டபுள் ஹேப்பி.. திமுக "வழிக்கு" வந்த பாஜக.. நிறம் மாறுதோ.. இன்னொரு "ராஜதந்திர" காய் நகர்த்தல்.. செம்ம
மாற்று திறனாளிகள் நலனில் பாஜக முக்கிய திட்டங்களை கையில் எடுக்க போகிறதாம்
சென்னை: திமுகவின் யுக்தி இன்னொன்றையும், பாஜக கையில் எடுக்க போவதாக தெரிகிறது.. இதையடுத்து தமிழக பாஜகவின் தேர்தல் வியூகம் மளமளவென உயர்ந்து கொண்டே போகிறது.
வரும் எம்பி தேர்தலில் தமிழகத்தை குறி வைத்து, பாஜக மேலிடம் காய் நகர்த்தி வருகிறது.. 10 முதல் 15 தாமரைகளையாவது பெற்று டெல்லிக்கு அழைத்து சென்றுவிட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில், எத்தனையோ பிரிவினருக்கு திமுக அரசு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.. அந்தவகையில், மாற்றுத்திறனாளிகளுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

லிஸ்ட்கள்
மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்காக அரசு செய்து வரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று லிஸ்ட் போட்டு பேசியிருந்தார்.. அத்துடன் சிறப்பு திட்டங்களையும் அப்போது அறிவித்தார்.. "அனைவரையும் திறமையாளர்களாக மாற்ற வேண்டும் என்பதே இந்த அரசின் உறுதிப்பாடு.. ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் துன்பம் அடையக் கூடாது, ஒரே ஒருவருக்கு நன்மை பயக்கும் என்றாலும், அந்தச் செயலை நாம் உடனடியாக செய்தாக வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு" என்று பேசியிருந்தது பலரது கவனத்தையும் அன்று ஈர்த்தது..

கருணாநிதி
அதுமட்டுமல்ல, "மாற்றுத்திறனாளிகள் என்ற புதிய பெயரைக் கொடுத்து புதிய நம்பிக்கையை உருவாக்கியவர்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துறையை உருவாக்கினார். அந்தத் துறையை தன் பொறுப்பிலே வைத்தும் கொண்டார். அவர் வழியிலே இன்று நானும் அந்தத் துறையை என் பொறுப்பிலே வைத்துக் கொண்டிருக்கிறேன். சென்னை மெரீனா கடற்கரையில் கால்நனைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்து கொடுத்த ஏற்பாட்டை அனைவரும் அறிவீர்கள்...

ஈரமனசு
நமது ஈரமான மனதின் காரணமாக மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளின் உரிமை எனக் கருதி நாம் உருவாக்கிய பாதை தான் அந்த அன்புப் பாதை. அதில் சென்று கடலில் கால் வைத்தபோது, மாற்றுத்திறனாளிகளின் மனம் மகிழ்ச்சியால் திளைத்ததைப் பார்த்து நானும் திளைத்தேன்... மாற்றுத்திறனாளிகள் பணியிடத்துக்கு சென்று பணி செய்யாமல், வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்ற சூழலை நாம் உருவாக்க உள்ளோம். 4,39,315 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 த்தில் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதிய உயர்வு மூலம் 4.39 லட்சம் மாற்று திறனாளிகள் பயன்பெறுவார்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவாதம் தந்ததை பலரும் அப்போதே வரவேற்றனர்.

சக்ஷம்
இப்போது விஷயம் என்னவென்றால், இந்த ரூட்டைதான் பாஜக கையில் எடுத்துள்ளதாம்.. தன் கவனத்தை மாற்றுத்திறனாளிகளின் பக்கமும் திருப்பி உள்ளதாம்.. ஆர்எஸ்எஸ் பின்னணியில் இயங்கக்கூடியதுதான் "சக்ஷம்" என்ற அமைப்பு.. இது மாற்றுத்திறனாளிகள் அமைப்பாகும்.. இந்த அமைப்பில்தான், தன்னுடைய கூடுதல் கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளது.. இதற்கான முதல் முன்னெடுப்பையும் நாகர்கோவில் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கையில் எடுத்துவிட்டார்.

