சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மதங்களைப் பற்றி மட்டும் படம் எடுக்க வேண்டாம்.." கனல் கண்ணன் பரபர! அதற்கு அவர் சொன்ன காரணம் தெரியுமா

Google Oneindia Tamil News

சென்னை: திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான கனல் கண்ணன், அங்கு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்,

கல்வி எழுத்தில் 11950களில் வெளியான பொன்னியின் செல்வன் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற ஒன்று. இது சோழர்கள் பற்றிய புனைவு கதையாகும்.

பெரும் முயற்சிக்குப் பின், இயக்குநர் மணிரத்தினம் பொன்னியின் செல்வனை இரு பாகங்களாக எடுத்து உள்ளார். சமீபத்தில் வெளியான முதல் பாகம் மிகப் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

 இதை கவனிச்சீங்களா.. முதல்வர் மனம் வெதும்பி இருக்காரு.! காரணத்தைச் சொல்லும் செல்லூர் ராஜூ இதை கவனிச்சீங்களா.. முதல்வர் மனம் வெதும்பி இருக்காரு.! காரணத்தைச் சொல்லும் செல்லூர் ராஜூ

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி எனப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரையரங்குகளில் வசூலை வாரிக் குவித்து வருகிறது. படத்தின் வசூல் 300 கோடியைத் தாண்டிவிட்டதாகத் தயாரிப்பு நிறுவனமே கூறி உள்ளது. இதற்கிடையே தியைரங்குகளை தாண்டியும் இத்திரைப்படம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பொன்னியின் செல்வன் எனப்படும் ராஜராஜன் குறித்தும் சோழர்கள் குறித்தும் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கனல் கண்ணன்

கனல் கண்ணன்

இந்தச் சூழலில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான கனல் கண்ணன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், "தயாரிப்பாளர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். தயாரிப்பாளர் ஒரு படத்தை எடுத்தால் அதன் மூலம் பலர் பிழைப்பார்கள். படம் எடுக்க வேண்டாம் எனச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. எந்தவொரு படத்தையும் திறமையாக எடுத்தால் வெற்றி பெறலாம்

படம் எடுக்கவேண்டும்

படம் எடுக்கவேண்டும்

தொடர்ந்து பலரும் படம் பண்ணுவதால் தான் பல்வேறு கலைஞர் இன்னும் பிஸியாக உள்ளனர். எனவே யாரைப் பார்த்து படம் எடுக்க வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தயாரிப்பாளர்கள் படங்களை எடுக்க வேண்டாம் என்று சமீபத்தில் தயாரிப்பாளர் ஒருவர் கூறுகிறார். அந்த மேடையிலேயே சினிமாவின் முக்கிய சங்கத்தின் தலைவரும் இருக்கிறார். அவர் இது தொடர்பாக எதுவும் சொல்லவில்லை. இது தான் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது.

ஜெயிக்க வேண்டும்

ஜெயிக்க வேண்டும்

அனைத்து தயாரிப்பாளர்களும் படத்தைத் தயாரிக்க வேண்டும்.. அனைவரும் ஜெயிக்க வேண்டும்.. நமது தமிழ் சினிமா இன்னும் பெரிதாக உருவாக வேண்டும். நான் இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும் பணியாற்றியுள்ளேன். இப்போதும் பணியாற்றி வருகிறேன். பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் தொடங்கி சிறிய பட்ஜெட் படங்கள் வரை பணியாற்றி வருகிறேன். தயாரிப்பாளர் ஒரு படம் எடுத்தால் அதன் மூலம் பலர் பயனடைவார்கள்.

மதங்கள்

மதங்கள்

மதங்களைப் பேசுவது என்பதை இப்போது ஸ்டைல் ஆகிவிட்டது. நான் இப்போது மதங்களைப் பற்றி எதுவும் பேசப் போவதில்லை. அப்படிப் பேசுவது தவறு என்று நான் சொல்ல வருகிறேன். சினிமாவுக்கு மதம் தேவையில்லாத ஒன்று. யாருமே தப்பா மதங்களை பத்து படம் எடுக்க வேண்டாம்.. ஏனென்றால் மதங்களைப் பற்றி தவறாகப் படம் எடுத்தால், அதனால் பாதிக்கப்பட்ட ஒருவன் ஆங்காங்கே வளர்ந்து கொண்டே இருப்பார்கள்.. எனவே மதங்களைப் பற்றி படம் எடுக்கக் கூடாது என்பதே எனது வேண்டுகோள்" என்றார்.

English summary
Stunt master Kanal Kannan says Cinema doesn't need religion: Kanal Kannan latest press meet about religion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X