பெண் காவலர்கள் பற்றி அவதூறு.. சவுக்கு சங்கரின் வீடியோ வெளியிட்ட யூடியூப் நிறுவனம் மன்னிப்பு கேட்டது
சென்னை: பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் நிறுவனத்தின் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் சவுக்கு சங்கரின் வீடியோவை ஒளிபரப்பியது தொடர்பாக அவரது யூடியூப் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறு வகையில் கருத்து தெரிவித்தார். இதுதொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்த சவுக்கு சங்கரை கடந்த 4ம் தேதி தேனியில் கைது செய்தனர். தற்போது சவுக்கு சங்கர் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்துள்ளது.

இதற்கிடையே தான் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் பற்றி அவதூறு பரப்பும் வகையில் கருத்தை கூறியுள் அதனை ஒளிபரப்பு செய்ததாக ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்பவர் நடத்தி வரும் யூடியூப் நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஃபெலிக்ஸ் ஜெரால்டுவின் மனைவி எதிர்ப்பு தெரிவித்தார். போலீசாரிடம், ‛‛நீங்கள் ஏதாவது ஒன்றை வீட்டில் வைத்துவிட்டு சென்றுவிட்டால் என்ன செய்வது?'' எனக்கேள்வி கேட்டு எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் போலீசார் நீதிமன்ற உத்தரவை காட்டி சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தான் இன்று ஃபெலிக்ஸ் ஜெரால்டு நடத்தி வரும் யூடியூப் சேனல் சார்பில் பெண் காவலர்கள் பற்றி சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை வெளியிட்டதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி அன்று Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் நமது 'ரெட் பிக்ஸ்' ஊடகத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார்.
அந்த நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர ரெட் பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல. பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் மிக உயர்வாக ரெட் பிக்ஸ் ஊடகம் கருதுகிறது. சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக ரெட் பிக்ஸ் ஊடகம் மனம்திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. சர்ச்சைக்குரிய அந்த காணொளி, வழக்கு நிலுவையில் உள்ளதாலும், காவல்துறை விசாரணைக்கு தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் பிரைவேட் செய்யப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் ஃபெலிக்ஸ் ஜெரால்டுவின் மனைவியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிறையில் உள்ள தனது கணவர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை வக்கீல்கள் சந்தித்தனர். அப்போது அவர் சவுக்கு சங்கரின் வீடியோ வெளியிட்டது டர்பாக மன்னிப்பு கேட்கும்படி கூறி மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பெண் காவலர்கள் பற்றி சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை வெளியிட்டதற்காக ஃபெலிக்ஸ் ஜெரால்டு சார்பில் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications