“தவெக மீதான பயத்தில் தான் கூட்டணியில் சேர்க்கிறார்கள்”.. சிடிஆர் நிர்மல்குமார் கொடுத்த விளக்கம்!
சென்னை: தவெக மீது உள்ள பயத்தில் எல்லோரையும் திமுக கூட்டணியில் சேர்க்கிறார்கள் என்று தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் விமர்சனம் செய்துள்ளார். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்த கேள்விக்கு நிர்மல் குமார் பதில் அளித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை இளைய மகள் எழில் கேத்ரின், அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், இமானுவேல் சேகரன் பேரன் சக்கரவர்த்தி, எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் நீண்ட நாட்கள் பணியாற்றிய அதிமுகவை சேர்ந்த பாபுஜி கௌதம், ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர் சினோரா பிஎஸ் அசோக் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

அதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகித்த 5 பேர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். மாவட்ட, மண்டல வாரியாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பாளர்கள் சட்டமன்ற வாரியாக தேர்தல் ஊழியர் கூட்டத்தை நடத்துவார்கள்.
234 தொகுதிகளிலும் ஒரே சீரான வாக்கு வங்கி எங்களுக்கு உள்ளது. எந்த தொகுதிகளிலும் குறைவாக, டல்லாக என்ற நிலை இல்லை. தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஒரே சீரான ஆதரவு 234 தொகுதி மக்களிடம் உள்ளது. கூட்டணியை எதிர்பார்த்தோ, கூட்டணி வந்தால் தான் வெற்றி பெறுவோமோ என்ற நிலையோ எங்களிடம் இல்லை.
கடந்த சில மாதங்களாக திமுக - காங்கிரஸ் இடையே பனிப்போர் நிலவுகிறது. காங்கிரஸ் திமுகவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். திமுகவினரிடம் சலசலப்பு உள்ளது. கோ தளபதி, ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்த சலசலப்பு இன்றும் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸை போட்டியிட வைத்து திமுக எப்படி தோற்கடித்ததோ அதே போல இந்த சட்டமன்றத் தேர்தலிலும் நிற்க வைத்து காங்கிரஸ் கட்சியை திமுக தோற்கடிக்கும்.
திமுக தலைமை காங்கிரஸ் கட்சியை பணிய வைக்க வேண்டும். மிரட்ட வேண்டும் என எண்ணி திமுக நிர்வாகிகளை வைத்து பேச வைக்கிறார்கள். 40 எம்எல்ஏக்களை வைத்திருந்தாலும் அரசியல் செய்ய திமுக விடாது. திருமாவளவனிடம் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? என யாருக்கும் தெரியாது. பல எம்எல்ஏக்கள் இருந்தும் திருமாவளவனால் அரசியல் செய்ய முடியவில்லை.
நேற்று உயர்நீதிமன்றம் அமைச்சர் மீது வழக்கு தொடர உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்னும் வழக்கு தொடரவே இல்லை. இதை திருமாவளவன் ஏன் கேள்வி கேட்கவில்லை? இது போல சாதாரண அரசியல் கூட செய்ய முடியாமல் எப்படி கட்சி நடத்த முடியும்? திமுக கூட்டணியில் இருந்தால் அரசியலில் தனித்தன்மையையும், மக்கள் மனதில் இருந்தும் அழித்துவிடுவார்கள்.
தேமுதிக, திமுகவின் பிரைவேட் லிமிடெட் கம்பெனி. விஜயகாந்த் கொள்கை முடிவுக்கு மாறாக எப்போது முடிவெடுத்தார்களோ அப்போதே கொள்கை மறந்த கம்பெனி என்றாகிவிட்டது. தேமுதிக 10 வருடத்திற்கு முன்பே ஒரு சதவீத வாக்கு என்ற நிலைக்கு வந்துவிட்டது.
இன்றும் எங்களுக்கு தபால் மூலமாக விருப்ப மனுக்கள் வந்து கொண்டுள்ளது. தொகுதி வாரியாக விருப்ப மனு கணக்கெடுத்த பின் எவ்வளவு மனுக்கள் வந்துள்ளது என்பதை வெளியே அறிவிப்போம். இவ்வளவு பெரிய மக்களின் ஆதரவு கொண்ட தலைவர் இந்தியாவில் யாரும் இல்லை. இப்படி இருக்கும்போது எல்லா இடங்களிலும் எங்களுக்கு அழுத்தம் வரத்தான் செய்யும். எங்கள் தலைவர் எல்லாவற்றையும் எதிர்கொண்டு செயல்படுவார்.
எடப்பாடி பழனிசாமி வள்ளுவருக்கு காவி நிறத்தில் பதிவு செய்தது குறித்து அவரது பக்கத்தை கையாள்பவர்களிடம் தான் கேட்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் வலைதளங்களை ஆந்திராவை சேர்ந்த நிறுவனம் தான் கையாள்கிறது. இதைப் பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணியில் யார் தலைமை என்று இதுவரை முடிவாகவில்லை. அவர்களுக்குள் பல முரண்கள் உள்ளது.
பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், பெருவாரியான தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறும். திங்கட்கிழமை வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது. அனுமதி கிடைத்தால் மக்கள் சந்திப்பு நடத்துவோம். அனுமதி தான் எங்களுக்கு பிரச்சனையாக உள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் மீதுள்ள பயத்தில் எல்லாரையும் திமுக கூட்டணியில் சேர்க்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தமிழக வெற்றிக் கழகத்தை பார்த்து திமுகவினர் பயப்படுகிறார்கள். இரண்டு வருடத்திற்கு முன் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறிய முதல்வர் அதைப் பற்றி இப்போது பேசுவதே இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
-
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை!












Click it and Unblock the Notifications