வேற மாதிரி சர்ப்ரைஸ்.. சென்னை ஏர்போர்ட்டில் காகித ஆவணமே இனி வேணாம்.. முகத்தை காட்டியே சல்லுனு போலாம்
சென்னை: சென்னை, கோவை விமான நிலையங்களில், காகித ஆவணங்களுக்கு பதிலாக, முக அடையாளத்தை காட்டி, பயணம் செய்யும் புதிய நடைமுறை இனிமேல் விரைவில் அமலுக்கு வருகிறது. டிஜியாத்ரா என்ற திட்டத்தின் கீழ் இந்த முறை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஒவ்வொரு முறையும் விமான பயணம் மேற்கொள்பவர்கள், அனைத்து ஆவணங்களையும் ஏர்போர்ட்டுக்கு கொண்டு சென்று, அது தொடர்பான அனைத்து சோதனைகளையும் முடித்த பிறகே, ஃபிளைட்டில் ஏறவேண்டியிருக்கிறது.

பயணிகள்: இதனால், பயணிகள் விமானத்தில் ஏற பெரிதும் சிரமப்பட வேண்டி உள்ளது... இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காகவே, விமான பயண செயல்முறையை காகிதமற்றதாக்கும், டிஜியாத்ரா என்ற திட்டம் கடந்த 2022ல் ஆரம்பிக்கப்பட்டது..
அதாவது பயணிகள் ஏர்போர்ட்டில் நுழைந்து, செக்கின் செய்து, உள்ளே சென்று ஃபிளைட்டில் ஏறும்போதும், பொருட்களை சரி பார்க்கும்போதும் தங்களது முகத்தையும் காட்டினால் மட்டுமே போதும். இதற்குபாஸ்போர்ட், ஆதார், கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணம், பயணத்திற்கான டிக்கெட் போன்ற எந்த ஆவணங்களையும் அதிகாரிகளிடம் காட்ட வேண்டிய தேவையில்லை..
அவசியமில்லை: விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் நாளன்று, இவற்றில் எதையுமே கொண்டு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அதேபோல, பாஸ்போர்ட்டை மறந்து வைத்துவிட்டோமே என்ற பயமும் தேவையில்லை.
இந்த டிஜியாத்ரா என்ற முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட் திட்டத்தின் மூலம், பயணிகளுக்கு நேரம் மிச்சமாகிறது.. ஏற்கனவே கேரள மாநிலம் - திருவனந்தபுரம், கர்நாடகா - மங்களூரு, ஆந்திரா - விசாகப்பட்டினம் உட்பட 14 ஏர்போர்ட்களிலும் இந்த டிஜியாத்ரா வசதி உள்ளதால், விமானப் பயணிகளும் நேரடியாகவே இந்த திட்டத்தின்மூலம் பயன் அடைந்திருக்கிறார்கள். எனவே, அடுத்த மாதம் மேலும் 14 ஏர்போர்ட்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.
ஆனால், இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்குவதில், பல்வேறு அமைச்சகங்களில் நிறைய பணிகள் இருப்பதால், தனித்தனி ஒப்புதல் பெறுவதில் தாமதமாகி உள்ளதாம்.
மிகுந்த பயன்கள்: எப்படியும், சென்னை, கோவை ஏர்போர்ட்களுக்கு அடுத்த மாதமே இந்த திட்டம் கொண்டுவரப்படும் என்கிறார்கள்.. ஆனால், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், நடைமுறை சிக்கல்கள் தீருவதுடன், பயணிகளின் நேரமும் மிச்சமாகும் என்று நம்பப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications