துரை வைகோ- மல்லை சத்யா மோதல்.. உண்மையில் என்ன காரணம்? உடைத்து பேசிய துணை பொது செயலாளர் ரோஹையா
சென்னை: மதிமுகவில் மல்லை சத்யா மற்றும் துரை வைகோ இடையே மோதல் ஏற்பட்டது. அதை இன்று நிர்வாகக் குழு கூட்டி மதிமுக தலைவர் வைகோ சமாதானம் செய்து வைத்தார். இதற்கிடையே இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மதிமுக துணை பொதுச் செயலாளர் ரோஹையா சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ. இவர் மதிமுகவின் முதன்மைச் செயலாளராக இருக்கிறார். இவருக்கும் மதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான மல்லை சத்யா இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மதிமுகவின் முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாகத் துரை வைகோ அறிவித்தார்.

இது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று அக்கட்சியின் நிர்வாகக் குழுவை வைகோ கூட்டினார். இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைத்தார். இதையடுத்து துரை வைகோ தனது ராஜினாமா முடிவைத் திரும்பப் பெற்றார்.
ரோஹையா பேட்டி
இதற்கிடையே இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக துணை பொதுச் செயலாளர் ரோஹையா, "மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த முடிவைத் துரை வைகோ வாபஸ் பெற்றார். மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்கும் இடையே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சமாதான பேச்சு நடத்திய நிலையில் துரை வைகோ ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார்.
இருவருக்கும் இடையே பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. நீங்கள் நினைப்பது போல எல்லாம் எதுவும் இல்லை. வெறும் 0.001% தான் பிரச்சினை. கட்சியில் இருந்து விலகிய சிலர் மல்லை சத்யா பெயரைச் சொல்லி சில கருத்துகளைப் பதிவிட்டனர். அதற்கு விளக்கம் தேவை. விளக்கம் கொடுத்தால் மட்டுமே தொடர்ந்து பணியாற்ற முடியும் எனச் சொல்லி துரை வைகோ ராஜினாமா செய்தார்.
மோதல் ஓவர்
இதனால் தலைவர் வைகோ உடனடியாக மாவட்ட செயலாளர்கள் உட்பட நிர்வாகிகளை அழைத்து நிர்வாகக் குழுவைக் கூட்டினார். என்ன பிரச்சினை என்பதைக் கேட்டறிந்தார். துரை வைகோ இந்தச் சமூக வலைத்தளப் பதிவுகள் குறித்துக் குறிப்பிட்டார். அதற்கு மல்லை சத்யா விளக்கமளித்தார். தான் யாரையும் எதுவும் பதிவிடச் சொல்லவில்லை என்றும் தனது பெயரைச் சொல்லி சிலர் இதுபோல பதிவிடுவதாகவும் விளக்கமளித்தார். மேலும், அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் இனிமேல் தவறான புரிதல் வருவது போல நடந்து கொள்ள மாட்டேன் என சத்யா சொன்ன பிறகு, துரை வைகோ அதை ஏற்றுக் கொண்டார்.
பிரியாணி சாப்பிடுகிறார்கள்
அதன் பிறகு இருவரும் கை கொடுத்து சமாதானம் ஆகிவிட்டனர். இப்போது இருவரும் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இனிமேல் இதுபோன்ற பிரச்சினை எதுவும் ஏற்படாது. இருவரும் பேசாமல் இருந்ததே பிரச்சினைக்குக் காரணமாக இருந்தது. இதன் காரணமாகவே வைகோ இருவரையும் அழைத்துப் பேசினார். இருவரிடமும் என்ன பிரச்சினை என்பது குறித்துக் கேட்டறிந்தார். இப்போது இருவரும் சமாதானம் அடைந்துவிட்டனர். தவறான புரிதலே இந்த விவகாரத்திற்குக் காரணமாக இருந்தது.
சேனாதிபதியாக தொடர்வார்
வைகோவின் சேனாதிபதியாக இருப்பேன் என்ற மல்லை சத்யா.. கூட்டம் முடிந்த பிறகு வைகோ போலவே துரை வைகோவுக்கும் சேனாதிபதியாக இருப்பேன் என கூறியிருக்கிறார். கட்சியின் தலைமை அடுத்து அவர்தான் என்ற போது இதில் தவறு ஒன்றும் இல்லை. துரை வைகோ ஒரு வழக்கமான அரசியல்வாதி இல்லை.. அவர் சிறந்த மனிதர். தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர் அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளக் கேள்வி கேட்பார். அதற்கு விளக்கம் தர வேண்டும். நியாயமான விளக்கம் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வார். இப்போதும் அதுதான் நடந்தது.
மல்லை சத்யா அளித்த விளக்கம் திருப்திகரமாக இருந்ததால் தனது ராஜினாமா முடிவைத் துரை வைகோ வாபஸ் பெற்றுக் கொண்டார். கட்சித் தலைவர் வைகோ வலிமையான தலைவராகத் தொடர்கிறார். இதனால் கட்சியும் வலிமையாகவே தொடரும்" என்றார்.
-
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications