்தது. அதேபோல, ஒட்டுமொத்த வந்தே பாரத் ரயில்களிலும், 61.7 சதவீதம் ஆண் பயணிகளும், 38.3 சதவீதம் பெண் பயணிகளும் பயணம் செய்திருக்கிறார்கள்.. குறிப்பாக, 26 வயது முதல் 45 வயது வரையுள்ள பயணிகள் அதிகளவில் பயணம் செய்திருக்கிறார்கள்" என்கிறார்கள்.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications