Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 ரூபாய் தினமும் கட்டினாலே போதும்.. மாதம் ரூ.3000 பென்சன் வந்துரும்.. அசத்தலான மத்திய அரசு திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டிலுள்ள அடித்தட்டு மக்களுக்கு வயதான காலத்தில் ஓய்வூதியம் என்பதே இருப்பதில்லை.. இவர்களது நிதித்தேவையும் கேள்விக்குறிதான்.. எவ்விதமான பாதுகாப்பும் இல்லாத நிலையில், இவர்களுக்கு உதவுவதற்காகவே மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான், பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா திட்டமாகும்.

கோடிக்கணக்கான மக்கள் தினசரி கூலிகளாக வேலை பார்த்து வருகிறார்கள்.. அதேபோல, தொழிலாளர்கள், வகைப்படுத்தப்படாத துறையில் இருக்கும் ஊழியர்கள் போன்றோருக்கு வயதான காலத்தில் பாதுகாப்பு என்பதே இல்லாமல் இருக்கிறது.

இவர்களுக்கு உரிய பாதுகாப்பு தந்து,, நிதியுதவி பெற வேண்டும் என்பதற்காகவே, கொண்டுவரப்பட்டது பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன் தன் திட்டமாகும்.. (PM- SYM),

மத்திய அரசு: அமைப்புசாரா தொழிலாளர்களுக்காகவே பிரதமர் ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா (Pradhan Mantri Shram Yogi Man Dhan Yojana) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அமைப்புசாரா தொழிலாளர்களும் பென்சன் போன்ற பணி ஓய்வுக் கால பலன்களை பெறலாம்.

அதாவது மாத சம்பளம் அளிக்கப்படும் அதே பாதுகாப்பை, இந்த தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கொண்டுவரப்பட்ட திட்டம் இதுவாகும்.

பென்ஷன்: அதன்படி, பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் ஒருவருக்கு மாதம் 3000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 36000 ரூபாய் அளவிலான பென்ஷன் பெற முடியும். அதற்கு நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய தொகை எவ்வளவு தெரியுமா தினமும் 2 ரூபாய் அதாவது மாதம் வெறும் 60 ரூபாய் மட்டுமே.

இதன்மூலம், வீட்டு வேலை செய்பவர்கள், சாலையோர வியாபாரிகள், சுமை தூக்குபவர்கள், செங்கல் சூளைத்தொழிலாளர்கள், செருப்பு தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், சலவை தொழிலாளர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், சுய தொழில் செய்பவர்கள், குடிசை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், விவசாயிகள், கட்டுமான தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்கள் என கிட்டத்தட்ட 42 கோடி தொழிலாளர்கள் வகைப்படுத்தப்படாத துறையில் பணியாற்றி வரும் நிலையில், அத்தனை பேரும் இதன் பலனை பெற முடியும்.

சேமிப்பு: இந்த திட்டத்தில் சொந்தமாக யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு வெறும் 2 ரூபாய் சேமிப்பதன் மூலம், நீங்கள் ஆண்டுக்கு 36000 ரூபாய் ஓய்வூதியம் பெறலாம்.

இந்த திட்டத்தை தொடங்கும்போது, ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது, 18 வயதில் ஒரு நாளைக்கு சுமார் ரூ.2 சேமிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.36000 பென்ஷன் பெறலாம்.

டெபாசிட்: ஒருவர் 40 வயதிலிருந்து இந்தத் திட்டத்தை தொடங்கினால், அவர் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதன்படி 60 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் (Pension Scheme) பெறத்தொடங்குவீர்கள். 60 வருடங்கள் கழித்து மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.

60 வயதை எட்டியதுமே குறைந்தப்பட்சம் மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்... ஒருவேளை, இந்த திட்டத்தில் முதலீடு செய்வோர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால் அவரது மனைவிக்கு குறிப்பிட்ட ஓய்வூதிய தொகையில் 50 சதவீதம் அளிக்கப்படும்... இதே தகுதியான கணவன் மனைவி இருவரும் தகுதியானவர்களாக இருந்தால் 72,000 ரூபாய் பென்சனாக பெறலாம்.

விண்ணப்பங்கள்: இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி கணக்கை தொடங்கலாம். பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன் தன் திட்டத்தில், 18 முதல் 40 வயது வரையில் உள்ளவர்கள் முதலீடு செய்ய முடியும்..

அதேபோல, விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.15,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதார் அட்டை மற்றும் சேமிப்பு வங்கி கணக்கு அல்லது ஜன்தன் கணக்கு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் இருக்க வேண்டும். வயதான காலத்தில், நிதித்தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இந்த திட்டம் பேருதவி புரிந்து வருகிறது.

அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தில் இணையும்போதே, நாமினிக்களின் பெயரையும் பதிவு செய்யலாம்... இந்த திட்டத்தில் பதிவு செய்தபிறகு லேபர் யோகி கார்டு வழங்கப்படும். இதற்காக மத்திய தொழிலாளர் துறை சார்பில் பதிவு முகாம்களும் நடத்தப்படுகின்றன... பொது சேவை மையங்கள் வாயிலாகவே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+