பொன்.ராதா
அதாவது, மத்திய அரசு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் குறைந்த வட்டியிலான தொழில் கடன், மத்திய அரசின் பங்களிப்போடு வழங்கப்படும் உதவிகள், முத்ரா லோன் போன்றவைகளை, மாற்றுத்திறனாளிகளுக்கு பெற்றுத்தருவதற்கு ஆர்எஸ்எஸ் சேவகர்கள் முன்னின்று செயலாற்ற வேண்டும் என்று மேலிட தலைமையில் இருந்தே உத்தரவு ஒன்று வந்திருக்கிறதாம்.. இதே சக்ஷம் அமைப்பில் இந்துத்துவா சிந்தனை உடையவர்களே மாற்றுத்திறனாளிகளே இருக்கிறார்களாம்.. எனவே, இவர்களின் மீதுதான் தனிப்பட்ட அக்கறையை பாஜக செலுத்த போகிறதாம்..

பொன்னார்
இப்படித்தான், சில தினங்களுக்கு முன்புகூட, தலித் வாக்குகளை அள்ளுவதற்கு தமிழக பாஜக ஒருயுக்தியை கையில் எடுத்திருந்தது.. மத்திய பாஜகவின் திட்டங்கள் அனைத்தும், தகுதி இருந்தும்கூட, தமிழக மக்களுக்கு முழுமையாக போய் சேரவில்லை என்ற குற்றச்சாட்டை, தமிழக பாஜக திமுக மீது முன்வைத்து வருகிறது.. எனவே, இத்தகைய திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதுடன், அதேசமயம், பட்டியலின சகோதர சகோதரிகளின் வீடுகளில் சாப்பிடுவது, பிறகு அவர்களையும் தங்கள் வீடுகளுக்கு அழைத்து வந்து வயிறார சாப்பிட வைப்பது என நிறைய பிளான்களை பாஜக கையில் எடுக்க போவதாக சொன்னார்கள்..

தாமரைகள்
காரணம், இதன்மூலம் அடித்தட்டு மக்களிடமும் கால் ஊன்ற முடியும், தலித் வாக்குகளையும் அலேக்காக அள்ள முடியும் என்றும் பாஜக நினைக்கிறதாம். இந்த வாக்குகள் தங்களுக்கு கிடைக்கிறதோ இல்லையோ, திருமாவளவனுக்கு போய்விடாமல் தடுப்பதற்காகவும் பல்வேறு காய்நகர்த்தல்களையும் பாஜக தொடர்ந்து செய்து வருகிறது.. இப்போது மாற்றுத்திறனாளிகள் விஷயத்திலும் திமுகவின் ரூட்டில் அடியெடுத்து வைத்துள்ளதாக தெரிகிறது.. திமுக மற்றும் பாஜகவின் இந்த செயல்வடிவம் மூலம், பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் இரட்டிப்பாக பலன்பெறுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.. அதேசமயம், இந்த யுக்திகள் எல்லாமே எம்பி தேர்தலில் "தாமரைகளை" உருவாக்க உபயோகமாக இருக்குமா? என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.. பார்ப்போம்...!!!

ஹேப்பி ஹேப்பி
இந்நிலையில், வரும் டிசம்பர் 14ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், சட்டமன்ற உறுப்பினரான 19 மாதங்களிலேயே அமைச்சரவையில் அங்கம் வகிக்கப்போகிறார் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்.. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1957ல் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.. ஆனால், 10 ஆண்டுகள் கழித்துதான், 1967ம் ஆண்டுதான் முதன்முறையாக பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.. அதேபோல் முதல்வர் ஸ்டாலினும் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று 17 வருடங்கள் கழித்துதான், 2006ல் தான் முதன்முறையாக அமைச்சரானார். ஆனால், உதயநிதியோ, ஸ்டாலினையும், கருணாநிதியையுமே இந்த விஷயத்தில் ஓவர்டேக் செய்து, ஜஸ்ட் 19 மாதங்களிலேயே அமைச்சராக உள்ளது, திமுக தொண்டர்களிடம் பெருத்த மகிழ்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications