11,500 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு - விவசாயிகளுக்கு நல்ல செய்தி
2021-22ஆம் நிதி ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக ரூபாய் 11,500 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 2021-22ஆம் நிதி ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக ரூபாய் 11,500 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டியில் ஜூலை 31ம் தேதி வரை 98 ஆயிரத்து 36 விவசாயிகளுக்கு 763 ரூபாய் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், 7,823 பட்டியலின பழங்குடியின விவசாயிகளுக்கு, ரூபாய் 53.30 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது விவசாயிகளுக்கான பயிர்கடன் குறித்த கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில், கூட்டுறவு சங்கங்கள், உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் 12 லட்சத்து, 37 ஆயிரத்து 448 விவசாயிகளுக்கு 9 ஆயிரத்து 504 கோடி பயிர்கடன் வழக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 330 பட்டியலின பழங்குடியின விவசாயிகளுக்கு 755 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், நடப்பு நிதியாண்டியில் ஜூலை 31ம் தேதி வரை 98 ஆயிரத்து 36 விவசாயிகளுக்கு 763 ரூபாய் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், 7,823 பட்டியலின பழங்குடியின விவசாயிகளுக்கு, ரூபாய் 53.30 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக ரூபாய் 11,500 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ. பெரியசாமி குற்றச்சாட்டு
சேலம், நாமக்கலில் மட்டும் ரூ.503 கோடி முறைகேடு நடத்திருப்பது தெரிய வந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் வழங்கியதில் ரூ.516 கோடி அளவில் முறைகேடு என பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டினார். சிட்டா அடங்கலில் குறிப்பிடப்பட்ட சபகுபடி நிலங்களின் பரப்பளவை அதிகரித்து காட்டி பலமடங்கு கூடுதல் கடன் பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.
-
எதிர்ப்புக்கு பணிந்தது விஜய் அரசு.. விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! -
நீங்க நல்லா இருக்கோனும்..பார்ட்டி ஃபண்டை கட் செய்த விஜய்! குஷியில் வீடுகட்டுவோர்..ராடாரில் ஆபீசர்ஸ் -
சட்டப்பேரவை கூட்டம்.. விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்! பெரிய பிளானுடன் இறங்கும் எதிர்க்கட்சிகள்! -
எகிறும் எதிர்பார்ப்பு! ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன்












Click it and Unblock the Notifications