அசாத்திய தேசபக்தர்..அச்சமற்ற புரட்சியாளர், சமூக நீதி வீரர் சாவர்க்கர்.. ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர், அசாத்திய தேசபக்தர்கள் என்றும் அச்சமற்ற புரட்சியாளர் என்றும் சமூக நீதிக்கான வீரர் என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் செலுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளதாவது: சுதந்திர போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் அவர்களின் புண்ணிய திதியில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறோம். அசாத்திய தேசபக்தர், அச்சமற்ற புரட்சியாளர் மற்றும் ஆழ்ந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட அவர், மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை மற்றும் ரத்னகிரியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லொணா கொடுமைகள் மற்றும் சித்ரவதைகளை அனுபவித்தார். ஒரு சிறந்த தேசியவாதியாக, பிரிட்டிஷ் ஆளுகை எதிர்ப்புணர்வுத் தீயை மூட்டி எண்ணற்ற சுதந்திரப் போராளிகளை ஊக்கப்படுத்தினார். சமூக நீதியின் சிறந்த வீரராக அவர் ஜாதிய பாகுபாட்டுக்கு எதிராக அயராது போராடி, ஏராளமான சமூக சீர்திருத்தங்களுக்கு முன்னோடியாக விளங்கினார். போற்றுதலுக்குரிய பாரம்பரியத்தில் ஊறிப்போன நம்பிக்கை, பெருமை மற்றும் முற்போக்கான பாரதத்தை ஊக்குவிக்கும் வகையில் அவரது நீடித்த மரபு வழிகாட்டும் சக்தியாக தொடர்ந்து நீடிக்கும். இவ்வாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
வீரத்திற்கும், தியாகத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர், அமரர் சாவர்க்கர் நினைவு தினமான இன்று,
தமிழ்நாடு பாஜக சார்பாக அஞ்சலி செலுத்திக் கொள்கிறோம். தாய்நாட்டின் விடுதலைக்காகவும் வளர்ச்சிக்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அவரது தியாகத்தினைப் போற்றி வணங்குகிறோம்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா
விடுதலை போராட்ட வீரரும், எண்ணற்ற பாரதப் புரட்சியாளர்களின் வழிகாட்டியும், ஹிந்துத்வாவின் பிதாமகருமான வீர சாவர்க்கர் அவர்களின் நினைவு தினத்தில் "வந்தால் உங்களோடு வராவிட்டால் நீங்கள் இல்லாமல் எதிர்த்தால் உங்களையும் மீறி" என தேசத்திற்காக மட்டுமே வாழ்ந்து மறைந்த பரிபூரண தேசபக்தரான அவரின் மகத்தான சேவைகளையும், தியாகங்களையும் அவரது நினைவு தினத்தில் போற்றி வணங்குவோம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications