தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவன் பலி விவகாரம்.. எரிக்க அழுத்தம் கொடுத்த பிரமுகர்கள்.. தந்தை கண்ணீர்
ஆரணி: ஆரணியில் நண்பர்களுடன் தந்தூரி சிக்கன் சாப்பிட்டு இறந்த மாணவனின் உடலை எரிக்குமாறு சில பிரமுகர்கள் அழுத்தம் கொடுத்ததாக மாணவனின் தந்தை கணேஷ் கண்ணீர் பேட்டி அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மோகனன் தெருவை சேர்ந்தவர் கணேஷ். இவர் ஆப்பிள் எனும் பள்ளியை நடத்தி வருகிறார். இவரது மகன்கள் திருமுருகன் (17) , கோகுல்.
திருமுருகன் என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவடைந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி நண்பர்களுடன் ஆரணி நகர் பகுதியில் காந்தி சாலையில் உள்ள 5 ஸ்டார் எலைட் என்ற அசைவ உணவகம் சென்ற திருமுருகன் தந்தூரி சிக்கன் மற்றும் பிரைடு ரைஸ் உள்ளிட்டவைகளை சாப்பிட்டுள்ளார்.

வயிற்று வலி
அவர் இரவு முழுவதும் வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக திருமுருகனின் பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் நன்றாகவில்லை. இதனால் வேலூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.

பிளஸ் 2 தேர்வு
இதுகுறித்து அவரது தந்தை கணேஷ் கூறுகையில் எனது மகன் பிளஸ் 2 தேர்வு முடிந்ததால் நண்பர்களுடன் ஹோட்டல், சினிமாவுக்கு செல்வதாக கூறினார். நானும் பணம் கொடுத்து அனுப்பிவைத்தேன். அவர்கள் அனைவரும் 5 ஸ்டார் எலைட் எனும் ஹோட்டலில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணவை சாப்பிட்டனர்.

தந்தூரி சிக்கன்
ஆனால் எனது மகன் மட்டுமே தந்தூரி சிக்கன் சாப்பிட்டார். அப்போது மகனுக்கு உடல் ஏதோ தொந்தரவு கொடுத்துள்ளது. இருந்தாலும் ஆரணியில் தியேட்டரில் சினிமா பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது இரவு வயிறு வலிப்பதாக கூறினார். உடல் சூட்டால் ஏற்பட்டிருக்கும் என கருதி அவருக்கு வெந்தயம் கொடுத்தோம்.

வயிறு வலி
மறுநாள் வயிறு வலி அதிகரித்தது. இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அப்போது வயிற்று வலி சரியாகவில்லை. வயிற்றுப்போக்கும் இருந்தது. இதனால் அங்குள்ள ஸ்கேன் சென்டருக்கு போய் ஸ்கேன் எடுத்து பார்த்தோம். அதில் அந்த ஸ்கேன் எடுக்கும் நபர்தான் வயிற்றில் உள்ள குடல் முழுவதும் அழுகிவிட்டது.

உணவு விஷமாக மாறியது
உணவு விஷமாக மாறியதால் குடல் முழுவதும் இன்பெக்ஷன் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை உடனடியாக வேலூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்றார். நாங்களும் காரை வைத்துக் கொண்டு எங்கள் மகனை வேலூர் அழைத்து சென்றோம். அப்போது வயிற்று வலி தாங்க முடியவில்லை என மகன் துடித்தான்.

அடுக்கம்பாறை மருத்துவமனை
இதனால் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்யவிடாமல் நாங்கள் வேறு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு பரிசோதித்த மருத்துவர்களும் எங்கள் மகன் இறந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டதாக கூறினார்.

புதைக்க முயற்சி
மேலும் வேறு எங்கும் அலைய வேண்டாம். உடலை அடக்கம் செய்ய தேவையான நடவடிக்கையை எடுங்கள் என்றார். இதையடுத்து வீட்டுக்கு கொண்டு வந்தோம். எனது மகனின் கைகளில் உள்ள நரம்புகளும் நகங்களும் நீல நிறத்தில் ஆகிவிட்டன. இதையடுத்து நாங்கள் எங்கள் மகனை எங்கள் நிலத்தில் புதைக்க முயற்சித்தோம்.

எரிக்க அழுத்தம்
ஆனால் சில பிரமுகர்கள் , நீங்கள் குழந்தையை புதைத்தால் அதிலிருந்து நச்சு காற்று வெளியேறி மற்றவர்களை பாதிக்கும். எனவே அவரின் உடலை எரித்து விடுங்கள் என தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். என் மனைவியும் நம் மகன்தான் போய்விட்டார். இன்னொரு குழந்தைக்கு இந்த நிலை வேண்டாம். எனவே எரித்துவிடலாம் என்றார். அதன் பேரில் எரித்தோம்.

சிசிடிவி காட்சிகள் அழிப்பு
காசுக்காக ஓட்டல் நிர்வாகம் இது போல் கெட்டு போன உணவை சமைத்து கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் என் மகன் இறந்தவுடன் கடையை மூடிவிட்டார்கள். பொதுவாக அமாவாசை நாள் அன்றைக்கு நன்றாக வியாபாரம் பார்ப்பவர்கள், திடீரென கடை விடுமுறை என நோட்டீஸ் ஒட்டியிருந்தனர். மேலும் அவர்கள் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் அழித்துவிட்டனர். மகனை இழந்த எனது கோரமான நிலை வேறு யாருக்கும் வரக் கூடாது. எனவே சம்பந்தப்பட்ட ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications